Thursday, March 28, 2024
Homeநட்சத்திர ரகசியங்கள்கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள் மற்றும் தொழில் வணங்க வேண்டிய தெய்வம் செய்ய வேண்டிய...

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள் மற்றும் தொழில் வணங்க வேண்டிய தெய்வம் செய்ய வேண்டிய பரிகாரம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

கிருத்திகை நட்சத்திரம்

கிருத்திகை நட்சத்திரம் பொதுவான குணங்கள்

இது 3-வது நட்சத்திரம். ஆறுமுகம் உள்ளது. கிருத்திகை என்னும் பெயரும் உண்டு. நாடகம், ஏலச்சீட்டு தொடர்பு உண்டு. ரயில் தண்டவாள பாதையில் இடர் உண்டாகும். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனும்பாதை மற்றும் முகமதியராய் மதமாறும் வாய்ப்பு உண்டு. நிலக்கரி தொழில் தொடர்பு உள்ளது. திருமண விஷயங்களில் சுய முடிவு எடுப்பர். கல்லூரி முதல்வர் போன்றவர்.இது பூரண நட்சத்திரம் அல்ல. பேச்சாற்றல் உள்ளவர். ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உணர்ச்சி வையப்படுவர். சுக்கிரனுக்கும், சூரியனுக்கும் தொடர்புள்ள நட்சத்திரம். மூன்று வீடுகள் உள்ளவர். புத்திர லாபம் குறைவு. பர்மா, நாகலாந்தை குறிக்கும்.

நேர்மையுடயவர்கள்.தெய்வபக்திகொண்டவர்கள்.ரொம்ப சுத்தமாக திகழ கூடியவர்கள்.சாமர்த்தசலியாக திகழ கூடியவர்கள்.விருந்தோம்பல் பண்பு இவர்களிடம் இருக்கும்.தர்ம சிந்தனையும் இரக்க குணமும் கொண்டவர்கள். அழகவும் ,கவர்ச்சிகரமாகவும் இருக்க கூடியவர்கள்.கொஞ்சம் முன் கோபம் மற்றும் பிடிவாத குணம் கொண்டவர்கள்.

கிருத்திகை நட்சத்திர பற்றிய தகவல்கள்

நட்சத்திரத்தின் ராசி: மேஷம் ,ரிஷபம்

நட்சத்திர அதிபதி : சூரியன்.

ராசியின் அதிபதி : செவ்வாய் ,சுக்கிரன்

நட்சத்திர நாம எழுத்துக்கள் :அ -இ -உ -எ

கணம் :ராட்சஸ கணம்

மிருகம் : பெண் ஆடு

பக்ஷி :மயில்

மரம் :அத்தி (பா )

நாடி : வாம பார்சுவடி

ரஜ்ஜு :ஏறு வயிறு

வணங்க வேண்டிய தெய்வம் : அக்னி

கிருத்திகை நட்சத்திரம்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குடும்ப வாழ்க்கை

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் என்பது பிடிக்காத ஒரு விஷயமாகும். திருமண வாழ்கையிலேயே கராராக நடந்து கொள்வார்கள். மனைவி பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பல கனவுகளுடன் பிள்ளைகளை வளர்ப்பார்கள். அதீதமான தெய்வ பக்தியும் உண்டு. தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள் உணவு வகைகளை ரசித்தும் ருசித்தும் உண்பார்கள்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தொழில்

 கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை வழி நடத்தி செல்வதில் வல்லவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் சிறந்த வழிக்கறிஞர்களாகவும், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாளும் பணியாற்றும் திறன் கொண்டவர்கள். மருத்துவ துறையிலும் சமூக சேவையிலும், நாட்டுக்காவும் பாடுபடுவதில் அக்கரை கொண்டவர்களாகளும் இருப்பார்கள் முழு சுதந்திரம் உள்ள இடத்தில் மட்டுமே பணி புரியும் ஆர்வம் இருக்-கும். மற்றவர்களின் கட்டளைக்கு கீழ் படியக்கூடிய வேலையாக இருந்தால் அதனால் எவ்வளவு லாபம் வந்தாலும் ஒரு நிமிடத்தில் உதறி விடுவார்கள். உணவு, மற்றும் கெமிக்கல் போன்ற பேற்றிலும் ஈடுபடுவார்கள் கராத்தே, குங்-ஃபூ போன்ற தற்காப்பு கலைகளிலும் சாரணர் இயக்கத்திலும் பங்கேற்கும் ஆர்வம் கொண்டவர்கள். நாளைக்கு செய்வோம் என்று எதையும் தள்ளி போடாமல் அந்தந்த காரியத்தை அவ்வப்போது செய்து முடிப்பார்கள்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வரும் நோய்கள்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முன் கோபம் அதிகமிருப்பதால் ரத்த அழுத்த சம்மந்தப்பட்ட நோய்கள் தாக்கும். இதய நோய், ஒற்றை தலைவலி உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்கள், கண்களில் கோளாறு காதுவலி போன்றவை உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.

கிருத்திகை நட்சத்திரம்

மகா திசைப் பலன்கள்

 கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும். சூரிய திசை மொத்தம் 6 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள திசை காலங்களை அறியலாம். சூரிய திசை காலங்களில் பல வகையில் குடும்பத்திற்கு முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் குழந்தைக்கு உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும், குழந்தையின் தந்தைக்கு பல இன்னல்களும் உண்டாகும். சூரியன் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் பாதிப்புகள் குறையும்.

2-வது திசையாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். சந்திரன் சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பதால் சற்று முன் கோபம், முரட்டுதனம், தந்தை தாயுடன் கருத்து வேறு ஜல தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் சுபர் பார்வை சேர்க்கையுடன் சந்திரனிருந்தால் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

3-வது திசையாக வரும் செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் ஏற்ற இறக்கமான பலன்களும் உண்டாகும் என்றாலும் ஜாதகருக்கு முன் கோபம் சற்று அதிகமாக இருக்கும்.

ராகு திசை 18 வருடங்கள் 4&வது திசையாக நடைபெறுவதால் நல்ல யோகத்தையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும்.

5-வதாக வரும் குரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும்.

6-வதாக வரும் சனி திசையும் நல்ல முன்னேற்றத்தை  கொடுக்கும் மேற்கூறிய திசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று கேந்திர திரி கோணங்களில் அமைந்திருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். இல்லையெனில் வாழ்வில் எதிலும் எதிர் நீச்சம்  போட வேண்டிவரும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கோவில்

திண்டிவனம் அருகிலுள்ள மயிலம் முருகனை வியாக்கிழமைகளில் வணங்குவது நல்லது. பொதுவாகவே முருகன் குடிகொண்டிருக்கும் எல்லா ஸ்தலங்களையும் வழிபடலாம்.

கூற வேண்டிய மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹா ஸேனாய தீமஹி

தந்றோ ஷண்முக ப்ரசோதயாத்

கிருத்திகை நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

புனர்பூசம், உத்திரம் விசாகம், உத்திராடம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதம்

பூமி, வீடு மற்றும் கால்நடை போன்ற செல்வதை உடையவர்கள்.நல்ல அறிவுடயவர்கள்.திறமைகளுடன் இருப்பார்கள்.எதிரிகளை தந்திரத்தால் வெற்றி கொள்ள கூடியவர்கள்.உடல் பலவீனம் உடையவர்கள்.புகழை விரும்புவார்கள்.

கிருத்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதம்

அதிக பாசத்துடன் இருப்பார்கள்.போராட்ட குணம் உடையவர்கள்.வீரம் மிக்கவர்கள்,தற்பெருமை கொண்டவர்கள்.கலைகலை பயிலுவார்கள்.சோம்பேறி தனமும் மந்த தன்மையும் உடையவர்கள்

கிருத்திகை நட்சத்திரம்

கிருத்திகை நட்சத்திரம் மூன்றாம் பாதம்

நல்ல உழைப்பளியாகவும்,கல்வியில் அதிக பற்றுதல் இருக்காது.கயவர்களின் சகவாசம் உடையவர்கள்.விடா முயற்சி ,கோபம் ,பொறாமை ,பழிவாங்கும் இயல்பு போன்றவை இருக்கும்.

கிருத்திகை நட்சத்திரம் நான்காம் பாதம்

மன உறுதி கொண்டவராக இருப்பார்கள்.நீதி நேர்மை  கொண்டவராக இருப்பார்கள்.பெண் போகத்தில் விருப்பம் உடையவர்கள்.ஆடம்பர வாழ்க்கை வேண்டும் என்ற ஆசை உடையவராக இருப்பார்கள் .

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular