Thursday, April 18, 2024
Homeஜோதிட தொடர்நவ கிரகங்கள் ஏற்படுத்தும் உடல் நோய்கள்

நவ கிரகங்கள் ஏற்படுத்தும் உடல் நோய்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

நவ கிரகங்கள் ஏற்படுத்தும் உடல் நோய்கள்

இயற்கை அன்னையின் விருப்பப்படிதான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது செறிவான அறிவாலும், செழுமையான செயலாலும், செயற்கையான கண்டுபிடிப்புகலாளும், மனிதன் இயற்கையையும், மரணத்தையும் ஒருநாளும் வெல்ல முடியாது
காய் இல்லாமல் கனிகள் இல்லை,தாய் இல்லாமல் மகன் இல்லை, பாய் இல்லாமல் படுக்க இல்லை, நோய் இல்லாமல் மனிதன் இல்லை. தன் வாழ்நாளில் ஒரு நாளாவது மனிதன் நோயை சந்தித்தே ஆக வேண்டும்
 தனக்கு வந்திருக்கும் நோய் எளிதில் குணமாக கூடியதோ? அல்லது நிறைய செலவீனங்களை வைத்து விடுமோ? அதனால் சொத்துக்களை இழந்து விடுவேனோ? அல்லது உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ? என்ற கவலையும் பயமும் நிறைந்த கண்கள் காணும் போது யாருக்கும் மனம் பதைபதைக்க தான் செய்யும்
 ஜனன கால ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி அமைந்துள்ளதோ அதை சார்ந்து தான் ஒருவர் வாழ்வில் ஏற்படும் யோகங்களும், ரோகங்களும் தீர்மானிக்கப்படுகிறது. 6ஆம் இடத்தில் அமர்ந்த கிரகங்கள் அல்லது 6ம் அதிபதியின் சாரம் பெற்ற கிரகத்தின் திசை புத்தி காலங்களில் ஜாதகர் நோயாளியாவான்
 ஒருவரின் ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் கூடி எங்கெங்கு அமர்ந்தால் என்னென்ன நோய்கள் எப்போது வரும் என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம் அதற்குரிய கிரகநிலைகளை சற்று காண்போம்
  • ஒருவரின் ஜாதகத்தில் 4ஆம் அதிபதி பலவீனம் அடைந்து அவரை சனி செவ்வாய் பார்த்தாலும், சேர்ந்தாலும் இருதய நோய் வரும். 4ம் அதிபதி சனியாக வந்து செவ்வாய் சேர்ந்தாலும் அல்லது 4ம் அதிபதி செவ்வாயாக வந்து சனி பார்த்தாலும் இருதய நோய் வரும். அல்லது 4ம் அதிபதி, செவ்வாய் சனி மூவரும் கூடி 6,8,12 மறைந்து இந்த மூவரில் ஒருவர் நீச்சமாகி சுபக் கிரகம் பார்க்கவில்லை எனில் இருதயத்தில் அறுவை சிகிச்சை உண்டு
  • ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி 6ஆம் அதிபதி இவர்களுடன் செவ்வாய் ,கேது கூடினால் பிளட் கேன்சர் வரும். லக்கினத்தில் பாவர்கள் இருந்து சுபர் பாராவிடில் நோய் கடுமையாக இருக்கும். குருபகவான் பார்த்தால் நீண்டநாள் வைத்தியத்திற்கு பின் குணமாகும்.
  •  ஜாதகத்தில் லக்கினத்திற்கு 6ஆம் வீட்டில் சனி ,செவ்வாய் நின்று 6ஆம் அதிபதி பலம் பெற்று இவர்களை பார்த்து விட்டால் அல்சர் கடுமையாக தாக்கும். குரு பார்த்தால் நிவர்த்தியாகும்
  •  ஒருவரின் ஜாதகத்தில் 6 ஆம் வீட்டில் சனி செவ்வாய் நின்று சுக்கிரன் கெட்டு சுக்கிரனை இவள் பார்த்து விட்டால் பல பெண்கள் தொடர்பு பரிசாக கிடைக்கும். பால்வினை நோய் (எய்ட்ஸ்) தண்டனையாக கிடைக்கும்
  • ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் புதன் கூடி இவர்களுடன் (ராகு/ கேது) சேர்ந்தால் மூச்சு பிரச்சனை ஆஸ்துமா வரும். மேலும் அலர்ஜி, தோல் நோய் தொடர்ந்து வரும்
  •  ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் புதன் சுக்கிரன் கூடி நீர் ராசியில் நின்று இவர்களை 6ஆம் அதிபதி பார்த்து விட்டாலும் அல்லது இவர்கள் மூவரும் 6ஆம் இடத்தில் நின்று 6ஆம் அதிபதி வலுவிழந்து விட்டாலும் சிறுநீரகத்தில் கல் வரும். சிகிச்சைக்கு பின் மீண்டும் மீண்டும் வரும்.
  •  ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனும் கூடி 6 ,8 ,12ல் இருந்து இவர்களில் ஒருவர் 6ஆம் அதிபதியாக வந்துவிட்டால் அதிக தூக்கம் பிடிக்கும்,இனிப்பு இவர்களை நேசிக்கும், தாகம் அடிக்கடி வந்துபோகும், மருத்துவரை நாடினால் பரிசோதனைக்கு பின் தைராய்டு வந்து நிற்கும்
  • ஒருவரின் ஜாதகத்தில் 5ஆம் இடத்தில் சூரியன் நின்று கேது பார்த்தாலும் அல்லது கேது நின்று சூரியன் பார்த்தாலும் அல்லது இருவரும் 5-ல் நின்று அவர்களை சனி செவ்வாய் பார்த்தால் அப்ரண்டீஸ் என்னும் குடல் வால் நோய் வந்தே தீரும். 5ஆம் அதிபதி 6,8,12இல் மறைந்தால் இதைத் தவிர்க்க முடியாது
  •  ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் கேது கூடி 2(அ)12இல் அமர்ந்து அவரை சனி செவ்வாய் பார்த்தால் கண் நோய் வரும் 6ம்அதிபதி தொடர்பு இருந்து விட்டால் கண் அறுவை சிகிச்சை நடந்தே தீரும்
  •  ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் குருபகவான் நின்று எட்டாம் அதிபதிக்கு 6ம் அதிபதி தொடர்பு இருந்தாலும் அல்லது குரு பகவான் 6ஆம் அதிபதி சாரம் பெற்றாலும், 6ம் அதிபதி பார்த்தாலும் மஞ்சள் காமாலை வரும்
  • ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் பெற்று கேதுவை கேதுவுடன் கூடி 6 அல்லது 12இல் நின்று லக்னாதிபதி பலவீனமடைந்து ஆறாம் அதிபதி தொடர்பு இருந்தால் ரத்தசோகை வரும் அல்லது அதிகமான ரத்தம் இழப்பு ஏற்படும்
  •  ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் சந்திரன் நின்று சூரிய பகவான் 7-ல் நின்று 12ல் கேது நின்று 2-ஆம் இடத்தில் சனி செவ்வாய் இருந்தாலும்,பார்த்தாலும் உடலில் வெண் புள்ளிகள் தோன்றும் குருபகவான் லக்னத்தை, லக்னாதிபதியை, சந்திரனை, பார்த்துவிட்டால் நோய் வந்து மறையும்
  •  ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி  ராகு-கேதுவுடன் கூடி 6ல் நின்றாலும் அல்லது ஆறாம் அதிபதி லக்னத்தில் நின்று அவருடன் ராகு கேது கூடினாலும் உடலில் வெண் புள்ளிகள் தோன்றும் லக்னாதிபதி ஆறாம் அதிபதி ராகு கேது இவர்கள் கூடி எங்கு நின்றாலும் தோல் நோய் வரும்
  • ஒருவரின் ஜாதகத்தில் 12ஆம் வீட்டில் சனிபகவான் நின்று அவரை புதன் பார்த்தாலும் அல்லது புதன் நின்று சனிபகவான் பார்த்தாலும் அல்லது புதனும் சனிபகவானும் பன்னிரண்டில் நின்று இவர்களை 6-ம் இடத்தின் அதிபதி பார்த்து லக்னாதிபதி கெட்டால் அவருக்கு கை கால் வலிப்பு நோய் வரும்
  • ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் புதன் கேந்திரத்தில் நின்று அவர்களை ராகு பார்த்தாலும் அல்லது அவர்கள் இருவரும் ராகு சாரம் பெற்றாலும் 6ம் இடத்து அதிபதி தொடர்பு வந்துவிட்டால் பல் நோய் வரும்
  •  ஒருவரின் செவ்வாய் கேது கூடி இவர்களில் ஒருவர் 12ம் அதிபதியாக வந்தாலும் அல்லது 8,12 நின்றாலும் மூல நோய் வரும்
  •  ஒருவரின் ஜாதகத்தில் தேய்பிறை சந்திரன் கேந்திர ஸ்தானமான 1,4,7,10இல் நின்று அவரை சனி செவ்வாய் பார்த்து இந்த இருவரில் ஒருவர் ஆறாம் அதிபதியாகவோ, எட்டாம் அதிபதியாகவோ வந்து விட்டால் அவருக்கு மூல நோய் வரும்
  • ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் குருபகவான் நின்று ஆறாம் வீட்டு அதிபதியுடன் பாவர்கள் கூடியிருந்தால் குருமகா திசை நடைபெறும் போது அல்லது ஆறாம் இடத்து அதிபதி திசை நடைபெறும் பொழுது குடல் நோய் வரும். இவர்களுக்கு சனி செவ்வாய் பார்வை சேர்க்கை இருந்தால் வயிற்றில் அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியாது
  • ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் சந்திரன், சனி பகவான், ராகு இவர்கள் நின்று இவர்களில் ஒருவர் ஆறாம் அதிபதியாக வந்தாலும் அல்லது ஆறாம் அதிபதி தொடர்பு இருந்தாலும் கை கால் வலி இழுப்பு நோய் வரும்
  •  ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு இரண்டாம் அதிபதியும் ராசிக்கு 2ஆம் அதிபதியும் பாவர்களுடன்கூடி 6ஆம் அதிபதி தொடர்பும் இருந்துவிட்டால்,லக்னாதிபதி பலவீனமானால் தொண்டை நோய் வரும். டான்சிஸ் அல்லது தைராய்டு அல்லது எதிர்பாராத விபத்தால் அறுவை சிகிச்சை ஏற்படும்
  • ஒருவரின் ஜாதகத்தில் அஷ்டமாதிபதியை சனி பகவான் பார்த்தாலும் சேர்ந்தாலும் வெதர் நோய் வரும் .மிதுனம், கன்னி, இந்த ராசிகளில் சனி பகவான் நின்று அவரைப் பாவர்கள் பார்த்தால் வெதர் நோய் வரும்
  • ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் அதிபதி பன்னிரெண்டாம் அதிபதி கூடி 6,8இல் இருந்து அவருடன் சனிபகவான் சம்பந்தப்பட்டால் அவருக்கு வாத நோய் வரும். 6ஆம் அதிபதியின் தொடர்பும் இருந்துவிட்டால் உறுதியாக உண்டு
  •  ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் குருவும் சனி பகவான் நின்று அவர்களை 6ஆம் அதிபதி பார்த்தாலும் அல்லது 6ஆம் அதிபதி  சாரத்தில் இருந்தாலும் அவருக்கு வாத நோய் வரும்
  •  ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் குருவும் சனிபகவானும் இருந்து அவர்கள் சந்திரன் சாரத்தில் இருந்தாலும் அல்லது சந்திரனுடன் இணைந்து இருந்தாலும் குரு (அ) சனி பகவான் ஆறாம் அதிபதியாக வந்து விட்டால் மூளை சம்பந்தமான நோய் வரும்
  • முக்கியமாக ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் அதிபதியுடன் எட்டாம் அதிபதி சம்பந்தப்பட்டு இவர்களில் ஒருவர் 12 ஆம் அதிபதியின் சாரம் பெற்று விட்டால் 6ஆமாம் அதிபதி  திசையில் 8ஆம் அதிபதி  புத்தியில் ஏற்படும் நோயால் பெரும் செலவினங்கள் வரும். சொத்துக்கள் அதனால் விரையம் ஏற்படும். இவர்களுடன் மாரகாதிபதிகள் சம்பந்தப்பட்டால் மாரகம் ஏற்படும் என்பது அனுபவ உணர்த்தும் ஆதார உண்மையாகும்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular