ராசி | பலன் |
மேஷம்  | தவறிபோன சில பொருட்களை பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள் |
ரிஷபம்  | மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் |
மிதுனம்  | மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும்
|
கடகம்  | உடற்பயிற்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும் |
சிம்மம்  | செயல்பாடுகளில் இருந்து வந்த எதிர்ப்புகள் படிப்படியாக குறையும் |
கன்னி  | ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும் |
துலாம்  | செயல்களில் தைரியம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி மற்றும் பொறாமை குறையும். சிலர் கடனில் ஒருபகுதியைச் செலுத்துவீர்கள். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வழிபாட்டில் ஈடுபடுவர். |
விருச்சிகம்  | குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். எனினும், உங்களது உழைப்பு வீண் போகாது. |
தனுசு | கடினமான காரியங்களையும் எளிதாக, திட்டமிட்டு முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். |
மகரம் | எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள். |
கும்பம் | இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் சிலருக்கு உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. |
மீனம் | காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள். வியாபாரத்தில் சற்று முன்னேற்ற மான சூழ்நிலை ஏற்படும். |