ராசி பலன்-பஞ்சாங்கம்-25.06.2021
தமிழ் தேதி /கிழமை/வருடம் | ஆனி -11/வெள்ளி /5123 பிலவ |
ஆங்கில நாள் | 25.06.2021 |
இன்றய சிறப்பு | உலக வெண்புள்ளி தினம் |
சூரியன் உதயம் | 05.54AM |
சூரியன் அஸ்தமனம் | 06.36PM |
ராகு காலம் | 10.30AM -12.00PM |
குளிகை காலம் | 07.30AM -09.00AM |
அபிஜித் முகூர்த்தம் | 11.45AM -12.35PM |
எம கண்டம் | 03.00PM -04.30PM |
நல்ல நேரம் | 09.30AM -10.30AM /04.30PM -05.30PM |
திதி | பௌர்ணமி காலை 00.51 மணிக்கு மேல் பிரதமை |
நட்சத்திரம் | மூலம் காலை 07.59 மணிக்கு மேல்பூராடம் |
சந்திராஷ்டமம் | ரோகினி |
யோகம் | சித்தயோகம்/மரண யோகம் |
சூலம் | மேற்கு |
பரிகாரம் | வெல்லம் |
ராசி | பலன் |
மேஷம் ![]() | மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் இன்று தொடங்க வேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். |
ரிஷபம் ![]() | அலுவலகப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் கவனக் குறைவினால் ஏமாற்றத்துக்கு ஆளாக நேரிடும். பெண்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். |
மிதுனம் ![]() | இன்று லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக் கிடையே ஒற்றுமை உண்டாகும். |
கடகம் ![]() | இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். |
சிம்மம் ![]() | அனுகூலமான நாள். எடுத்த காரியங்கள் இனிதாக முடியும். தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். சிலர் தாயின் தேவைகளை நிறைவேற்ற முயற்சி எடுப்பீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். |
கன்னி ![]() | குடும்பத்தினருடன் கலந்து பேசி பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்தருவார். நினைத்ததை தொடர் முயற்சியால் முடிக்கும் நாள். |
துலாம் ![]() | பேச்சு, செயலில் விவேகம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி காண்பீர்கள். லாபம் ஆறுதல் தரும். சிலர் குடும்பத்தில், சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நற்செயல் கண்டு மகிழ்வர். ஆடை, ஆபரணம் சேரும். |
விருச்சிகம் ![]() | குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். தொட்டது துலங்கும் நாள். |
தனுசு![]() | இன்று மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். பெண்களுக்கு டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை உண்டாகலாம். தந்தையின் உடல் நிலையில் ஓரளவே முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை படிப்படியாகத் தென்படும். |
மகரம்![]() | கணவன் – மனைவி இடையே பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். மனசாட்சிப் படி செயல்படும் நாள். |
கும்பம்![]() | தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கலாம். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். உழைப்பால் வெற்றி அடையும் நாள். |
மீனம்![]() | வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட இடம் உண்டு. கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களுக்காகச் செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் எப்போதும் போல் நடைபெறும். |
- Advertisement -