Sunday, October 1, 2023
Homeஆன்மிக தகவல்ஆன்மிக கேள்விகளும்- பதில்களும்

ஆன்மிக கேள்விகளும்- பதில்களும்

ASTRO SIVA

google news astrosiva

 

 

ஆன்மிக கேள்விகளும்- பதில்களும்

கை ரேகையை வைத்து -குழந்தை பாக்கியத்தை கண்டறிவது எப்படி

  • கைரேகை சாஸ்திரம் குழந்தை பாக்கியம் குறித்த ரேகை-மேடு அமைப்புகளே விளக்குகிறது. அதன்படி தம்பதி இருவருக்கும் புத்திர காரகன் என்று அழைக்கப்படும் குருவுக்கு உரிய மேடு நன்கு அமைந்திருக்க வேண்டும்.
  • இதய ரேகையை நேர் கோடு போல செங்குத்தாக அமையாமல், படத்தில் காட்டியுள்ளபடி புதன் மேட்டுக்கு கிழே கிளைகளுடன் அமைந்து, புதன், சூரியன், சனி மேடுகளை கடந்து குரு மேட்டில் மையப்பகுதியில் கிளையுடன் அமர்ந்திருக்க வேண்டும்
  • திருமண ரேகை நல்ல நீளமாகவும் தெளிவாகவும் இளஞ்சிவப்பு நிறத்தில் திகழ அதன் மீது தெளிவான செங்குத்துக் கோடுகள் (குழந்தைரேகை) காணப்பட வேண்டும்.
  • சுக்கிர மேடு குறுக்குக் கோடுகள் இல்லாமல் நன்கு உருண்டு திரண்டு பரந்து விரிந்து காணப்படவேண்டும். இது போன்ற அமைப்பு ஒருவருக்கு அமைந்து விட்டால் குழந்தை பாக்கியம் உண்டு என அறியலாம்

மச்சங்கள் எந்த இடத்தில் அமைந்தால் என்ன பலன் கிடைக்கும்

  • நெற்றியில்மச்சம் அமைவது விசேஷமான நிலை. ஞானத்திற்கான அம்சம், விருப்பம்போல் வாழ்க்கை அமையும், மனைவியின் அன்பு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
  • வலது கண் புருவத்தில் மச்சம் அமைந்திருப்பின் அதிர்ஷ்டத்தின் சின்னமாகும். 30 வயதுக்கு மேல் அதிர்ஷ்டம் கொடுக்கும்.
  • இடது கண்ணில் மச்சம் உடையவர்கள் சுதந்திர மனப்பான்மை உடையவர்கள், பிறருக்கு கட்டுப்பட்டு நடக்க மாட்டார்கள்.
  • மூக்கில் மச்சம் இருக்கும் நபர்கள் முன்கோபிகளாக இருப்பார்கள், கனிவான பேச்சு இருக்காது, எப்போதும் ‘சிடுசிடு’வென பேசுவார்கள் மனைவி மக்களிடம் ஒருவித கெடுபிடியுடன் இருப்பார்கள்.
  • பெண்களுக்கு மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் சேவா மனப்பான்மை பெற்றிருப்பார்கள். அணிமணிகள் விருப்பம் இருக்காது.
  • உதடுகளில் மச்சம் அமையப் பெற்று இருக்கும் நிலை பெரும் செல்வத்தை குறிக்கும். சரஸ்வதி தேவியின் கடாட்சம் கிட்டும். கட்டடக்கலை சிற்பக்கலை, ஓவியக்கலை போன்ற ஏதாவது ஒன்றில் பெரும்புகழை இவர்கள் எய்த கூடும்

பணம் பெருக வாஸ்து சொல்லும் வழிகாட்டல்கள் என்ன?

  • வாஸ்துப்படி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்றால் வீட்டின் வடக்குச் சுவர் ஜன்னல் உடன் இருக்க வேண்டும்
  • தென்மேற்கு திசையில் பணத்தை வைக்கவேண்டும். வடமேற்கு மூலையில் பணத்தை வைக்கக்கூடாது. பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும்.
  • பீரோவை திறக்கும் போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.
  • பணத்தை எப்போதும் மரப்பெட்டியில் தான் வைத்து எடுக்கவேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால் தான் ‘தேக்குமரம்’ என்று பெயர் வந்தது.
  • உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிற துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது அந்தப் பணம் பல மடங்காக பெருகும்.
  • பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் பணத்திற்கு நாம் அடிமையாகமலும், நமக்கு பணத்தை அடிமையாக்காமலும், ஒரு நண்பனைப் போல பணத்தை பாவித்தோம் என்றால் பணம் எப்போதும் நம்மை விட்டுப் போகாமல் தங்கியிருக்கும்.
பெண்களின் திருமண தடையை தகர்க்கும்-சுயம்வர பார்வதி ஹோமம்

கல்யாண தோஷங்களை நீக்கி விரைவில் திருமண பாக்கியம் கைகூட அருளும் வழிபாடுதான் சுயம்வர பார்வதி ஹோமம். திருமணத்தடை நீங்கவும், எவ்வித சிரமமும் இல்லாமல் நல்லபடியாக தகுதியான துணை கிடைக்கவும், சரியான வயதில்-பொருத்தமான முறையில் திருமணம் நடக்கவும் சுயம்வர பார்வதி ஹோமம் செய்வது உகந்தது.

தச்சனின் மகனாக பிறந்த பார்வதி தேவி சிரத்தையோடு தவம் செய்து பரமேஸ்வரனை அடைந்தார். அவரது தவத்தை குலைக்க எத்தனையோ முயற்சிகள் நடந்தன கடைசியில் பரமேஸ்வரன் மாறுவேடத்தில் வந்து தேவியின் மன உறுதியைச் சோதித்து பிறகு அவரை மணந்தார். பார்வதிதேவிக்கு கிடைத்ததை போன்ற இனிய துணையை கிடைக்கச் செய்வதுதான் சுயம்வர பார்வதி ஹோமத்தின் நோக்கம்.இந்த ஹோமத்துக்கு அரச சமித்து, சர்க்கரை பொங்கல், நெய், குங்குமம் ஆகியவற்றை திரவியங்கள் பயன்படுத்துவார்கள். தாமரை பூவையும் சேர்த்து கொண்டு ஹோமம் செய்தால் மனதுக்கு இனிய வாழ்க்கை துணை அமையும் என்கின்றன சாஸ்திரங்கள்.

சுயம்வர பார்வதி ஹோமம் செய்வதற்கான தியான மந்திரங்களின் ஒன்றின் அர்த்தத்தை சொல்கிறேன்.

பார்வதிதேவி உதயகால சூரியனைப் போல் பிரகாசமாக இருக்கிறாள். அவள் கழுத்தில் இருக்கும் மாலையில் வாசமுள்ள மலர்கள் இருப்பதால்,வண்டுகள் வட்டமிடுகின்றன. எல்லோரும் பிரமிக்கும் அளவுக்கு அவளது தோற்றம் அழகாக இருக்கிறது. பரமேஸ்வரனை மெதுவாக நெருங்கி அவள் மாலையிடுகிறாள் அந்தப் பார்வதி தேவி, எந்த விதமான வேண்டுதலையும் சகித்துக் கொள்ளக் கூடியவள். எனது ஆசைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டு அவளை நமஸ்கரிக்கிறேன்.

இதையே தினமும் மனதில் தியானித்து வீட்டில் திருவிளக்கையே பார்வதியாக பாவித்து வழிபட்டு வந்தால் பெண்களுக்கு விரைவில் மணப்பேறு வாய்க்கும்.


வீட்டு தோட்டத்தில் எந்த மரக்கன்றுகள் நடவேண்டும்?வாஸ்துப்படி பூஜை அறை எந்த இடத்தில் அமையவேண்டும்..

முன்பு வீட்டின் கட்டுமானத்துக்கும் மரங்கள் பயன்படுத்தப்படுவது உண்டு. பெரும்பாலும் தேக்கு, வேங்கை ஆகிய மரங்களைப் பயன்படுத்துவார்கள். கட்டுமானத்துக்கு மட்டுமின்றி வீட்டில் வளர்க்கப்படும் மரங்கள் குறித்தும் சில விளக்கங்கள் ‘விருட்ச சாஸ்திரம்’ முதலான நூல்களில் உண்டு.

பருத்தி, அகத்தி, பனை, நாவல், நெல்லி, எருக்கு, புளி, இலவு மரங்களை இல்லத்தில் வளர்த்தால் அஷ்டலட்சுமியும் இடம் பெயர்வர். அத்தி, ஆல்,இச்சி, அரசு, இலவு புரசு, குச்சம், இலந்தை, மகிழம், விளா மரங்களை பயன்படுத்தினால் செல்வம் அழியும், ஆயுள் குறைவு ஏற்படும்.

மிக முக்கியத்துவம் வாய்ந்தது பூஜையறை. சூரிய உதயத்தின் போது சூரியக்கதிர்கள் வீட்டில் எந்த பகுதியில் விழுகின்றன அந்த இடத்தை பூஜை அறையாக உபயோகிக்கவேண்டும். பொதுவாக சூரிய ஒளி வடகிழக்கில் விழுவது போன்ற மனையை தேர்ந்தெடுப்பார்கள். எனவே வீட்டில் வடகிழக்கு பாகத்தில் பூஜையறையை அமைப்பது விசேஷம்!…

பதில்கள் தொடரும் …..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular