Friday, March 31, 2023
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்-2020-2021-கும்பம்

குரு பெயர்ச்சி பலன்கள்-2020-2021-கும்பம்

ASTRO SIVA

google news astrosiva

குரு பெயர்ச்சி பலன்கள்-2020-2021-கும்பம்

கடின உழைப்பாளியான கும்ப ராசி நேயர்களே!!!

 
 குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 12-ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால் 
 
  • வேலைச் சுமையும், அலைச்சலும் இருக்கும், 
  • செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள், 
  • சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பீர்கள் ,
  •  வீட்டு ப்ளான் அப்ரூவல் ஆகும் வங்கி லோன் கிடைக்கும்,
  •  உறவினர் நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்,
  •  அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்,
  •  குடும்பத்தில் சிறு பிரச்சனைகளை பெரிதுபடுத்த வேண்டாம்,
  •  கர்ப்பிணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும்,
  •  பிள்ளைகளின் உயிர் கல்வி, வேலை, கல்யாணம் குறித்து கவலைகள் வந்துபோகும்,
  •  மகளுக்கு வரன் தேடும்போது விசாரித்து திருமணம் முடிப்பது நல்லது,
  •  மகனின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள்,
  •  பேச்சில் கவனம் தேவை ,
  • வீண் விமர்சனங்கள் எழும் ,
  •  பழைய கடனை நினைத்து வருந்துவீர்கள்,
  •  சொத்து ஆவணங்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது,

 

 குரு பார்வை பலன்கள் 

குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால்
  •  தாயாரின் உடல் நிலை சீராகும்,
  •  நல்ல வசதியான வீட்டுக்கு சிலர் வேறு ஊருக்கு குடி பெயர்வீர்கள்,
  •  குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும்,
  •  வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்,
  •  குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள் ,ஆரோக்கியம் கூடும்,
  •  வழக்குகள் சாதகமாகும்,
  •  ஷேர் மூலம் பணம் வரும் ,

கும்பத்தில் குரு பகவான் 

குரு பகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு அதிசாரம் ஆகியும் வக்ரமாகி செல்வதால் 
  • உணர்ச்சிவசப்படாதீர் 
  • வருங்காலத்தைப் பற்றிய கவலைகளும் சந்தேகத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் வந்து நீங்கும்
  •  புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்
  •  கடையை நவீனமாக்குவீர்கள்
  •  வணிகர் சங்கத்தில் உங்களுக்கென்று தனி இடம் பதவி உண்டு
  •  இரும்பு ,உணவு ,ரியல் எஸ்டேட், பதிப்பகம் ,சிமென்ட் வகைகளால் லாபம் கிடைக்கும்

பரிகாரம் 

சென்னை திருவல்லிக்கேணியில் அருளும் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளை ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்கி வழிபடுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

குரு பெயர்ச்சி பலன்கள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular