இன்றைய ராசி பலன்- 8.7.2021
மேஷம்
இன்றைய தினம் உங்களுக்கு உடல் அசதி ஏற்பட இடம் உண்டு. பேச்சில் நிதானம் தேவை. சூரியனின் சஞ்சாரத்தால் அலைச்சல் இருந்தாலும் கூட முயற்சிக்கு தக்க பலன் கிடைக்கப்பெறும். சூழ்நிலைகளை அனுசரித்து வெல்ல வேண்டிய தினம் இன்று. எனினும் அலைச்சல் இருந்தாலும் இறுதியில் வெற்றியும் உண்டு.
ரிஷபம்
இந்த நாளில் உங்கள் முயற்சிகளுக்கு தக்க காரிய சாதனை உண்டு. சிலர் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் தைரியம் – தன்னபிக்கை வளரும். அதனால், செலவுகளை திறம்பட சமாளிப்பீர்கள். மொத்தத்தில் இந்த நாள் உங்களுக்கு அதிக நன்மை தரும் நாளாகவே இருக்கும். போராட்டங்களை கடந்து வெற்றி பெறுவீர்கள். அதனால் கவலை வேண்டாம்.
மிதுனம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் வேலை பளுவை திறம்பட சமாளிப்பீர்கள். கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளப்பாருங்கள்.
கடகம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட இடம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பு வீண் போகாது. விடா முயற்சியால் வெற்றி பெறும் நாள்.
சிம்மம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சிலர் பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை சிலர் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்க இடம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். கனவு நனவாகும் நாள்.
கன்னி
இன்றைய தினத்தில் உங்கள் தேவைகள் நல்ல விதங்களில் பூர்த்தியாகும். மகத்தான காரியங்களை இன்று நீங்கள் செய்து மகிழ்வீர்கள். அலைச்சல் இருந்தாலும் கூட முயற்சிகளுக்கு தக்க பலன் கிடைக்கப் பெறும். மொத்தத்தில் சோதனைகளை கடந்து சாதனை படைக்கும் நாள் இந்த நாள்.
துலாம்
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். விற்பனையும் சுமாராகத்தான் இருக்கும்.
விருச்சிகம்
திடீர் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். சில நேரங்களில் மறந்த சொந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக மாறிய கதை
தனுசு
புதிய முயற்சி அலைச்சல் கொடுத்தாலுமே, இறுதியில் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாலையில் வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். உறவினர்களின் பேச்சு உற்சாகம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மகரம்
எதிர்பார்த்தவை சிலருக்கு இன்றைய தினத்தில் தாமதமாகும். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்த நேரிடலாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.
கும்பம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்பட இடம் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
மீனம்
இன்றைய தினத்தில், ஆன்மீக சிந்தனை மேலோங்கும். பலநாள் திட்டமிட்ட செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் லாபம் பன் மடங்கு உயரும். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும். பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர்.
பஞ்சாங்க குறிப்புகள்-8.7.2021
தமிழ் தேதி /கிழமை/வருடம் | ஆனி -24/வியாழன் /5123 பிலவ |
ஆங்கில நாள் | 8.7.2021 |
இன்றய சிறப்பு | மாத சிவராத்திரி |
சூரியன் உதயம் | 05.58AM |
சூரியன் அஸ்தமனம் | 06.36PM |
ராகு காலம் | மதியம் 1.30-3.00 |
நாள் | நாள் முழுவதும் சம நோக்கு நாள் |
செயல் குறிப்புகள் | – |
எம கண்டம் | காலை 6.00-7.30 |
நல்ல நேரம் | காலை 10.45-11.45 | மதியம் 12.15-1.15 |
திதி | அதிகாலை 4.23 வரை திரயோதசி(தே)சதுர்த்தசி |
நட்சத்திரம் | இன்று இரவு 10.13 வரை மிருகசீரிடம் பின்பு திருவாதிரை |
சந்திராஷ்டமம் | விசாகம் ,அனுஷம் |
யோகம் | சித்த யோகம்/ மரண யோகம்/அமிர்த யோகம் |
சூலம் | தெற்கு |
பரிகாரம் | தைலம் |