Monday, July 15, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்ஜாதகமும் -உறவு முறைகளும்

ஜாதகமும் -உறவு முறைகளும்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ஜாதகமும் -உறவு முறைகளும்

தந்தைவழி உறவுகளை அறிதல்:

  • ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாவது பாவம் அந்த ஜாதகரின் தாத்தாவின் சகோதரரை குறிக்கும் (தாத்தாவின் இளைய சகோதரரை குறிக்கும்) 5வது பாவத்திற்கு 3வது பாவமாகும்.
  • ஜனன ஜாதகத்தில் முதல் பாவம் இந்த ஜாதகரின் தந்தையின் தாத்தாவை குறிக்கும்.( தந்தை 9வது ராசி அதற்கு 5வது ராசி முதல் பாவம்)
  • ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு பதினோராவது பாவம் அந்த ஜாதகரின் சித்தப்பாவை குறிக்கும். (9வது ராசிக்கு 3வது ராசியாகும்)
  • ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தாவது பாவம் அந்த ஜாதகரின் சித்தப்பாவின் மனைவியைக் குறிக்கும்( 11வது ராசிக்கு 7வது ராசியாகும்)
  • ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அந்த ஜாதகரின் சித்தப்பாவின் குழந்தைகளை குறிக்கும்(11வது ராசிக்கு 3வது ராசியாகும்)

இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்

  • ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அவரது மைத்துனரின் மனைவியைக் குறிக்கும் (9வது ராசிக்கு 7வது ராசியாகும்)
  • ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது மனைவியின் இளைய சகோதரியை குறிக்கும். அதாவது மைத்துனியை குறிக்கும். (7வது ராசிக்கு 3வது ராசியாகும்)
  • ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அவரது மைத்துனியின் கணவனை குறிக்கும். (9வது ராசிக்கு 7வது ராசியாகும்)
  • ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது இரண்டாவது மனைவியை குறிக்கும். (7வது ராசிக்கு 3வது ராசியாகும்)
  • ஜனன ஜாதகத்தில் பதினோராவது பாவம் அவரது மூன்றாவது மனைவியை குறிக்கும். (9வது ராசிக்கு 3-வது ராசியாகும்)

ஜாதகமும் -உறவு முறைகளும்

மகன் மற்றும் மகள் வழி உறவுகள்:

  • ஜனன ஜாதகத்தில் ஐந்தாவது பாவம் அவரது மகன் அல்லது மகளை குறிக்கும்
  • ஜனன ஜாதகத்தில் பதினொன்றாவது பாவம் அவரது மருமகளை குறிக்கும். அதாவது மகனின் மனைவியை குறிக்கும். (5வது ராசிக்கு 7வது ராசியாகும்)
  • ஜனன ஜாதகத்தில் பதினோராவது பாவம் அவரது மருமகனை குறிக்கும். அதாவது மகளின் கணவனை குறிக்கும். (5வது ராசிக்கு 7வது ராசியாகும்)
  • ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது பேரன் மற்றும் பேத்தியை குறிக்கும். (5வது ராசிக்கு 5வது ராசியாகும்)
    மகன் வழி மற்றும் மகள் வழி வாரிசுகள் இரண்டையும் குறிக்கும்.
  • ஜனன ஜாதகத்தில் ஏழாவது பாவம் அவரது சம்பந்தியை குறிக்கும் அதாவது மகனின் மாமனார் மற்றும் மகளின் மாமனார் ஆகும் (11வது ராசிக்கு 9-ஆவது ராசியாகும்.)
  • ஜனன ஜாதகத்தில் இரண்டாவது பாவம் அவரது சம்பந்தி அம்மாளை குறிக்கும். அதாவது மகன் மற்றும் மகளின் மாமியாரை குறிக்கும் (11வது ராசிக்கு 4வது ராசியாகும்)பெண்ணின் கணவனின் வழி உறவுகள்:
  • பெண்ணின் ஜனன ஜாதகத்தில் ஐந்தாவது பாவம் கணவனின் மூத்த சகோதரரை குறிக்கும்.
  • பெண்ணின் ஜனன ஜாதகத்தில் பதினோராவது பாவம் அந்தப் பெண்ணின் கணவனின் மூத்த சகோதரன் மனைவியை குறிக்கும்.
  • பெண்ணின் ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அந்தப் பெண்ணின் கணவனின் இளைய சகோதரரை குறிக்கும்.

திருமண வரம் அருளும் திருமணஞ்சேரி திருத்தலம்

  • பெண்ணின் ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அந்தப் பெண்ணின் கணவனின் இளைய சகோதரனின் மனைவியை குறிக்கும்
  • பெண்ணின் ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது இளைய சகோதரனின் மனைவியை குறிக்கும்
  • பெண்ணின் ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது இளைய சகோதரியின் கணவனை குறிக்கும்
  • பெண்ணின் ஜனன ஜாதகத்தில் ஏழாவது பாவம் அவரது இளைய சகோதரரின் குழந்தைகளை குறிக்கும்
  • கணவன் அல்லது மனைவி வழி உறவுகள்
  • ஜனன ஜாதகத்தில் ஏழாவது பாவம் அவரது மனைவி அல்லது கணவனை குறிக்கும்
  • ஜனன ஜாதகத்தில் பத்தாவது பாவம் அவரது மாமியாரை குறிக்கும்
  • ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அவரது மாமனாரை குறிக்கும்
  • ஜனன ஜாதகத்தில் ஐந்தாவது பாவம் அவரது மாமனாரின் இளைய சகோதரரை குறிக்கும் அதாவது சின்ன மாமனார்
  • ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது மாமனாரின் சகோதரனைக் குறிக்கும்
  • ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது மனைவியின் இளைய சகோதரரை குறிக்கும் அதாவது மைத்துனரை குறிக்கும்

ஜாதகமும் -உறவு முறைகளும்

தாய் வழி உறவுகள்:

  • ஜனன ஜாதகத்தில் இரண்டாவது பாவம் அவரது தாய்வழி தந்தையின் இளைய சகோதரரை குறிக்கும்
  • ஜெனன ஜாதகத்தில் ஆறாவது பாவம் அவரது தாய்மாமனை குறிக்கும்
  • ஜனன ஜாதகத்தில் 12வது பாவம் அவரது தாய்மாமனின் மனைவியை குறிக்கும்
  • ஜெனன ஜாதகத்தில் பத்தாவது பாவம் அவரது தாய்மாமனின் குழந்தைகளை குறிக்கும்
  • ஜனன ஜாதகத்தில் ஆறாவது பாவம் அவரது தாயின் சகோதரியை குறிக்கும் அதாவது சித்தி அல்லது சின்னம்மாவை குறிக்கும்

12ராசிகளுக்கும்27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்

  • ஜனன ஜாதகத்தில் 12வது பாவம் அவரது தாயின் தங்கையின் கணவனை குறிக்கும் அதாவது சின்னம்மாவின் கணவர் சித்தப்பாவை குறிக்கும்
  • ஜனன ஜாதகத்தில் ஆறாவது பாவம் அவரது தந்தையின் மற்றொரு மனைவியை குறிக்கும் அதாவது மாற்றான் தாயைக் குறிக்கும்.
  • ஜனன ஜாதகத்தில் பத்தாவது பாதம் அவரது தந்தையின் மற்றொரு மனைவியின் குழந்தையை குறிக்கும் அதாவது மாற்றான் தாயின் குழந்தைகளை குறிக்கும்சகோதர வழி உறவுகள்:
  • ஜனன ஜாதகத்தில் பதினொன்றாவது பாவம் அவரது மூத்த சகோதரர் அல்லது மூத்த சகோதரியை குறிக்கும்
  • ஜனன ஜாதகத்தில் ஐந்தாவது பாவம் அவரது மூத்த சகோதரரின் மனைவியை அதாவது அண்ணியை குறிக்கும்
  • ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அவரது மூத்த சகோதரரின் குழந்தைகளை குறிக்கும் (ஆண் மற்றும் பெண் இருவரையும்)
  • ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அவரது இளைய சகோதரரை குறிக்கும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்531அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்99குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்35நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்17ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular