Friday, December 8, 2023
Homeபிலவ வருட புத்தாண்டு பலன்கள்பிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள் -கடக ராசி

பிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள் -கடக ராசி

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

பிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள் -கடக ராசி

எதையும் முதல் முயற்சியிலேயே முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக  ராசி அன்பர்களே!!!

 எப்போதுமே புரட்சிகரமான முடிவுகளை எடுக்கும் நீங்கள் , மூடிமறைத்து பேசுவது உங்களுக்கு பிடிக்காது, நண்பர்களை அதிகம் நம்பும்  உங்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பதை பார்ப்போம்.
 •  இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு பத்தாவது ராசியில் பிறப்பதால் சவாலான காரியங்களை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்
 • குடும்பத்தில் எப்போதும் ஏதேனும் ஒரு சிக்கல் எழும்பியதே  அந்த நிலை மாறும்
 • கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்
 • பணவரவு திருப்தி தரும்
 • பிள்ளைகளின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் ஏற்படும்.அவர்களின் ஆசையை  பூர்த்தி செய்வீர்கள்.
 •  முன்கோபம் வீண் டென்ஷன் விலகும்
 •  மகளுக்கு சித்திரை வைகாசி மாதங்களில் கல்யாணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்
 • வாழ்க்கைத் துணையினால் உறவுகளால் ஏற்பட்ட கலகம் செலவுகள் விலகும்
 • வெளியூர் பயணங்கள் திருப்தி தரும்
 • வட்டார தொடர்பு அதிகரிக்கும்
 • தாயுடன் மனக்கசப்பு விலகும் அவரின் உடல் நிலை சீராகும் உடன்பிறந்தவர்களின் ஆதரவும் கிட்டும்
 • சொத்துப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்
 • பழைய வீட்டுக்கு பதிலாக புது வீடு வாங்குவீர்கள்
 • நண்பர்கள், உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும்
 • ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்
 • தள்ளிப்போன  குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்
 •  வெளிநாட்டு பயணம் தேடி வரும்
 • சர்க்கரை நோய், மூட்டு வலி, நெஞ்சு வலி ஆகியன விலகும்
 • வாகன வசதிப் பெருகும்
 • சிலரது தவறான ஆலோசனைகளை பிரச்சனைகளில் சிக்கிய நீங்கள் இனி  சிந்தித்து செயல்படுவீர்கள்
 • அரைக்குறையாக நின்ற கட்டிட வேலைகள் புரட்டாசி ஐப்பசி மாதங்களில் முழுமையடையும்
 • சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும்
பிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள் -கடக ராசி

செல்ல வேண்டிய ஆலயம் 

கடக ராசி அன்பர்கள் இந்த புத்தாண்டில் அனுமனை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள்.
 ஞான பலம், வீரம், பக்தி, சேவை, விநயம், பிரம்மசர்யம், சாதனை, யோகம் இவற்றில் உச்சத்திலிருக்கும் அனுமனை தோத்திரம் செய்தால் நமக்கு எல்லாவற்றிலும் வெற்றி நிச்சயம்.
 செங்கல்பட்டு மாவட்டம் திருமலைவையாவூர்  எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயரை ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குங்கள் வாழ்வில் முன்னேற வழி பிறக்கும்.
 வீட்டில் சனிக்கிழமைகளில் ஸ்ரீராம நாமம் கூறி வடை மாலை சமர்ப்பித்து அனுமனை வழிபட லாம் சுந்தரகாண்ட பாராயணம் காரிய வெற்றியை தரும்.
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular