Sunday, October 1, 2023
Homeசிவன் ஆலயங்கள்சனி பெயர்ச்சி திருத்தலங்கள்- வட திருநள்ளாறு

சனி பெயர்ச்சி திருத்தலங்கள்- வட திருநள்ளாறு

ASTRO SIVA

google news astrosiva

சனி பெயர்ச்சி திருத்தலங்கள்- வட திருநள்ளாறு

தல வரலாறு 

சென்னை பல்லாவரம் ,குன்றத்தூர் சாலையில் பம்மலை தாண்டியதும் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் முக்கிய சாலையிலேயே அமைந்துள்ளது பொழிச்சலூர் இங்கு அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகையோடு கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு அகத்தீஸ்வரர்.

 
தொண்டை மண்டல புகழ் நாட்டில் புகழ் சோழ நல்லூர் என்று சோழர்கள் காலத்தில் அழைக்கப்பட்ட இவ்வூர் பல்லவர் காலத்தில் பொழில்சேர் ஊர் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி பொழிச்சலூர் என்றானது என வரலாறு கூறுகிறது.
 
 அகத்திய மாமுனி தனது யாத்திரையின் போது தொண்டை மண்டலம் முழுக்க பல இடங்களில்  சிவலிங்கங்களை ஸ்தாபித்து ஆலயங்களை எழுப்பி வந்தார் இந்த பொழிச்சலூர் தளத்தில் தங்கியிருந்த அகத்தியருக்கு ஈசனே சுயம்புவாக தோன்றி காட்சி அளித்தார். இங்ஙனம் அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமிக்கு அகத்தீஸ்வரர் என்று திருபெயர்.
 
 
 இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் மிகவும் வரப்பிரசாதி என்று போற்றப்படுகிறார். இவரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றதாக ஞானநூல்கள் சிறப்பிக்கின்றன. இக்கோயிலில் சனி பகவான் திருநள்ளாறு திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பது போலவே இங்கும் தனியாக எழுந்தருளி சின் முத்திரையுடன் காட்சி அளிக்கின்றார். 
 
சனி பெயர்ச்சி திருத்தலங்கள்
 
திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இங்குள்ள சனீஸ்வரனுக்கு அந்த பரிகாரங்களை செய்கின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ அரசர்களால் கஜபிருஷ்ட விமானத்துடன் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் சிவனைப்போலவே சனிபகவானுக்கு தனி வழிபாடுகள் பூஜைகள் செய்யப்படுகின்றன. விநாயகர், தட்சிணாமூர்த்தி ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கும் இங்கே சந்நிதிகள் இருக்கின்றன .
 
 
ஏழரை சனி ,பாத சனி, அஷ்டம சனி அர்த்தாஷ்டம சனி ,கண்டகச் சனி என எவ்வகை சனி தோற்ற பாதிப்புகள் இருந்தாலும் பொழிச்சலூரில் இருக்கும் அகத்தீஸ்வரரையும், சனி பகவானையும் வணங்கி வழிபட்டால் தோஷ நிவர்த்தி அடையலாம்என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றார்கள்.
 
 நெஞ்சில் நீதியும், செயலில் நேர்மையும், வாக்கில் துணிவும் கொண்டவர்களுக்கு எந்நாளும் நலமே அருளும் சனி பகவான் இங்கு வந்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு சகல பாதிப்புகளையும் நீக்கி நன்மைகளை வாரி வழங்கி வருகிறார்…
 
ஆலயம் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள கீழ உள்ள லிங்கை தொடவும்  :
 
 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular