Thursday, December 7, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன் -4.7.2021

இன்றைய ராசி பலன் -4.7.2021

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

இன்றைய ராசி பலன் -4.7.2021

MESHAM

மேஷம் 

இன்றைய தினத்தை பொறுத்தவரையில் செலவுகள் அதிகரிக்கும் தினம். எனினும் அனைத்தும் பெரும்பாலும் தேவையான செலவுகளாகத் தான் இருக்கும். சிலர் ஆபரணங்களை கூட வாங்கி மகிழ்வார்கள். இந்த நாள் ஒரு அற்புதமான நாளாக இருக்கும். அலைச்சல் இருந்தாலுமே கூட முயற்சிக்கு தக்க பலன் உண்டு.

RISHABAM

ரிஷபம் 

இன்று உங்கள் தேவைகள் பூர்த்தி ஆகும். பெரும்பாலும் தீமைகள் அகலும் நாள். முயற்சிக்கு தக்க பலன் கிடைக்காமல் போகாது. பண விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் இந்த நாள் ஒரு சிறப்பான நாளாக இருக்கும்.

MITHUNAM

மிதுனம் 

இன்று காலையில் சற்று மந்தமாக இருந்தாலும் பிற்பகுதியில் திடீர் பணவரவு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும். முயற்சிக்கு தக்க நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கப் பெறும். மதியத்திற்கு மேல் அனைத்து விதத்திலும் உங்களுக்கு நன்மை உண்டு. மதியத்திற்கு மேல் அலைச்சல் இருந்தாலும் கூட சென்ற காரியம் வீண் ஆகாது. எனினும் காலை பொழுதில் நிதானம் தேவை.

VIRUCHIGAM

கடகம் 

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள். வியாபாரத்தில் சற்று முன்னேற்ற மான சூழ்நிலை ஏற்படும்.

ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் கோவில்களின் பட்டியல்

SIMMAM

சிம்மம் 

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந் தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்தஒருவர் உங்களை தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள்.

KANNI

கன்னி 

உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வாகன பழுது உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

THULAAM

துலாம் 

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம் 

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள்

THANUSU

தனுசு 

கணவன்-மனைவிக்குள் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். சுமைகளைக் கூட சுகமாகும் நல்ல நாள்.

MAGARAM

மகரம் 

சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர் கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமா வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கோவை தண்டு மாரியம்மன்

KUMBAM

கும்பம் 

இந்த நாளை பொறுத்தவரையில் நாளின் முற்பகுதி சுபச் செலவுகளை தந்தாலும் கூட பிற்பகுதியில் நன்மைகள் கூடும். அனைத்து விதத்திலும் ஏற்றம் தரும் நல்ல நாளாக இந்த நாள் இருக்கும். எதிரிகளின் பலன் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். பெண்கள் பேச்சில் மட்டும் நிதானத்தை கடைபிடியுங்கள். தொழில் – வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகஸ்தர்கள் பிறர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். மொத்தத்தில் நாளின் இறுதியில் சோதனைகளைக் கடந்து சாதனை படைப்பீர்கள்

MEENAM

மீனம் 

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

பஞ்சாங்க குறிப்புகள்-4.7.2021

தமிழ் தேதி /கிழமை/வருடம் ஆனி -20/ஞாயிறு   /5123 பிலவ
ஆங்கில நாள் 4.7.2021
இன்றய சிறப்பு விவேகானந்தர் நினைவுநாள் 
சூரியன் உதயம் 05.54AM
சூரியன் அஸ்தமனம் 06.36PM
ராகு காலம் மாலை 4.30-6.00
நாள் நாள் முழுவதும்  சம நோக்கு நாள்
செயல் குறிப்புகள் புதிய முயற்சிகளை தவிக்கவும்
எம கண்டம் மதியம் 1.30-3.00
நல்ல நேரம் காலை -6.00-7.00/10.45-11.45|மதியம் 1.30-2.30|மாலை 3.15-4.15
திதி இரவு 10.42 வரை தசமி பின் (தே )ஏகாதசி
நட்சத்திரம் மதியம் 12.20வரை அஸ்வினி பின்பு பரணி
சந்திராஷ்டமம் உத்திரம் ,ஹஸ்தம்
யோகம் சித்த யோகம்
சூலம் மேற்கு
பரிகாரம் வெல்லம்

 

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular