Sunday, March 26, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் பலன் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்

பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் பலன் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்

ASTRO SIVA

google news astrosiva

பரணி நட்சத்திரம் 3 ஆம் பாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
 • பரணி 3ம் பாதம் துலாம் நவாம்சம் .எனவே இவன் புகர்(சுக்கிரன் ) காலினன் என்று சொல்லப்பட்டது .
 • இவனுக்கு மார்பு அகன்று உயர்ந்திருக்கும்,
 • வகை வகையான உணவை விரும்புவான் ,
 • அறிவுடன் திறனான கல்வி கற்பான் ,
 • பலருடைய ஆதரவையும் இவன் பெற்று இருப்பான்
 • சிவந்த கண்ணையுடையவன் ,
 • அன்னை, தாய் மேல் அதிக பாசம் வைப்பான்,

பரணி நட்சத்திரம் 3ம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்

பரணி 3ம் பாதத்தில் சூரியன் நின்றால்:

 • அதிக பணம் இருக்கலாம் ஆனால் பணத்தோடு சொத்துக்களையும் இழப்பான்
 • தலையில் அடிபடும்,
 • வக்கீல், மருத்துவர் அல்லது நீதிபதியாக பணி புரியலாம் ஆனால் எந்தத் துறையிலும் முழு வெற்றி கிடைக்காது
 • செவ்வாய் இந்த பாதத்தை பார்த்தால் கட்டடத் தொழில் மூலம் வருமானம் உண்டு
 • மிகவும் முரடன் ,கோபி, அவசர புத்திக்காரன், சண்டைக்காரன்.

 பரணி 3ம் பாதத்தில் சந்திரன் நின்றால்:

 • இவனுக்கு இரண்டு மனைவிகள் இருக்கலாம்
 • பிறரால் உயர்வாக மதிக்கப்படுவான்
 • இவனை பலரும் விரும்புவர்
 • இவன் ஏழைகளுக்கு உதவுபவன் ,
 • பட்டு ,பஞ்சு உரத்தொழில்,ஓட்டல் தொழில் போன்றவற்றின் மூலம் சம்பாத்தியம் உண்டு
பரணி நட்சத்திரம்
பரணி 3ம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்

பரணி 3ம் பாதத்தில் செவ்வாய் நின்றால்:

 • இது அசுப பலனை தருவதாகும்,
 • 50 வயதுவரை கஷ்டப்பட வேண்டி வரும் அதுவரை பிறரிடம் கையேந்தி கூட பிழைக்க வேண்டி வரலாம்.
 • இதன் பின் மிகவும் நல்லகாலம் 84 வயது வரை மிகவும் சுகமாக வாழ்வான்
 • சினிமா கொட்டகை, படப்பிடிப்புகூடம் போன்ற வகையில் இந்த காலத்தில் சம்பாதிப்பான்

பரணி 3ம் பாதத்தில் புதன் நின்றால்:

 • அதிக ஆயுள் வாழ்வான் ,
 • மிகவும் புத்திக் கூர்மையுள்ளவன்
 • இவன் மனைவி இவனுக்கு தெய்வம்
 • கொடுத்த வரம் போல மிகவும் உத்தமானவளாகவும் ,இவனை பேணி பாதுகாப்பவளாகவும் ,குணவதியாகவும் இருப்பாள்
 • பொறியியல் துறை அல்லது கட்டுமான தொழில் மூலமாக சம்பாத்யம் இருக்கும்  

பரணி 3ம் பாதத்தில் குரு நின்றால்:

 • அதிகமாக பயணம் செய்வான்
 • 32 வயதுக்கு மேலும் வாழ்க்கை சந்தோசமாக அமையும்
 • சுகபோக ஈடுபாடு அதிகம் உண்டு
 • பலவகை விபத்து நேரும் அனால் எப்படியோ தப்பித்த கொள்வான்
 • எல்லா தேர்விலும் படித்து வெற்றி பெறுவான்
 • சட்டம் ,நகை வியாபாரம் ,விளையாட்டு போட்டி தொழில் முதலியவை மூலம் சம்பாதிப்பான்.

 பரணி 3ம் பாதத்தில் சுக்கிரன் நின்றால்:

 • பருத்தும், குட்டையானதுமான உருவம் உள்ளவன் ,
 • இவன் மனைவி மிகவும் அழகாக இருப்பாள்
 • கடைசிவரை தொழில் ,கடமை செய்வான்
 • கண்களுக்கு அருகில் அடிபட நேரிடலாம்
 • விளம்பரம், செய்தித்துறை முதலியவற்றால் சம்பாதிப்பான்

பரணி 3ம் பாதத்தில் சனி நின்றால்:

 • பிறரையே நம்பி வாழவேண்டிய வாழ்க்கை
 • பெற்றோர் அல்லாமல் பிறரால் வளர்க்க படுபவன்
 • இரண்டு தகப்பன் அல்லது இரண்டு தாய் இருக்கலாம் ,பெற்றவர் வளர்த்தவர்
 • இளம் வயதில் பெற்றோர் ஒருவரையோ அல்லது இருவரையுமே இழக்க கூடும்

பரணி 3ம் பாதத்தில் ராகு நின்றால்:

 • புகழ்பெற்ற கவிஞன் அல்லது நூலாசிரியர் ஆவான்
 • அடிப்படை படிப்பு அதிகம் இருக்காது ,இருந்தும் கற்ற பெரியோர்கள் மத்தியில் கௌரவமாக பேசி பழகுவான் ,
 • காவல் அல்லது பாதுகாப்பு துறையில் பணிபுரிபவனாகவும் இருப்பான்

பரணி 3ம் பாதத்தில் கேது நின்றால்:

 • பெரிய யோக்கியவான்
 • நோயாளிகளை தன பிராத்தனை சக்தியால் குணப்படுத்தும் பெரியவனவாகவும் இருப்பான்.
 • குரு ஆயில்யத்தில் இருந்தால் இவன் தன்னை கடவுளின் அவதாரமாக எண்ணிக்கொள்வான் அப்படியே பிரபலபடுத்துவான்
 • மூலிகை ஏற்றுமதி ,கிழங்குகள் வாணிபம் முதலியவற்றால் சம்பாதிப்பான்

காலச்சக்ர தசா :

துலாம் சுக்கிர தசை 16 வருடம்
விருச்சிக செவ்வாய் தசை 7 வருடம்
தனுசு குரு தசை 10 வருடம்
மகர சனி தசை 4 வருடம்
கும்ப சனி தசை 4 வருடம்
மீன குரு தசை 10 வருடம்
விருச்சிக செவ்வாய் தசை07 வருடம்
துலாம் சுக்கிர தசை16 வருடம்
கன்னி புதன் தசை 9 வருடம்
பரம ஆயுள் 83வருடம்
காலச்சக்ர தசா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular