Sunday, March 26, 2023
Homeபிலவ வருட புத்தாண்டு பலன்கள்பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்-மீனம்

பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்-மீனம்

ASTRO SIVA

google news astrosiva

பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்-மீனம்

 
பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த அறிவு கொண்ட மீனராசி அன்பர்களே!!! எவர் மனதும் புண்படாமல் நடக்கும் உங்களுக்கு இந்தப் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பதை பார்ப்போம்
 
உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் புத்தாண்டு பிறப்பதால் பணவரவு அதிகரிக்கும், 
  • புது முடிவுகள் எடுப்பீர்கள் 
  • அரைகுறையாக நின்றுபோன வேலைகளை செய்து முடிப்பீர்கள் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது வாழ்க்கைத்துணையின் உடன் பிறப்புகளால் செலவுகள் கூடினாலும் நிம்மதி பெருகும் 
  • வைகாசி மாதத்தில் இருந்து செலவுகளை குறைப்பீர்கள் 
  • வயிற்று வலி மூட்டு வலி வந்து நீங்கும் வெளியூர் பயணங்கள் மனநிறைவு தரும் பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள் 
  • உங்கள் பையனுக்கு நல்ல பெண் அமைந்து ஆனி,ஆவணி மாதங்களில் கல்யாணம் முடியும் 
  • பழைய சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள் பிள்ளையில்லா தம்பதிக்கு அழகான வாரிசு உண்டாகும் 
  • சகோதர சகோதரிகளால் மன நிம்மதி உண்டு அவர்களது தேவைக்கு உதவுவீர்கள்,
  • வருடத்தின் மத்தியப் பகுதியில் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள் வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது உறவினர் நண்பர்களுக்கு மத்தியில் மதிப்பு கூடும் 
  • குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள் 
  • வழக்குகளில் தேக்கநிலை மாறும் வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும் ஐப்பசி,பங்குனி மாதங்களில் வீடு மனை வாங்குவீர்கள் 
  • குடும்ப வருமானம் உயரும் 
  • உங்களால் வளர்ச்சி அடைந்தவர்கள் பக்கபலமாக இருப்பார் 
  • முன்கோபத்தை குறையுங்கள் 
  • பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம் 
  • கனவுத் தொல்லை தூக்கமின்மை வந்து போகும் 
  • பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய நவீன ரக வாகனத்தில் உலா வருவீர்கள்
fish 759384 640 பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்-மீனம்
செல்ல வேண்டிய ஆலயம்
மீன ராசி அன்பர்களுக்கு முருக வழிபாடு உறுதுணையாகும்.
 
செவ்வாய்க்கிழமைகளில் திருப்புகழ் பாராயணம் செய்து முருகக் கடவுளை வழிபட வேண்டும். சஷ்டி திதி நாள்களில் விரதமிருந்து பஞ்சாமிர்தம் சமர்ப்பித்து கந்தக் கடவுளை வழிபடலாம். அதேபோல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கந்த சஷ்டி கவசம் படித்து வரவும். 
 
இயன்றால் சஷ்டி திதி நாள்களில் திருச்செந்தூர் சென்று கடலிலும் நாழிக் கிணற்றிலும் நீராடி சரவண பவனை தரிசித்து வாருங்கள் இயலாதவர்கள் அருகிலுள்ள முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம் முருகன் அருளால் தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular