Thursday, March 28, 2024
Homeநட்சத்திர ரகசியங்கள்ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள் மற்றும் தொழில் வணங்க வேண்டிய தெய்வம் செய்ய வேண்டிய...

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள் மற்றும் தொழில் வணங்க வேண்டிய தெய்வம் செய்ய வேண்டிய பரிகாரம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ரோகிணி நட்சத்திரம்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

சந்திரன்,சுக்கிரன் தொடர்புள்ள நட்சத்திரம். உரோகிணி என்னும் பெயர் உண்டு. நீண்ட ஆயுள் உள்ளவர். உட்புற விளையாட்டுகளால் லாபம் உண்டு. இவர்கள் காசிக்கயிறு அணிவதால் இடருறுவர்.வேடிக்கையாக பேசுவதால் இடருறுவர். கோவிலுக்கு வசூல் செய்வதால்இடருறுவர், நெடுஞ்சாலை, குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை தொடர்பு உண்டு. குளிர்ந்த மனமுள்ளவர்.

சமத்துவமாய் பழகுவதால் இருபாலர் வெறுப்புக்கு ஆளாவார். பிறருக்கு நல்லுபதேசம் செய்வார். ஜப்பான், ஹாங்காங் தொடர்பை உண்டாக்கும். பணமுடை உண்டு.கூட்டுறவு ,பண்டகசாலை முதல்வராவார்.

கடல் தாண்டும் யோகம் உண்டு. தாயாரை பெயரை சொல்லி அழைப்பதும், மனைவி/ கணவரை திட்டும் சுபாவமும் உண்டு.

முதுநிலை வணிக மேலாண்மை படிப்பு அமையும். பொறியியல் கல்வி அமையும். சுயம்வரத் திருமணம். பாம்பு அமைப்பு உள்ளது. பகவான்கிருஷ்ணர் நட்சத்திரம். கடை வீதியில் வீடு அமையும். கலெக்டர் அலுவலக தொடர்பு உண்டாகும்.

நல்ல அழகிய உடல் அமைப்பும் புத்திசாலியாகவும் இருப்பார்கள்.மிகுந்த சாமர்த்தியசாலியாகவும்  திகழ்வீர்கள்.தண்ணீர் சார்ந்த துறைகளால் லாபம் எய்துபவர்கள்.எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை உடையவர்கள்.விவசாயம் மூலம் வருமானம் கிடைக்கும்.சௌபாக்கியத்துடன் வாழ கூடியவர்கள்.நேர்மையான மற்றும் பிடிவாத குணமும் கொண்டவர்கள்.மற்றவர்களை சார்ந்து வாழ கூடியவர்கள்.

ரோகினி நட்சத்திரம் பற்றிய தகவல்கள்

நட்சத்திரத்தின் ராசி : ரிஷபம்

நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் 

ராசி அதிபதி : சுக்கிரன்

நட்சத்திர நாம எழுத்துக்கள் :ஓ-வ-வி-வு

கணம் :மனுஷ கணம்

மிருகம் : ஆண் நாகம்

பட்சி :ஆந்தை

மரம் :நாவல்

நாடி :வாம பார்சுவ நாடி

ரஜ்ஜு :ஏறு கழுத்து

ரோகிணி நட்சத்திரம்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தொழில்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாக திறமை இல்லாதவராக இருந்தாலும் பெரிய தொழிலதிபர்களாக இருப்பார்கள். முதலாளியாக இருந்தாலும் சிறிதும் கர்வம் கொள்ளாமல் தொழிலாளர்களையும் தங்களுக்கு சமமாக நடத்துவார்கள். கவிதை கட்டுரை, கதை,நாடகம் ஆகியவற்றை எழுதுபவர்களாகவும், திரை துறையில் பெரிய கலைஞர்களாகவும் இருப்பார்கள். உணவு விடுதி, ரெஸ்டாரண்ட், லாட்ஜ் ஒனர்களாகவும், பால் பண்ணை மற்றும் கரும்பு சார்ந்த துறைகளில் வல்லுனர்களாகவும் இருப்பார்கள். விற்பனை செய்தல் போன்ற துறைகளிலும் இவர்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. சமையல் கலை நிபுனர்களாகவும் இருப்பார்கள். இரும்பு வியாபாரமும் செய்வார்கள்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குடும்ப வாழ்க்கை

இந்த நட்சத்திர காரர்களுக்கு விட்டு கொடுக்கும் குணம் உண்டு என்பதால் குடும்பத்தில் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும். சண்டையே வந்தாலும் இனிமையாக பேசி சமாளித்து விடுவீர்கள். செல்வம் செல்வாக்கு நிறைந்திருக்கும். எப்பொழுதும் கூட்டத்திலேயே இருக்க விரும்புவதால் சமுதாயத்திலும் நல்ல மதிப்பிருக்கும். இவர்களுடைய பேரும் புகழும் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மையளிப்பதாக இருக்கும். எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். நினைத்ததை நினைத்தப்படி அடையும் ஆற்றல் உண்டு. காதலிலும் விடாபடியாக கடைசி வரை நின்று திருமணம் செய்வார்கள். பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள். சுகபோக வாழ்க்கையை விரும்பும் இவர்களுக்கு சோம்பேறி தனமும் உடன்பிறந்ததாகும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வரும் நோய்கள்

ரோகிணியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் உச்ச ராசியான ரிஷபராசி என்பதால் அடிக்கடி ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். முகப்பரு, கண், மூக்கு, தொண்டைகளில் பிரச்சினை, மூட்டு வலி போன்றவற்றால் பாதிக்கபடுவார்கள்.

மகா திசைப் பலன்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசை சந்திர திசையாகவரும். சந்திர திசை மொத்தம் 10 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கொண்டு மீதமுள்ள வருடங்களை கணக்கிட்டு கொள்ளலாம். சந்திர திசை காலங்களில் பிறப்பதால் உடல் நிலையில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும்.

இரண்டாவது திசையாக வரக்கூடிய செவ்வாய் திசையில் மொத்த காலங்கள் ஏழு வருடங்களாலும் இத்திசை காலங்களில் கல்வியில் மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சற்று முன் கோபமும் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும்.

மூன்றாவது திசையாக வரும் ராகு திசை காலங்களில் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும். கல்வியில் தடை, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய அமைப்பு கொடுக்கும். தேவையற்ற நட்புகளாலும் வீண் பிரச்சனைகள் ஏற்படும். முன் கோபமும் பிடிவாத குணமும் இருக்கும்.

நான்காவது திசையாக வரும் குரு திசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் வாழ்வில் பல சாதனைகள் செய்யும் அமைப்பு, சமுதாயத்தில் பெயர் புகழ் உயர கூடிய வாய்ப்பு, ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவு செய்யும் அமைப்பு, பொருளாதார மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

ஐந்தாவதாக வரும் சனி திசை பத்தொன்பது வருட காலங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் பல சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் பெயரும் புகழும் உயரும். செல்வம் செல்வாக்கு பெருகும்.

ஆறாவதாக வரும் புதன் திசை மாரகதிசை என்றாலும் புதன் பலம் பெற்று சுப கிரகங்களின் பார்வையுடனிருந்தால் நற்பலனை அடைய முடியும். மேற்கூறிய திசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர திரி கோணங்களில் சுபர் பார்வையுடன் அமைந்தோ இருந்தால் நற்பலனை அடையலாம். இல்லையெனில் சில சங்கடங்களை வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்த நட்சத்திரத்தை டிசம்பர் மாதத்தில் இரவு பன்னிரண்டரை மணியளவில் வானத்தில் காணலாம். ரோகிணி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் நாவல் மரம். இம்மரத்தை வழிபாடு செய்தால் நற்பலன்களைப் பெற முடியும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கோவில்

கழுகு மலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டிக்கு மேற்கில் 19 கி. மீ தொலைவிலுள்ள ஜம்பு நாத ஈஸ்வரர் அகிலேண்டஸ்வரி ஆலயத்திலுள்ள நாவல் மரமரம்.

நெல்லிக்கேடு

தஞ்சாவூருக்கு வடக்கே கும்பகோணம் சாலையில் 11.கி.மீ தொலை உள்ள ஜம்புநாதர் திருக்கோயில்.

செம்பாக்கம்

செங்கல்பட்டுக்கு கிழக்கே திருப்போரூர் சாலையில் 18.கி.மீ தொலைவிலுள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயம்.

கொரட்டூர்

சென்னைக்கு மேற்கில் 10.கி.மீ தொலைவுள்ள ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்

கூற வேண்டிய மந்திரம்

பிரஜாபதி சதுர்பாஹீ ;
கமண்டலு அஷ ஸீத்ரத்ருத் வரா அபயகர ;
ப்தே; ரோகிணி தேவதா அஸ்துமே

ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் போன்ற நட்சத்திரங்கள் ரோகிணிக்கு ரச்சு பொருத்தம் வராது என்பது இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்யாதிருப்பது நல்லது.

ரோகினி நட்சத்திரம் முதல் பாதம்

தோற்ற பொலிவு கொண்டவர்கள்.வைராக்கியம் உடையவர்கள்.வறட்டு பிடிவாதம் உடையவர்கள்.ஊர் ஊராக சுற்ற கூடியவர்கள்

ரோகினி நட்சத்திரம்  இரண்டாம் பாதம்

இரக்க குணம் கொண்டவர்கள்.பெண்களிடன் நேசம் கொண்டவர்கள்.மன அமைதி அடையக்கூடிய நற்குணவான்.ஆடம்பர வாழ்க்கை வாழ முயற்சி செய்ய கூடியவர்கள்

ரோகினி நட்சத்திரம் மூன்றாம் பாதம்

புத்தி கூர்மை உடையவர்கள்.கல்வியில் விருப்பம் கொண்டவர்கள்.கவிதை காவியங்களில் விருப்பம் கொண்டவர்கள்.பல கலைகளை கற்ற சாதுர்யமான சாமர்த்தியசாலிகள் .

ரோகினி நட்சத்திரம்  நான்காம் பாதம்

எளிதில் உணர்ச்சி வச பட கூடியவர்கள்.அலை பாயும் மனம் கொண்டவர்கள்.கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்கள்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular