ராசி பலன்-பஞ்சாங்கம்-30.06.2021
தமிழ் தேதி /கிழமை/வருடம் | ஆனி -17/வியாழன் /5123 பிலவ |
ஆங்கில நாள் | 01.07.2021 |
இன்றய சிறப்பு | தேசிய மருத்துவர்கள் தினம் ,பைரவர் வழிபாடு உத்தமம் |
சூரியன் உதயம் | 05.54AM |
சூரியன் அஸ்தமனம் | 06.36PM |
ராகு காலம் | மதியம் 01.30-03.00 |
நாள் | நாள் முழுவதும் கீழ் நோக்கு நாள் |
செயல் குறிப்புகள் | ஏற்கனவே தொடங்கிய செயல்களை தொடர்ந்து செய்யலாம் |
எம கண்டம் | காலை 06.00-07.30 |
நல்ல நேரம் | காலை -07.30-09.30/10.30-11.30|மதியம் 12.00-01.30|மாலை 04.00-06.00 |
திதி | மாலை 6.39வரை சப்தமி பின் (தே)அஷ்டமி |
நட்சத்திரம் | காலை 6.49 வரை பூரட்டாதி பின் உத்திரட்டாதி |
சந்திராஷ்டமம் | மகம் |
யோகம் | அமிர்த யோகம் /மரண யோகம் |
சூலம் | தெற்கு |
பரிகாரம் | எண்ணெய் |
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
ராசி | பலன் |
மேஷம் ![]() |
ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை ஒரே சமயத்தில் செய்ய வேண்டி இருக்கலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணியாளர்களுக்கு பணத்தேவை அதிகரிக்கும். பெண்கள் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பெற்றோர் வழியில் சின்னச் சின்ன அதிருப்திகள் காணப்படும். பூர்வீக சொத்து விஷயங்களை சிலர் பேசித் தீர்ப்பது நல்லது. பொறுமையை கடை பிடிக்க வேண்டிய நாள். |
ரிஷபம் ![]() |
இன்றைக்கு எதிலும் நிதானமாக செயல்படவும். பயணங்களை திட்டமிட்டுச் செய்யவும். சிலருக்குத் தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண் விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரிடலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். ஆனால், அதிகாரிகள் அனுசரணையாக இருப்பது ஆறுதல் தரும். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம். |
மிதுனம் ![]() |
எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை மிகக் கவனமுடன் செய்யவும். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சஞ்சலம் ஏற்படக் கூடும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். |
கடகம் ![]() |
குடும்பத்தினருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள். |
சிம்மம் ![]() |
கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை கள் வந்து விலகும். எதிலும் நிதானம் தேவைப் படும் நாள். |
கன்னி ![]() |
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படக்கூடும் என்பதால், வெளியிடங்களில் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். |
துலாம் ![]() |
வெகுநாள் திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். மனதில் புத்துணர்வும், நம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப் பணம் சிலருக்கு வசூலாகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும் |
விருச்சிகம் ![]() |
இன்று அதிக மனசஞ்சலம் ஏற்படும் நாள். தேவை இல்லாத எதிர்மறை எண்ணங்களை இன்றைய தினத்தில் தவிர்க்கப் பாருங்கள். குரு பார்வை உங்களுக்கு ஓரளவு சில நன்மைகளை செய்யும். வேலை பளு அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பிறர் வேலையையும் சேர்த்து நீங்கள் பார்க்க வேண்டி வரலாம். எனினும் கவலை வேண்டாம் இந்த நிலை கூடிய விரைவில் மாறும். மற்றபடி குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள் இந்த நாள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது |
தனுசு![]() |
தேவையான பணம் கையில் இருந்தாலும், எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன், சிலர் கடன் வாங்கவும் நேரிடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் ஆலயங்களையும் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும் |
மகரம்![]() |
இன்று உங்கள் செயல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனினும் பின்னாளில் அவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது இன்றைய தினத்தில் பலருக்கு நன்மை தரும். |
கும்பம்![]() |
எதிர்ப்புகள் குறையும் நாள். புதிய முயற்சியில் ஈடுபடும் வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டு. பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். |
மீனம்![]() |
உத்யோகத்தில் மேலதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். உறவினர் விவகாரங்களில் வளைந்து கொடுப்பது நல்லது. பெண்கள் உற்சாகமாக எதையும் செய்ய தொடங்குவர். பிள்ளைகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட ஆரம்பிப்பர் |
- Advertisement -