Friday, July 19, 2024
Homeசிவன் ஆலயங்கள்ஐஸ்வர்யங்கள் பல அள்ளித்தரும்-பூதகிரீஸ்வரர்

ஐஸ்வர்யங்கள் பல அள்ளித்தரும்-பூதகிரீஸ்வரர்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ஐஸ்வர்யங்கள் பல அள்ளித்தரும்-பூதகிரீஸ்வரர்

 
 
பைரவ க்ஷேத்திரம்’ என்று பக்தியோடு பூஜிக்கப்படும் காசி நகரில் ‘அந்தர்வேதி’ என்னுமிடத்தில் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தார் பிரம்மதேவன். இந்த யாகதிற் காக நான்மறைகளும் கரை கண்ட வேதியர்கள் வேண்டுமென திருக்கயிலை நாதனிடம் முறையிட்டார்.
 
 திருக்கயிலையில் தம் சேவகர்களான பூதகணங்களை யாகத்திற்கு அனுப்பிவைக்க திருவுள்ளம் கனிந்தார் ஈசன். பிரம்மதேவனின் யாக வேள்வியில் வேதங்களை முழங்கிக் கொண்டிருந்த அந்தணர்களாக மாறிய பூத கணங்களுக்கு தில்லையம்பதியில் ஈசன் புரிந்த ஆனந்த திருநடனத்தை கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
 
 தாருகாவனத்தில் ஈசனின் திருநடனம் புரிந்த காட்சியை நினைக்கும் போதெல்லாம் தன் மனம் பூரிப்பு அடைவதாக பாம்பணையில் துயிலும் மாலவனே ஆதிசேஷன் இடம் நெகிழ்ச்சியுற்றார் எனும்போது பூத கணங்களுக்கு அதைக் காணும் ஆவல் ஏற்பட்டதில் வியப்பு ஏதுமில்லை.
 
 பூதகணங்களின் முடிவால் யாகம் தடைபட்டு வேள்வியின் பலன் கிடைக்காமல் போகும் என கலக்கம் உற்றார் பிரம்மதேவன், செய்வதறியாது திகைத்து ஈசனிடம் சென்று முறையிட்டார் பிரம்மன். பிரம்மனின் வேண்டுதலுக்கு செவி சாய்த்தார் ஈசன்.
 
அக்கணமே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த யாகத்தீயில் ஒளி வெள்ளமாக குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயுமாக நடராஜ பெருமானாக தோன்றி பூத கணங்களுக்கு திருக்காட்சி அளித்து அருளினார். ஈசனின் தரிசனத்தில் மகிழ்ந்த பூதகணங்கள் வேள்வியை தடையின்றி முறையாக நடத்தி முடித்தன.
 
அதனால் அகமகிழ்ந்த பிரம்மதேவன் வைஸ்வதேவம் எனும் விருந்து உபசாரத்தை விமரிசையாக நடத்தி பூதகணங்களை வழியனுப்பி வைத்தார்
 
 பிரம்மதேவன் நடத்திய இந்த யாகத்தில் அந்தணர்களாக கலந்துகொண்ட திருக்கயிலை பூதகணங்களை தில்லைச் சிற்றம்பலத்தில் ஈசனுக்கு நித்திய பூஜைகள் செய்ய பிரம்மதேவனால் அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களே தில்லைத் திருத்தலத்தில் ஆடல்வல்லானுக்கு அன்பு பணிவிடைகள் செய்யும் தீட்சிதர்கள் என புராணங்கள் தெரிவிக்கின்றன 
பூதகிரீஸ்வரர்
 
 
பூதகணங்கள் பிரதிஷ்டை செய்த பூத கிரீஸ்வரர் பெருமான்!
 
 பிரம்ம தேவனின் யாகத்தை முடித்த பூதகணங்கள் தில்லைக்கு திரும்பும் வழியில் சிவபூஜை மேற்கொள்ள உகந்ததாய் ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர் இங்கனம் பூத கணங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதால் அந்த ஈசனுக்கு ஸ்ரீ பூத கிரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது
 
 பூதகணங்கள் சிவனாரை போற்றி வழிபட்ட இந்த கோயில் சென்னை-பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூர்க்குஅருகில் உள்ள சிறுதாவூர் என்னும் தலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஈசன் ஸ்ரீ பூதீஸ்வரர் எனும் இப்பகுதி மக்களால் பக்தியோடு பூஜிக்க படுகிறார்.
 
 பொன்பொருள் ஐஸ்வர்யம் ஸித்திக்கும்! 
 
க்ரோதா என்பவர் தனது மகளான பூதி என்பவரை புலஹர் என்ற மகரிஷி மணமுடித்துக் கொடுத்தார் இவருக்கு பிறந்த குழந்தைகளே ஈசனுக்கு சேவை செய்யும் பெறற்கரிய பேறு பெற்ற பூதகணங்கள் ஆகும். இந்த பூதகணங்கள் தாங்கள் விரும்பும் வடிவினை எடுக்கக் கூடிய ஆற்றல் பெற்றவை.
 
 புனிதமும் மங்ளமும் நிறைந்த பூதகணங்கள் ஆத்மயோகி என்பதனால் யாக வேள்விகள் பெரும் பங்கு வகிப்பவை வாயுபுராணமும் மகாபாரதத்தின் சல்ய பர்வமும் இந்த பூதகணங்கள் சிறப்புகளை எடுத்துக் கூறுகின்றன
 
 பூதியின் புதல்வர்களில் முக்கியமானவர்களான  கூஷ் மாண்டன், கும்போதரன், மற்றும்  கும்பாஸ்யன் ஆகிய மூவரும் சிவ பக்தியில் திளைத்தவர்கள். பூதியின் புதல்வர்களான இவர்களால் பிரதிஷ்டை செய்யப் பட்டதாலும்லும் சிறுதாவூர் திருத்தல ஈசனுக்கு ஸ்ரீ பூதீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறுவர் 
 
பூதி என்ற சொல்லுக்கு செல்வம், ஐஸ்வர்யம், ஒளி பெறச் செய்தல் ஆகிய பொருள் விளக்கங்களும் உண்டு. 
 
மேலும் பூதீஸ்வரம் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் சிறுதாவூர் அக்காலத்தில் பொன்புரம் என்றும் வழங்கப்பட்டுள்ளது.இதனால் சிறுதாவூர்  தலத்தில் அருள்பாலிக்கும் ஈசனை வழிபாடு செய்யும் அன்பர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் பெருகி, பொன் பொருள் யாவும் கிடைக்கும்; ஒளிமயமான எதிர்காலம் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை
 
 பஞ்சபூத தலங்களைத் தரிசித்த பலன் உண்டு! 
 
மாணிக்கவாசகப் பெருமான் பஞ்ச பூதங்களிலும் நிறைந்திருக்கின்ற ஈசனின் தன்மையை “பாரினில் ஐந்தாய் பரந்தாய் போற்றி” என்று பாடிப் பரவியுள்ளார்
 
பஞ்சபூதங்களில் எல்லாம் ஈசன் நீக்கமற நிறைந்து இருப்பதாலும் ஈசன் பூதகிரீஸ்வரர் என்று வணங்கப்படுகிறார் ஆகவே ஈசன் அருள் பாலிக்கும் பஞ்சபூத தலங்களில் வழிபாடு செய்யும் அன்பர்களுக்கு என்ன பலன் கிடைக்குமோ அத்தகைய அரிய பலன்களை சிறுதாவூர் ஸ்ரீ பூத கிரீஸ்வரர் திருத்தலத்தில் வழிபாடு செய்தால் பெறமுடியும் 
 
 
 
பால்வண்ண நாரதராக அருள்கிறார்!
 
 சிறுதாவூர் தளத்தில் தூவெண் மதிசூடி வெள்ளை விடையேறும் பெருமானின் லிங்கத் திருமேனியில் ருத்ர பாகம் முழுவதும் வெள்ளை நிறமாக காணப்படுவது மிகவும் அரிதான திருக்காட்சி ஆகும். பால்வண்ண நாதராக கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் காட்சி தரும் எம்பெருமானின் தரிசனம் மெய்சிலிர்க்க வைக்கிறது’கஜபிருஷ்டம்’எனப்படும் தூங்கானை மாட வடிவில் ஈசனின் கருவறை அமைந்துள்ளது 
 
இத்தலத்தில் அம்பிகை ‘ஸ்ரீ ஆரணவல்லி’ என்ற திருநாமத்துடன் பூஜிக்கப்படுகிறாள் ‘ஆரணம்’ என்றால் ‘வேதம்’ என்று பொருள். வேத நாயகனும்  வேதியர் நாயகனும்  ஈசனின் தேவி என்பதால் அம்பிகைக்கு ‘ஆரணவல்லி’ (வேதவல்லி) என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது
 
 தென்முக தரிசனம் தரும் நந்தி எம்பெருமான்! 
 
சிறுதாவூர் ஸ்ரீ பூத கிரீஸ்வரர் திருக் கோயிலில் அருள்பாலிக்கும் நந்தி எம்பெருமான் தன் திருமுகத்தை மட்டும் தெற்கு முகமாக திருப்பி தரிசனம் தருவது வேறு எங்கும் காண்பதற்கரிய திருக்காட்சி ஆகும் இது தொடர்பாக இதர வரலாறு ஒரு நிகழ்வினை தெரிவிக்கிறது
 
 உடல் நலம் பாதிக்கப்பட்ட சிவபக்தர் ஒருவர் தன் ஆயுள் காலம் முடியும் தருவாயில் இத்தல ஈசனை தரிசிக்க வந்துள்ளார்
 
 தரிசனம் முடிந்து வெளியே வரும் நேரத்தில் அந்த பக்தரின் உயிரை பறிக்கலாம் என எமதர்மன் தன் தூதர்களுடன் சந்நிதிக்கு வெளியில் காத்திருந்தார் அப்போது எமதர்மனின் பக்கம் திரும்பிய நந்தி அவரிடம் 
 
‘தர்ம ராஜனே’உயிர் பிரியும் தருவாயில் ஒரு ஜீவன் சிவ நாமத்தை உச்சரித்து விட்டால் அந்த ஜீவன்  எமபுரம் வருவது தவிர்க்கப்படும்  சிவ புரம் சென்றுவிடும் என்பது உனக்குத் தெரியாதா என்று கோபத்துடன் கேட்டார் 
 
அவ்வளவுதான் எமதர்மராஜன் வந்தவழியே திரும்பி சென்றதாக இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கிறது இக் கதையை ஒட்டியே கோயிலில் தெற்கு நோக்கி திரும்பிய நிலையில் காட்சி தருகிறாராம் நந்தி 
 
தீராத நோயினால் அவதிப்படும் அன்பர்கள் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானத்திற்கு தோஷம் ஏற்பட்டுள்ள அன்பர்களும் இங்கு பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு ஈசனையும் நந்தி எம்பெருமானை மனமுருகி வழிபட அவர்கள் நோய் நீங்கி நிவாரணம் பெறுவார்கள் என்பதை இத்தளத்தின் அன்பர்கள் பக்தியோடு தெரிவிக்கின்றனர்.
 
ஆலயம் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள கீழ உள்ள லிங்கை தொடவும்  :
 

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்534அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்35நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular