Friday, March 29, 2024
Homeதோஷங்களும்-பரிகாரமும்களத்திர தோஷம் என்றால் என்ன ?பரிகாரம் செய்வது எப்படி ?

களத்திர தோஷம் என்றால் என்ன ?பரிகாரம் செய்வது எப்படி ?

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

களத்திரம் என்ற சொல்லானது பெண்ணுக்கு கணவனையும் மனைவியையும் குறிக்கும் சொல்லாகும் களத்திர ஸ்தானம் என்பது லக்னத்திற்கு 7 ஆவது இடத்தை குறிக்கும் இந்த ஏழாவது வீடு பாவ கிரகங்களால் பாதிப்பு அடைந்து இருக்கக்கூடாது.

 களத்திர தோஷம் என்றால் என்ன ??

லக்னம் இருக்கும் இடத்திலிருந்து 1,  2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் சூரியன் செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தாலோ அல்லது சேர்ந்து இருந்தாலோ இந்த அமைப்பு கொண்ட ஜாதகம் களத்திர தோஷ ஜாதகம் ஆகும்.

நான்காமிடத்தில் சனி ,செவ்வாய், ராகு அல்லது கேது சேர்ந்து இருந்தாலும் இரண்டாம் ஏழாம் இடத்து அதிபதியும் சுக்கிரனும் கூடி பாவ கிரகங்களுடன் சேர்ந்து 6,8, 12-ம் இடத்தில் இருந்தாலும் களத்திர தோஷமாகும்.

சுக்கிரன், சூரியன், சனி அல்லது ராகு கேதுவுடன் கூடி இருந்தாலும் ஏழாமிடம் பாவ கிரகங்களின் வீட்டில் சுக்கிரன் இருந்தாலும் மிகவும் பாதகமான களத்திர தோஷமாகும்.

களத்திர தோஷம்

களத்திர தோஷம் வர காரணம் என்ன?? 

களத்திர தோஷம் ஏற்பட முன்ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளை காரணமாகும். முற்பிறவியில் தன்னை நம்பி வந்த வாழ்க்கை துணையை ஏமாற்றிய காரணத்தினால் ஏற்படுவது களத்திர தோஷமாகும்.

களத்திர தோஷம் என்ன செய்யும்?? 

களத்திர தோஷ ஜாதகம் அமைப்பு உடையவர்களுக்கு திருமணம் மிகவும் தாமத மாக நடைபெறும் அல்லது திருமணம் நடக்காமல் போகும் அதிக வாய்ப்பு உள்ளது அப்படியே திருமணம் நடந்தாலும் திருமண வாழ்வில் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

திருமண வாழ்வில் அதிக போராட்டங்கள் ஏற்படும் தம்பதியர்களிடையே மண முறிவை ஏற்படுத்தும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகும் தன்மை இருக்காது.

களத்திர தோஷம் நீங்க பரிகாரம்

களத்திர தோஷம் உள்ள ஜாதகங்கள் அதே ஜாதக அமைப்புள்ள ஜாதகர் திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்வு சிறப்பாக அமையும்.

இந்த தோஷம்  உள்ளவர்கள் அடிக்கடி குலதெய்வ கோவிலுக்கு சென்று முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்

களத்திர தோஷம் பெற்று திருமணம் ஆகாமல் தவிப்பவர்களுக்கும் சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சேர்த்தி   சேவையை தரிசித்தால் களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

வீட்டில் சுமங்கலி பூஜை செய்வது நற்பலன்களை கொடுக்கும்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular