ராசி பலன் -பஞ்சாங்கம்-(06.06.2021)
தமிழ் தேதி /கிழமை/வருடம் | வைகாசி -23/ஞாயிறு /5123 பிலவ |
ஆங்கில நாள் | 06.06.2021 |
இன்றய சிறப்பு | சர்வ ஏகாதசி ,சிறிய நகசு |
சூரியன் உதயம் | 05.52AM |
சூரியன் அஸ்தமனம் | 06.28PM |
ராகு காலம் | 04.30PM -06.00PM |
குளிகை காலம் | 03.00PM -04.30PM |
அபிஜித் முகூர்த்தம் | 11.45AM -12.35PM |
எம கண்டம் | 12.00PM -01.30PM |
திதி | ஏகாதசி காலை09.20 மணிக்கு மேல் துவாதசி |
நட்சத்திரம் | அஸ்வினி |
சந்திராஷ்டமம் | அஸ்தம் |
யோகம் | சித்த யோகம் |
சூலம் | மேற்கு |
பரிகாரம் | வெல்லம் |
ராசி | பலன் |
மேஷம் ![]() | மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். |
ரிஷபம் ![]() | குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். தேவையான அளவுக்குப் பணம் இருப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுப்பிடிப்பது நல்லது. வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். |
மிதுனம் ![]() | வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். |
கடகம் ![]() | புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைப்பது மகிழ்ச்சி தரும். |
சிம்மம் ![]() | வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். ஆனால், உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். |
கன்னி ![]() | அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களை உங்களுடன் ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் எதிலும் கவனம் தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். |
துலாம் ![]() | பழைய நினைவுகளில் மூழ்கி வீட்டில் தடைப்பட்ட வேலையைமாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூட தவறு என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள். |
விருச்சிகம் ![]() | சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். |
தனுசு![]() | எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். |
மகரம்![]() | எதிர்காலம் பற்றி கவலைவந்து போகும். உறவினர்கள் நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். |
கும்பம்![]() | கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். |
மீனம்![]() | இன்று பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குறிப்பாக உடன் இருப்பவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். |
- Advertisement -