ராசி பலன் -பஞ்சாங்கம்-(08.06.2021)
தமிழ் தேதி /கிழமை/வருடம் | வைகாசி -25/செவ்வாய் /5123 பிலவ |
ஆங்கில நாள் | 08.06.2021 |
இன்றய சிறப்பு | கார்த்திகை விரதம் ,மாத சிவராத்திரி |
சூரியன் உதயம் | 05.52AM |
சூரியன் அஸ்தமனம் | 06.28PM |
ராகு காலம் | 03.00PM -04.30PM |
குளிகை காலம் | 12.00PM -01.30PM |
அபிஜித் முகூர்த்தம் | 11.45AM -12.35PM |
எம கண்டம் | 09.00AM -10.30AM |
திதி | திரயோதசி மதியம் 01.02மணிக்கு மேல் சதுர்த்தசி |
நட்சத்திரம் | கிருத்திகை |
சந்திராஷ்டமம் | சுவாதி |
யோகம் | சித்த யோகம் |
சூலம் | வடக்கு |
பரிகாரம் | பால் |
ராசி | பலன் |
மேஷம் ![]() | மனதில் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவு ஆறுதல் தரும். தொழில், வியாபாத்தில் லாபம் அதிகரிக்கும். வழக்கு, விவகாரத்தில் போராடி வெல்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். |
ரிஷபம் ![]() | சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம்புரியாத பயம் – கவலை வந்து போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள் இந்நாள். |
மிதுனம் ![]() | இன்று உணவுக் கட்டுப்பாடு தேவைப்படும் நாள். குடும்பத்தில் அந்நிய நபர்களால் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளவும். எனினும் சமூகத்தில் உங்களது மதிப்பு உயரும். முயற்சியாலும், எதிர் நீச்சல் போட்டும், இன்று போராடி பல விஷயங்களில் நீங்கள் வெற்றியை பெற்று விடுவீர்கள். |
கடகம் ![]() | வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள். |
சிம்மம் ![]() | இன்று மன சஞ்சலம் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. வீண் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். கோபத்தைக் குறைத்து நிதானத்தால் வெல்ல வேண்டிய நாள். சிலருக்கு வீண் செலவும் இருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் தென்படும். மொத்தத்தில் நாளின் இறுதியில், சோதனையை சாதனை ஆக்குவீர்கள். |
கன்னி ![]() | எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். |
துலாம் ![]() | முன்கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். தடைப்பட்டவேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். பொறுமை தேவைப் படும் நாள். |
விருச்சிகம் ![]() | பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்பட இடம் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். |
தனுசு![]() | எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். |
மகரம்![]() | குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள். |
கும்பம்![]() | குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள். |
மீனம்![]() | இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் சிலருக்கு உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. |
- Advertisement -