Sunday, March 26, 2023
Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்-பரிகாரங்கள் -2020-2023-மேஷம்

சனி பெயர்ச்சி பலன்கள்-பரிகாரங்கள் -2020-2023-மேஷம்

ASTRO SIVA

google news astrosiva

 

சனி பெயர்ச்சி பலன்கள்-மேஷம் 

இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி(திருநள்ளாறு முறை இதுதான் ) சனி பெயர்ச்சி மார்கழி மாதம் 11ம் தேதி(26.12.2020ம் தேதி)57:04  நாழிகைலஅதாவது மறுநாள் விடியற்காலை5:22 மணிக்கு ஏற்படும் 
 
இந்த பெயர்ச்சியிலஉத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம் தனுசு ராசியில் இருந்து உத்திராடம் நட்சத்திரம்  2ம் பாதம் மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் 
 
விருச்சிக ராசிக்கு ஏழரை சனி நீங்குகிறது 
கும்பத்துக்கு ஏழரை சனி தொடங்குகிறது 
துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி 
மிதுனத்திற்கு அஷ்டமம் சனி 
மகரத்திற்கு ஜென்ம சனி காலம் தொடங்குகிறது 
 
இப்போது சனி பகவான் செல்லும் மகரம் அவருக்கு சொந்த வீடு என்பதால் பெரும் அளவுக்கு சங்கடங்களை எந்த ராசிக்கும் தரமாட்டார் 
 
 
சனி பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான மகரதுக்கும், பதினோராம் இடமான கும்பத்திற்கும் உரியவர் அவர் இப்போதைய பெயர்ச்சி உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான மகரத்தில் செல்கிறார் பத்தாமிடம் என்பது ஜீவனஸ்தானம் ,இந்த சமயத்தில் சனியின் மூன்றாம் பார்வை உங்கள் ராசிக்கு 12ம் இடத்திலும் ,ஏழாம் பார்வை நான்காம் இடத்திலும் ,பத்தாம் பார்வை 7ம் இடத்திலும் பதியும்.
 
இந்த இடங்கள் முறையே விரயம் ,மாத்ருசுஸ்தானம் ,களத்திர ஸ்தானமாகும் சனிபகவான் மகரத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு தற்போது மகரத்தில் நீச்சம் அடைந்து இருப்பது அடுத்து கும்பத்திற்கும் அதன் பிறகு மீனத்திற்கும் செல்ல இருப்பதையும் கணக்கில் கொள்ளனும்.
 
 
இந்த  சனிப்பெயர்ச்சி உங்களுக்கு உயர்வுக்கு உத்திரவாதம் கிட்டக்கூடிய காலகட்டமாக இருக்கும் அதேசமயம் சோம்பலில்லாமல் உழைப்புக்கும் முழுமையான முயற்சிகளுக்கும் ஏற்பவே ஏற்றமும் மாற்றமும் ஏற்படும் 
 
 • சிலருக்கு எதிர்பாராத மாற்றங்கள் வந்தாலும் அது பின்னர் ஏற்றத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும் என்பதால் ஏற்பது நல்லது 
 • பணியிட கஷ்டங்கள்  மறந்து மேல் அதிகாரிகள் பாராட்டு மனதுக்கு மகிழ்ச்சி தரும்
 •  உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பும் அதனால் உயர்வுகளும் நிச்சயமாக கிடைக்கும் 
 • எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு ஊதிய உயர்வுகள் கிட்டும் சிலருக்கு எதிர்பாராத மாற்றங்கள் வரவும் வாய்ப்புண்டு 
 • வெளியூர் வெளிநாடு சென்று பணி புரிய கூடிய வாய்ப்பு வரலாம் எந்த மாற்றத்தையும் தயங்காமல் ஏற்பதுதான் எதிர்காலத்துக்கு நல்லது 
 • நீண்டகாலமாக நிரந்தரப் பணி கிடைக்காமல் திண்டாடி அவங்க இப்போது தகுதிக்கு ஏற்ற வேலை கிடைத்து சந்தோஷப்படலாம் 
 • தடைகள் தகர்ந்து உயர்வுகள் வரும்சமயம் தலைக்கனம் தவிர்ப்பது அவசியம் 
 • வீட்டில் நிம்மதி நிலவும்
 •  வாழ்க்கைத்துணையுடன் இருந்த சுணக்கம் நீங்கிய அன்னியோன்யம் அதிகரிக்கும் 
 • குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள் மணமாலையும் மழலை  பாக்கியமும் மனம்போல கைகூடிவரும்
 •  பூர்வீக சொத்து லாபம் தரும்
 •  சகோதர வழி உறவுகள் கூட இருந்த சலசலப்பு மறையும் 
 • நீண்ட கால கனவாக இருந்த வீடு மனை வாகன வசதிகள் நனவாகும்
 •  தொழிலில் சிக்கல்கள் விலகி சீரான வளர்ச்சி ஏற்படும் 
 • நீண்ட காலமாக எதிர்பார்த்த அரசு அனுமதி வங்கிக் கடன் போன்றவை கிட்டும்
 • அரசு ,அரசியல் துறையினருக்கு இது பொன்னான காலம் மேலிடத்தின்பார்வை உங்க மேல பட்டு பொறுப்புகள் அதிகரிக்கும் சிலருக்கு திடீர் பதவியும் வர வாய்ப்பும் உண்டு 
 • மாணவர்கள் அவரவர் திறமைக்கு உரிய பாராட்டுகளையும் மேன்மையும் பெறக்கூடிய காலகட்டம் 
 • தினமும் அதிகாலை எழுந்து படிக்கிறவங்க அதிக நன்மை பெறலாம்
 •  கலைத்துறையினர் புகழும் பெருமையும் அடையக்கூடிய காலகட்டம் இந்த சமயத்தில் தானாகவே தேடி வரும் வேண்டாத நட்புகளை இனம் கண்டு ஒதுக்குங்க 
 • பயணத்தில் வேகம் வேண்டாம் 
 • தொலைதூர வாகனத்தை ஓட்டும் பொழுது ஓய்வு அவசியம் 
 • பயணத்தை தொடங்கும் முன் வழிபாதை விநாயகருக்கு தேங்காய் உடைகிறது நல்லது 
 • உடல்நலத்தில் கவனம் உள்ளவங்க மன அழுத்தத்துக்கு இடம் தராமல் இருப்பது நல்லது 
 • தினமும் சிறிது நேரமாவது தியானம் யோகா செய்வது கொஞ்ச நேரமாவது குல தெய்வத்தை கும்பிடுவதும் நல்லது 

பரிகாரம் :

இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில் ஒரு முறை பிள்ளையார்பட்டி சென்று கற்பக கணபதியை மனதார ஆராதியுங்கள் அவரோட அபிஷேக விபூதியை வாங்கிவந்து தினமும் இட்டுக்கங்க மாதம் ஒரு வியாழக்கிழமை பக்கத்துல பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி சாத்தி ஆராதியுங்க ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு இயன்ற உதவி செய்யுங்கள் 
 
சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில் சங்கடங்கள் குறைந்து சந்தோஷம் நிறையும்:
சனி பெயர்ச்சி பலன்கள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular