Saturday, April 1, 2023
Homeஅற்புத ஆலயங்கள்பசு பூஜித்த புண்ணிய ஆலயங்கள்

பசு பூஜித்த புண்ணிய ஆலயங்கள்

ASTRO SIVA

google news astrosiva

பசு பூஜித்த புண்ணிய ஆலயங்கள்

 
பசு பூஜித்த புண்ணிய ஆலயங்கள் சூரிய வழிபாட்டிற்கு அடுத்ததாக மாட்டுப்பொங்கல் மனிதர்களின் வாழ்வின் ஒன்றாகி விட்ட ஆவினங்களை ஆராதிக்கும் திருநாளாகும். பசுவும் காளையும் உழவர்களின் நண்பன் மட்டுமல்லாது ஆன்மீக முக்கியத்துவம் கொண்டது. ரிஷபம், நந்தி, பசுக்கூட்டம் என்று சனாதனமான இந்து மதம் இதை பலவகையாகப் பிரிக்கின்றன. இவை மூன்றையும் எப்போதும் வழிபடச் சொல்கிறது இந்துமதம். 
 
பசு குலத்தையே நந்த குலம் என்று அழைப்பர். ஆண் காளையை நந்தி என்றும் பெண் பசுவை நந்தினி என்றும் அழைப்பர். கிருஷ்ணன் பசுவை மெய்த்ததாலே கோபாலன் என்ற பெயர் பெற்றான். பசுக்களை மேய்த்தாலேயே அவர்கள் நந்த கோபர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஈசனின் கருவறைக்கு நேரேயுள்ள காளையின் உருவை கொண்டவரையே ரிஷபம் என்கிறோம். காளையின்  வடிவில் படுத்து இருக்கும்இவரே  ரிஷபதேவர் ஆவார். இவர் தான் நாம் நந்தி என்று அழைக்கிறோம். 
 
ஈசன் நந்தி மீது ஏறி வருவான் என்பதை “வெள்ளை எருதேறி” விடையேறி என்றெல்லாம் திருமுறைகள் கூறுகின்றன. தேவாரத்தில் “நந்தி நாமம் நமச்சிவாய” என்றும். ‘நங்கள் நாதனாம் நன்றி’ என்றும் திருமந்திரம் பேசுகிறது. ஆகவே நந்தியும் சிவமும் வெவ்வேறு இல்லை என்பது தெளிவாகிறது. கோயில்களில் விழா நடக்கும் பொழுது நந்திக் கொடியை பறக்க விடுவர். 
 
ரிஷப தேவருக்கும், நந்தியம் பெருமானுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இருவரும் வெவ்வேறானவர்கள். கருவறைக்கு நேரேயுள்ள காளை வடிவம் கொண்ட ரிஷபதேவர் என்கிற நந்தியிலிருந்து நந்தியம்பெருமான் வேறுபட்டவர். நந்தியம்பெருமானுக்கு மனித முகத்தில் காளையின் தோற்றத்தோடும், இரண்டு கால்களோடும் இருப்பார். நந்திதேவர் வெண்ணிற முடையவர்.முக்கண் கொண்டவர். நான்கு கைகளை உடையவர். ஜபமாலை, சூலம்,அபயவரதம்  காணப்படும். நந்திதேவரின் நாத ஒளியால் உண்டானதே “நந்திநாதோற்பவம்” என்ற நதி. இது காசியில் இருக்கிறது.
 
 
 
ஆவுடையார் கோவில் என்னும் தலத்தில் கருவறையில் சிவபெருமான் அருவமாக ஆத்மநாதராக அருள்கிறார். அதேபோல் ரிஷபதேவரும் அருவமாக அமைந்துள்ளனர். 
 
திருவண்ணாமலைக்கு அருகே உள்ள செங்கம் என்னும் தளத்தில் ரிஷப புரீஸ்வரர் எனும் பெயரிலேயே அருள்கின்றார். 
 
கும்பகோணம்-ஆடுதுறைக்கு அருகேயுள்ள திருலோக்கி தளத்தில் ரிஷபத்தின் மீது ஈசனும், உமையும் காட்சி தரும் சிற்பம் அற்புதமானது. 
 
மதுரைக்கு அருகில் உள்ள காளையார் கோயில் என்ற தளமும் உள்ளது. சுந்தரருக்கு பெருமான் காளை வடிவில்  காட்சியளித்தார். 
 
பசுவின் திருமுகமே தெய்வீகத் தன்மை பெற்றது. கண்களில் சூரிய சந்திரர்களும், முன் உச்சியில் சிவபெருமான் உரைக்கின்றனர். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் புனித நீர் வெளியேறும் நீரை பெறும் வாயிலாகவே கோமுகம் உள்ளது. கோமுக தாமரை அத்தனை பவித்திரமானது என்பதற்காகவே ஆலயங்களில் வைத்துள்ளனர். பெரிய வேள்விகளில் நெய் வெளியேறும் பகுதியை பசுவின் முகத்தை போன்ற அமைப்பில் வைத்திருப்பர். பாரததேசம் முழுவதுமே கோமுகி, தேனுதீர்த்தம், பசுவின் குளம்பால் உண்டான தீர்த்தம் என எண்ணற்ற புனித தீர்த்தங்கள் அமைந்துள்ளன. 
 
தஞ்சாவூர்-திருவையாற்றை சுற்றி சப்த ஸ்தானங்கள் எனப்படும் ஏழு கோயில்கள் உள்ளன. இவை யாவும் நந்தியம் பெருமானின் திருமண நிகழ்வோடு தொடர்புடைய தலங்களாகும். திருவையாறு, திருப்பழனம், திருவேதிகு,டி திருச்சோற்றுத்துறை, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருக்கண்டியூர், போன்ற இந்த ஏழு ஊர்களிலும் நந்தியம் பெருமானின் திருமண நிகழ்வை முன்னிட்டு ஈசனும் ,அம்மையும் திருவுலா வந்து இறுதியில் திருமழபாடியில் திருமணத்தை நடத்துவார். 
 
பார்வதிதேவியே  பசுவின் உருவில் திருவாடுதுறை ஈசனை வழிபட்டு முக்தி பெற்றதால்,கோமுக்தீஸ்வரர் எனும் திரு பெயரில் ஈசன் அருள்கிறார். 
 
 கரூர் எனும் தலம் காமதேனுவால் பூஜிக்கப்பட்டது.அதனாலேயே பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் எனவும் அழைக்கப்படுகின்றார்.
 
கும்பகோணம்-திருப்பனந்தாள் தளத்திற்கு அருகே உள்ள பந்தநல்லூரில் ஈசன் பசுபதீஸ்வரர் ஆக காட்சி தருகிறார்.
 
வசிஷ்டரின் சாபத்தை பெற்ற காமதேனு பூஜித்த முக்கிய தளமாக ‘ஆவூர்’ விளங்குகிறது. ‘ஆ’ எனும்பசுவின் பெயராலேயே இத்தலம் விளங்குவது கூடுதல் சிறப்பாகும். இதுதசரதர் வணங்கிய கோயிலாகும். வசிஸ்டரால் வாஜபேயம் என்கின்ற யாகம் இங்கு நிகழ்த்தப்பட்டது. இத்தலம் கும்பகோணத்திற்கு 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 
 
திருவண்ணாமலைக்கும் விழுப்புரத்திற்கு மிடையே ஆவூர் என்னும் தலம் உள்ளது.
 
தஞ்சாவூர்-அய்யம்பேட்டை அருகேயுள்ள பசுபதிகோயில் இறைவன் பசுபதீஸ்வரர் ஆகும். தஞ்சைக்கு அருகே உள்ள தென்குடித்திட்டை என்னும் தலம் காமதேனுவால் பூஜிக்கப்பட்டு இறைவன் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். 
 
அஷ்ட மங்கள  சின்னங்களில் ஒன்றாகவே ரிஷபத்தை வைத்துள்ளனர். முக்கிய ஹோமங்களில் யாக குண்டலத்தை சுற்றிலும் வைக்கப்படும் மங்கலச் சின்னங்களில் இதுவும் ஒன்று.
 
மாடுகளை கட்டும் மந்தைக்கு பட்டி என்று பெயர். இதையொட்டி நிறைய ஊர்களுக்கு பின்னால் பட்டி சேர்த்தார்கள். 
 
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பட்டீஸ்வரம் என்னும் திருத்தலத்தில் தேனுபுரீஸ்வரர் எனும் திருப்பெயரோடு ஈசன் அருள்கிறார். இது காமதேனுவால் பூஜிக்கப்பட்ட தாகும். 
 
கொங்கு நாட்டில் உள்ள பெரும்பாலான சிவாலயங்கள் காமதேனுவை வழங்கப்பட்டவை ஆகும். அதில் முக்கியமாக பேரூர் தளத்தை ஆதி பட்டீஸ்வரம் என்றும் ஈசனின் பெயர் பட்டீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. கும்பகோணம் பட்டீஸ்வரத்தையும் பேருரையும் தனியே பிரித்துக் காட்ட இத்தளத்தை ஆதிபட்டீஸ்வரம் என அழைத்தார்கள். 
 
ஈசனை நோக்கி வழிபட்ட தங்களைத் தற்காத்துக்கொள்ள கொம்பை பெற்றன அப்படி தவமிருந்து பெற்ற ஊரே திரு ஆமாத்தூர். என்கின்றது திருவாமத்தூர் ஆகும்.விழுப்புரம் அருகே உள்ள இத்தலத்தை பசுக்கள் தாய்வீடு என்று அழைப்பர். 
 
திருவாரூர் நன்னிலத்திற்கு அருகே கொண்டீச்சரம் அமைந்துள்ளது. பார்வதி தேவிக்கும், காமதேனுவின் மகளுக்கும் கொண்டி என்கிற பெயருண்டு. இந்த கொண்டியான அம்பிகை பசு வடிவத்தில் சிவனை வணங்கியதால் பசுபதீஸ்வரர் ஆவார்.
 
சென்னை குன்றத்தூர் அருகே உள்ள கோவூரில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு அழகு சுந்தரராக காட்சியளித்தார்.’கோ’எனும்  பசு வழிபட்டதால் இன்றும் கோவூர் என்றழைக்கப்படுகிறது .
 
கோமளம் என்கிற சொல்லுக்கு கறவைப் பசு என்ற பொருளும் உண்டு. இப்படி கறவைப் பசுவால் வழிபட்ட கோமளேஸ்வரர் திருக்கோயில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ளது.
 
 சென்னை-மாடம்பாக்கத்தில் உள்ள ஈசனை பசு பூஜித்ததால் தேனுபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். 
 
மிக ஆச்சரியமாக பொள்ளாச்சி அருகே களந்தை என்னும் தலத்தில் கருவறையிலேயே அம்பிகை பசுவோடு சேர்ந்து எழுந்தருளி காட்சி அளிக்கிறாள்.
 
நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள சிக்கல் முருகன் தலத்தில் உறையும் ஈசனின் திருப்பெயர் வெண்ணெய் பிரான் என்பதாகும். காமதேனுவின் பால் குளமாக தேங்கி வெண்ணையாக மாறியதை வசிஸ்டர் லிங்கமாக்கி வழிபட்டார். 
 
தேனு எனும் ஊரின் பெயரோ, ஈசனின் திருப்பெயர் இருந்ததாலோ அவை எல்லாம் பசு பூஜித்த தலங்களாகும்.
 
 மேல்மருவத்தூர்-அச்சிரப்பாக்கம் அருகே தேன்பாக்கத்தில் பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதேபோல கபிலா என்றும் பசுவிற்கு ஒரு பெயர் உண்டு. இப்படி கபிலையால் பூஜிக்கப்பட்ட தலமாக திருப்பதி மலையடிவாரத்தில் கபிலேஸ்வரர் ஆலயம் உள்ளது. 
 
நெல்லை-சங்கரன்கோவிலில் அம்பிகை பசு வடிவில் தேவர்கள் சூழ ஈசனை வணங்கினால். ‘கோ’என்னும் பசுவாக தேவி வழிபட்டதால் கோமதி என்றே இன்றும் வணங்கப்படுகிறாள்.
 
கோமாதாவை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும். கோசாலை என்கிற பசு கொட்டிலின் அருகே சென்று அந்த அதிர்வுகளுக்குள்  நில்லுங்கள் உங்கள் மனம் அமைதியாவதை உணரலாம். அதனால்தான் பெரியோர்கள் கோசாலையில் அமர்ந்து நாம ஜபம் செய்வதென்பது கோடி மடங்கு பலன் தரும் என்று சொல்லி வைத்தார்கள்.
 
 நீங்களும் கடந்து செல்லும்போது பசுவைப் பார்த்தால் மனதுக்குள் வணங்குங்கள் உங்கள் முதல் மரியாதை அங்கு வெளிப்படட்டும்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular