ராசி | பலன் |
மேஷம்  | நண்பர்கள் எதிர்பார்ப்புடன் உங்களை அணுகுவர். தொழில், வியாபார நடைமுறையில் தேக்க நிலை ஏற்படலாம். திடீர் செலவால் சேமிப்பு குறையலாம். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் வேண்டும். பெண்கள் பணம் இரவல் கொடுக்க வேண்டாம். |
ரிஷபம்  | சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள். |
மிதுனம்  | ஆழ்ந்து யோசித்து தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு மனைவி வழியில் பக்க பலமாக இருப்பார்கள். வாகன ரீதியாக சிலருக்கு செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். |
கடகம்  | சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள். |
சிம்மம்  | குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள் . |
கன்னி  | குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். |
துலாம்  | மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். போராடி வெல்வீர்கள். |
விருச்சிகம்  | பணப்புழக்கம் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் சிலருக்கு இன்று வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையவும் இடம் உண்டு. முடிந்த வரையில் பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். |
தனுசு | கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கி தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம் பிக்கை குறையும். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள்.கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கி தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள். |
மகரம் | முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய கடனைத் தீர்க்கப் புது வழி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். உழைப்பால் உயரும் நாள். |
கும்பம் | வியாபாரிகளுக்கு அரசால் அனுகூலம் உண்டு. நட்பு வட்டாரத்தில் விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. மேலதிகாரியின் உதவியால் பணிகளில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். |
மீனம் | வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். பெண்களின் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்பர். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சியை மேலதிகாரி பாராட்டுவார்.
|