ராசி | பலன் |
மேஷம்  | மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள் . தலைமையின் ஆதரவுடன் சாதிக்கும் நாள். |
ரிஷபம்  | புதிய முயற்சி அலைச்சல் கொடுத்தாலுமே, இறுதியில் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாலையில் வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். உறவினர்களின் பேச்சு உற்சாகம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். |
மிதுனம்  | எதிர்பார்த்தவை சிலருக்கு இன்றைய தினத்தில் தாமதமாகும். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்த நேரிடலாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள். |
கடகம்  | அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். |
சிம்மம்  | இன்றைய தினத்தில் புதிய செலவுகள் உங்களைத் தேடி வரலாம். பணத்தை பார்த்து செலவு செய்ய வேண்டி இருக்கும் நாள். சிலருக்கு வேண்டாத இடமாற்றம் இருக்க வாய்ப்பு உண்டு. சூரியனின் சஞ்சாரத்தால் அரசு விவகாரங்களில் கருத்து சொல்வதை தவிர்க்கவும். ராஜ கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனினும் முயற்சிக்கு தக்க பலன் இன்று உங்களுக்கு உண்டு. நாளின் முற்பகுதி நன்மையையும், பிற்பகுதி அலைச்சலையும் தரும். |
கன்னி  | தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். |
துலாம்  | இந்த நாளில் உங்கள் தேவைகள் ஓரளவு பூர்த்தி ஆகும். செலவு செய்து வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். குருவின் சஞ்சாரத்தால் நல்லவர்கள் யார், தீயவர்கள் யார் என்பதை கண்டறிந்து விலகுவீர்கள். ஆயுதங்கள், மின் சாதனங்கள் மற்றும் அடுப்புடன் கவனமாகப் பழகுங்கள். மற்றபடி இன்று ஒரு சுமாரான நாள் தான். |
விருச்சிகம்  | இன்றைய தினத்தை பொறுத்தவரையில் புதிய ஆடை, ஆபரணங்களை சிலர் வாங்கி மகிழலாம். செலவுகள் இருந்தாலும். பெரும்பாலும் அவை தேவையான செலவுகளாகவே இருக்கும். உங்கள் தேவைகள் அவ்வப்போது நிறைவேறும். அலைச்சலும், மன சோர்வும் அவ்வப்போது வந்து போனாலும் கூட இறுதியில் வெற்றி அடைவீர்கள். அதாவது முயற்சிக்கு தக்க நல்ல பலன் கிடைக்காமல் போகாது. மொத்தத்தில் இன்றைய நாள் ஒரு நல்ல நாளாக உங்களுக்கு இருக்கும். |
தனுசு | மனதில் ஒருவித இனம் புரியாத பயம் வந்து போகலாம். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து போகலாம். உடல் நலம் சிலருக்கு சிறிய அளவில் பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயங்கள் ஏற்படலாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கத் தாமதம் ஆகலாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள். |
மகரம் | பெரும்பாலும் நன்மைகள் மேலோங்கும் நல்ல நாளாக இந்த நாள் இருக்கும். முயற்சிக்கு தக்க பலன் கிடைக்காமல் போகாது. மேலதிகாரிகளின் பாராட்டு கூட சிலருக்கு இன்று கிடைக்கப்பெறும். யதார்த்தத்தை புரிந்து கொள்வீர்கள்.. |
கும்பம் | பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத் துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். மாற்றம் உண்டாகும் நாள்.. |
மீனம் | இன்று புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். அத்துடன் செலவு செய்து உங்கள் வசதிகளை இன்றைய தினத்தில் நீங்கள் பெருக்கிக் கொள்வீர்கள். உங்கள் தேவைகள் அனைத்தும் நல்ல படியாக சந்திக்கப்படும் நல்ல நாள். அனைத்து விதங்களிலும் உங்களுக்கு வெற்றி உண்டு. |