ராசி பலன் -பஞ்சாங்கம்-(11.06.2021)
தமிழ் தேதி /கிழமை/வருடம் | வைகாசி -28/வெள்ளி /5123 பிலவ |
ஆங்கில நாள் | 11.06.2021 |
இன்றய சிறப்பு | இன்று இஷ்டி காலம் ,புண்ணாக கெளரீ விரதம் |
சூரியன் உதயம் | 05.52AM |
சூரியன் அஸ்தமனம் | 06.28PM |
ராகு காலம் | 10.30AM -12.00PM |
குளிகை காலம் | 07.30AM -09.00AM |
அபிஜித் முகூர்த்தம் | 11.45AM -12.35PM |
எம கண்டம் | 03.00PM -04.30PM |
திதி | பிரதமை மாலை 06.27 மணிக்கு மேல் துவிதியை |
நட்சத்திரம் | மிருகசீரிடம் மதியம் 02.46மணிக்கு மேல் திருவாதிரை |
சந்திராஷ்டமம் | அனுஷம்,கேட்டை |
யோகம் | சித்தயோகம் |
சூலம் | மேற்கு |
பரிகாரம் | வெல்லம் |

ராசி | பலன் |
மேஷம் ![]() | உங்களின் நற்செயலைச் சிலர் பரிகாசம் செய்வர். கண்டு கொள்ளாதீர்கள் அவர்கள் பின்னாளில் அதற்கு வருந்துவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேற தாமதமாகலாம். மிதமான பணவரவு கிடைக்கும். எவருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதி தர வேண்டாம். சிலருக்கு மருத்துவ செலவுகள் குறையலாம். |
ரிஷபம் ![]() | உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள் வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை பெருகும் நாள். |
மிதுனம் ![]() | சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். |
கடகம் ![]() | குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள். |
சிம்மம் ![]() | வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வந்துச் செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். |
கன்னி ![]() | மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையான வர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். |
துலாம் ![]() | மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். |
விருச்சிகம் ![]() | மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் உண்டாகும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். |
தனுசு![]() | உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள். |
மகரம்![]() | மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வீடு, வாகனம் தொடர்பாக செலவுகள் ஏற்படலாம். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மகிழ்ச்சியுடன் காணப்படும் நாள். |
கும்பம்![]() | குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளைப் பேசி சுமூகமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள். |
மீனம்![]() | அரசாங்க அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு தொலை தூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத் தான் இருக்கும். |
- Advertisement -