ராசி | பலன் |
மேஷம்  | ஆன்மீக காரியங்களில் சிலருக்குத் திடீர் ஈடுபாடு ஏற்படலாம். சிலர் திடீர் என்று நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது மட்டும் கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. உத்யோகம் எப்போதும் போலவே காணப்படும். |
ரிஷபம்  | நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். பணியிடத்தில் அமைதி நிலவும். தள்ளிப் போன பயணம் சம்பந்தமாக நல்லதோர் முடிவு கிட்டும். வியாபாரிகளுக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். |
மிதுனம்  | கனவு இல்லம் நனவாகக் காண்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை. பெண்களுக்கு மாமனார், மாமியார் முக்கிய பொறுப்புகளை நம்பி ஒப்படைப்பார்கள். பணியாளர்களுக்கு மேலிடத்தில் சிறு அதிருப்தி தெரிவிக்கப்படும்.
|
கடகம்  | சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள். |
சிம்மம்  | தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப் பால் உயரும் நாள். |
கன்னி  | பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். |
துலாம்  | காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும் |
விருச்சிகம்  | இன்று சிலருக்கு வாயுத் தொல்லைகள் வந்து போக இடம் உண்டு. மனம் அதிக சஞ்சலம் அடைந்து கொண்டே இருக்கும். எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும் நாள். இறை வழிபாடு மட்டுமே உங்களுக்கு நன்மையை செய்யும். மொத்தத்தில் இது அலைச்சல் மிகுந்த சுமாரான நாள் தான். பொறுமையுடன் காரியங்களை செயலாற்ற வேண்டும். |
தனுசு | சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். |
மகரம் | கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் தயவு கிடைக்கப்பெறும். சோதனைகளைக் கடந்து இறுதியில் சாதிக்கும் நாள். |
கும்பம் | சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தினரை பற்றி யாரிடமும் குறைவாக பேச வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. ஒரு சிலர் உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலை கழிக்கப் படலாம். நாவடக்கம் தேவைப்படும் நாள். |
மீனம் | சுபநிகழ்ச்சிகளுக்காக செலவுகள் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதியும், குதுாகலமும் நிறைந்திருக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத விதமாக நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். முன்னர் செய்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைக்கும். |