Thursday, April 18, 2024
Homeஜோதிட குறிப்புகள்தசா புத்தி பலன்கள்-சூரிய திசை

தசா புத்தி பலன்கள்-சூரிய திசை

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

தசா புத்தி பலன்கள்-சூரிய திசை

சூரியதிசை-சூரிய புத்தி

சூரிய திசையில் சூரிய புத்தி 3மாதம் 8நாட்கள்.

சூரிய திசையின் சுய புக்தி காலங்களில் ஜெனன ஜாதகத்தில்  சூரியன் ஆட்சி, உச்சம் நட்பு, மற்றும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தால் அரசு மூலம் நல்ல அனுகூலங்கள் உண்டாகும். வாழ்க்கை துணை, மற்றும் பிள்ளைகளால் நேசிக்கப்படும் யோகம், மனநிம்மதி, ஆடை ஆபரண சேர்க்கை, தெய்வதரிசனங்களுக்காக பயணம் செய்யும் அமைப்பு, திருமணம், சிறப்பான புத்திரபாக்கியம், பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் தந்தையால் சாதகப்பலன்கள், மற்றும் கணக்கு, கம்பியூட்டர் கல்வியில் உயர்வு உண்டாகும் வம்பு வழக்குகளில் வெற்றிகிட்டும்.

அதுவே சூரியன் பலமிழந்து அமைந்திருந்தால் சொந்தங்களால் தொல்லை, பணக்கஷ்டம், கடன்களால் அவதி, வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகளால் பாதிப்பு, இருக்கும் இடத்தை விட்டே செல்ல வேண்டிய நிலை, ஜாதகரின் தந்தைக்கு கண்டம் உண்டாகும். தலைவலி, வயிற்றுவலி, இருதய நோய்கள், கண்களில் பாதிப்பு, வீரம், அக்கினி பயம் பகைவர்களின் தொல்லை அதிகரிக்க கூடிய நிலை ஏற்படும்.

சூரிய திசை- சந்திர புத்தி

சந்திர புத்தி 6மதங்கள் நடக்கும் ..

சந்திரன் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர  திரிகோணத்திலோ, ஆட்சி உச்சம் பெற்றோ அமைந்திருந்து, சுபர் சேர்க்கை சுபர் சாரம் பெற்று தசாநாதனுக்கு, 5,9&ல் இருந்தால் அணுகூலமான நற்பலன்களைப் பெறமுடியும்.

திருமண சுபகாரியங்கள் நடைபெற்று, புத்திர பாக்கியம் அமையும், பெண்களால் யோகம் தனலாபம் உண்டாகும். வண்டி வாகனம், ஆடை ஆபரண சேர்க்கை, தோப்பு துறவு பூர்விக சொத்துக்களால் லாபம் கிட்டும்.

சந்திரன் பலமிழுந்து நீசமாகி பாவிகளுடன் சம்மந்தமாகி சனி, செவ்வாய் சேர்க்கைப் பெற்று திசா நாதனுக்கு 6,8,12&ல் அமையப் பெற்று இருந்தால் மனதில் பயம், குழப்பம், விரோதம், பிரிவு மரணபயம், சிறுநீரக பிரச்சனை, ஜலத்தால் கண்டம், வயிற்று போக்கு வயிற்று வலி,  சோம்பல் போன்றவை உண்டாகும். சிறுநீரக கோளாறு ஏற்படும். வயிற்று பிழைப்பிற்கே அல்லாட நேரிடம்.

சூரிய திசை- செவ்வாய் புத்தி

செவ்வாய் புத்தி 4 மாதம் 6 நாட்களாகும்.

செவ்வாய் பகவான் லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களிலோ, ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ அமைப்பெற்றால் பூமி மனை சேர்க்கை வண்டி வாகன சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை புத்திரர் மற்றும் சகோதரர்களால் அனுகூலம், பகைவரை வெற்றி கொள்ளும் ஆற்றல், மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, வியாதிகள் குணமாகி செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகும்.

சூரிய திசை

அதுவே செவ்வாய் சூரியன்  சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்றோ, பகை, நீசம் பெற்றோ செவ்வாய் புக்தி நடைப்பெற்றாலும் 8,12&ல் அமைந்து  புக்தி நடைபெற்றாலும், பகைவர்களால் கலகம், வண்டி வாகனம் பழுதடையும் நிலை, பூமி மனை போன்றவற்றால் வம்பு வழக்குகள் ஏற்படும் சூழ்நிலை, மரணத்திற்கு சமமான கண்டம், வெட்டு காயம் படும்நிலை, ஜீரத்தினால் உபாதை, திருடர் மற்றும் பகைவரால் பிரச்சனை, நெருப்பினால் கண்டம், எடுத்த காரியங்கள் தடைப்படும் நிலை, அரசு வழியில் தண்டனை போன்ற கெடுபலன்கள் ஏற்படும்.

சூரிய திசை- ராகு புத்தி

ராகு புத்தி 10மாதம் 24 நாட்கள்

சூரியனுக்கு ராகு பகைவர் என்பதால் பொதுவாகவே பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றாலும் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று ராகு சுபர் சேர்க்கைப் பெற்று சுப கிரகங்களின் பார்வைப் பெற்று, சுப கிரகங்களின் சாரம் பெற்றிருந்தால் மட்டுமே நல்ல ஆரோக்கியமும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் உண்டாகும்.

     அதுவே ராகு லக்னத்திற்கு 8,12ல் அமைய பெற்று பாவிகள் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால் பகைவர்களால் பிரச்சனை, கணவன் மனைவியிடையே பிரச்சனை, பணவிரயம் ஏற்படகூடிய நிலை விபத்தினால் கண்டம், எப்பொழுதும் துக்கம் உண்டாக கூடிய சூழ்நிலை, அரசு வழியில் பிரச்சனை, எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும். தேவையற்ற அவமானங்களையும் சந்திக்க நேரிடும்.

சூரிய திசை- குரு புத்தி

குரு புத்தி 9மாதம் 18 நாள்.

குரு பகவான் கேந்திர திரிகோணங்களில், ஆட்சி உச்சம் பெற்று நட்பு வீட்டிலிருந்து சுபர் சேர்க்கை பெற்றருந்தாலும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் அமைப்பு, சிறப்பான புத்திர பாக்கியம், பொருளாதார நிலையில் உயர்வு, சமுதாயத்தில் செல்வம் செல்வாக்கு, பெயர் புகழ் உயரக் கூடிய யோகம், தெய்வீக சிந்தனை, தான தர்ம காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்யும் அமைப்பு, பெரிய மனிதர்களின் தொடர்பு போன்ற அற்புதமான நற்பலன்கள் உண்டாகும்.

சூரிய திசை

குரு பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றோ, நீசம் மற்றும் அஸ்தங்கம் பெற்றோ, திசாநாதனுக்கு 6,8,12&ல் அமையப் பெற்றோ, இருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு ஆரோக்கிய பாதிப்பு, குடும்பத்தில் கலகம், தேவையற்ற அவமானங்கள், உற்றார் உறவினர்களிடம் பிரச்சனை, இடம் விட்டு இடம் சென்று  அலையும் நிலை, அரசாங்கத்தால் பிரச்சனை போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும்.

சூரிய திசை- சனி புத்தி

சனி புத்தி 11மாதம் 12 நாட்கள்

சனி பகவான் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரி கோணங்களில் அமைந்திருந்தாலும் 3,6,10,11&ல் இருந்தாலும் தனக்கு நட்புகிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் ஆட்சி உச்சம், பெற்றிருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் வேலையாட்களால் அணுகூலம், விவசாயத்தால் அதிக லாபம், குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் அனுகூலம், ஆடை ஆபரணம், வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வு, எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூட கூடிய வாய்ப்பு உண்டாகும். அசையா சொத்துகளால் அணுகூலம் ஏற்படும்.

சூரிய திசை

சனி பலமிழந்து பகை நீசம் பெற்று பாவிகளின் சேர்க்கையுடன் இருந்தால் உடல் நலபாதிப்புகள் மனதில் சஞ்சலம், நீசர்களுடன் சகவாசம், அரசு வழியில் பிரச்சனை, நண்பர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே பகை இடம் விட்டு இடம் பெயருதல், பங்காளிகளுடன் வம்பு  வழக்கு கலகம் உண்டாகும். வாதம், எலும்பு சம்பந்தபட்ட நோய், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் கண்டங்கள் ஏற்படும்.

சூரிய திசை- புதன் புத்தி

புதன் புத்தி 10 மாதம் 6 நாள்

புதன் பகவான் ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தாலும், சுபர் சேர்க்கை பார்வையுடனிருந்தாலும், நல்ல தைரியம் துணிவு, பேச்சாற்றல், எழுத்தாற்றல், தெய்வபக்தி, குருபக்தி, தாய் தந்தை மீது பக்தி தொழில் வியாபாரத்தில் ஈடுபாடு உண்டாகும். அரசு வழியில் ஆதரவு, மனைவி பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். கணிதம், கம்பியூட்டர் போன்றவற்றில்  அதிக ஈடுபாடு கொடுக்கும். ஆடை ஆபரணம் சேரும். பெண் குழந்தை யோகம் கிட்டும். பொருளாதாரம் உயரும்.

புதன் பகவான் லக்னத்திற்கு 6,8,12&ல் அமைந்தோ, பகை நீசம் பெற்றோ, பாவிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தால் மனநிலை பாதிப்பு, நரம்பு சம்மந்த பட்ட நோய், எதையும் சிந்திக்க முடியாத நிலை, ஞாபக சக்தி குறையும் நிலை ஏற்படும். தொழில் உத்தியோகத்தில் கெட்ட பெயர் எடுக்கும் நிலை, தாய் வழி மாமனுக்கு பிரச்சனை ஏற்படும். கடன்கள் அதிகரிக்கும் வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ள நேரிடும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

சூரிய திசை- கேது புத்தி

கேது புத்தி 4மாதம் 6நாள்

கேது பகவான் 3,6,11&ம் இடத்திலும், லக்னாதிபதி சேர்க்கையும் பெற்றிருந்தாலும், சுபகிரகங்களின் சேர்க்கை பார்வை சாரம் பெற்று கேந்திர திரிகோணத்திலிருந்தாலும் தெய்வ பக்தி மிகுதியாகும் கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் புண்ணிய ஆலயங்களுக்கு செல்லும் வாய்ப்பும், புகழ் பெருமையும் உயரும். பகைவர்களை வெல்லும் அமைப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, கைவிட்டு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். புராண கதைகளை வாசிக்கும் யோகும் கிட்டும்.

கேது 2,8&ல் இருந்து பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றால் பணவிரயம், தந்தைக்கு கண்டம், தலையில் நோய், சீறுநீரக பிரச்சனை, மனைவி பிள்ளைகளுக்கு சோதனை, அரசாங்கத்தால் அவமானங்கள், தேவையற்ற குழப்பம் மற்றும் மனநிலை பாதிப்பு, விஷத்தால் கண்டம் வயிற்று வலி பிரச்சனை, வண்டி வாகனத்தால் வீண் செலவு எதிர்பாராத விபத்து போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

சூரிய திசை-சுக்கிர புத்தி

சுக்கிர புத்தி 1வருடம்

சுக்கிர பகவான் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர,திரிகோணத்திலோ, 2,11&ம் இடங்களிலும் ஆட்சி உச்சம் நட்பு பெற்று சுபர் வீடுகளில் அமையப் பெற்றாலும் அரசாங்க வழியில் அனுகூலம் வண்டி வாகன சேர்க்கை ஆடை ஆபரண  மற்றும் அசையா சொத்துக்களின் சேர்க்கை, சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, பெண் குழந்தை யோகம், குடும்பத்தில் பூரிப்பு, ஒற்றுமை, உடல் ஆரோக்கியத்தில் மேன்மை, நல்ல கட்டில் சுகம், சுகபோக, ஆடம்பரமான வாழ்க்கை அமையும் பெண்களால் முன்னேற்றம் உண்டாகும்.

சுக்கிரன் பலமிழந்து லக்னத்திற்கு 6,8,12&ல் மறைந்து, பகை நீசம் பெற்று, பாவிகளின் சேர்க்கையுடனிருந்தால் சர்க்கரை வியாதி, மர்மஉறுப்புகளில் நோய்கள், கணவன் மனைவியிடையே இல்லற வாழ்வில் பிரச்சனை, திருப்தியற்ற நிலை, திருமண சுபகாரியம் நடைபெற தடை, மனநிம்மதி குறைவு, வண்டி வாகனங்கள் பழுதுபடுதல், எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாது சுகபோக சொகுசு வாழ்விற்கு தடை உண்டாகும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular