Wednesday, March 22, 2023
Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -விருச்சிகம்

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -விருச்சிகம்

ASTRO SIVA

google news astrosiva

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -விருச்சிகம்

அடுத்தவரை வாழவைத்து மகிழும் விருச்சக ராசி அன்பர்களே!!!

சனிபகவான் இப்போது 27. 12. 2020 முதல் 19 .12. 2023 வரை மூன்றாம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும்..
 
  •  பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள் 
  • எதையும் முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள் 
  • தன்னம்பிக்கை துளிர்விடும் 
  • இழந்த செல்வம் செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள் 
  • ஆரோக்கியம் அடைவீர்கள் 
  •  மனதை பக்குவப்படுத்திக் கொள்வீர்கள் 
  • குடும்பத்தில் இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் 
  • அழகிய வாரிசு உருவாகும் 
  • உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் அமையும் 
  • கடனுதவியுடன் வீடு கட்டி குடிபுகுவீர்கள் 
  • எதிலும் கறாராக இருப்பீர்கள் 

சனி பகவானின் பார்வை 

சனி பகவான் உங்கள் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் 
  • பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள் 
  • பிள்ளைகளின்  உயர்படிப்பு, திருமணத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள்

 சனிபகவான் உங்களின் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால் 

  • சமூகத்தில் அந்தஸ்து உயரும் 
  • சொத்து விவகாரங்களில் கவனம் தேவை 
  • அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும் 

சனி பகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் 

  • உறக்கம் இல்லாமல் போகும் 
  • மகான்கள் சித்தர்களின் தொடர்பு கிடைக்கும் 

இல்லத்தரசிகளுக்கு!! 

  • உடல் ஆரோக்கியம் மேம்படும் 
  • கணவரின் வியாபாரத்தை முன்னின்று நடத்துவீர்கள்
  •  அலுவலகம் செல்லும் பெண்கள் விமர்சித்தவர்களும் வியக்கும்படி காரியம் சாதிப்பீர்கள் 
  • சம்பளம் உயரும் 

வியாபாரிகளே!!! 

  • கடையை நவீனமாக்குவீர்கள் 
  • அனுபவம் மிகுந்த புது வேலையாட்கள் அமைவார்கள் 
  • வியாபார யுக்திகளை சரியாக கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் திடீர் லாபம் அதிகரிக்கும் 
  • புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் 
  • சிலர் அயல்நாடு தொடர்புடைய வியாபாரம் செய்வீர்கள் 
  • சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல் ,கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள் 
  • பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது 
  • அரசாங்க கெடுபிடிகள் குறையும் 

உத்தியோகஸ்தர்களே!!!

  •  பிரச்சனை தந்த மேல் அதிகாரி மாற்றப்படுவார் 
  • தடைபட்ட பதவி உயர்வு உடனே கிடைக்கும் சம்பள பாக்கியும் கைக்கு வரும் 
  • சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும் 
  • வழக்கு சாதகமாகும் சக ஊழியர்கள் மதிப்பார்கள் 
  • எதிர்ப்புகள் நீங்கும் 
  • கணினி துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகம் ஆனாலும் அதற்கு தகுந்த சம்பள உயர்வும் உண்டு 

பரிகாரம் 

அருகில் உள்ள அனுமன் ஆலயங்களுக்கு சென்று அனுதினமும் வழிபடுங்கள் கோயில் பணிகளுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள் .தடைகள் நீங்கும்
சனி பெயர்ச்சி பலன்கள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular