Thursday, December 7, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்- 12.7.2021

இன்றைய ராசி பலன்- 12.7.2021

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

இன்றைய ராசி பலன்- 12.7.2021

 

மேஷம் 

இன்றைய தினத்தில் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபார நடைமுறை சீராக இருக்கும். அளவான பணவரவு சிலருக்குக் கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பிள்ளைகளின் வகையில் சிலருக்கு செலவுகள் ஏற்படலாம்.

ரிஷபம் 

இன்று மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். தொழில் ரீதியாக ஓரளவு லாபமும் ஏற்படலாம். எதிர்பார்த்த நிதி உதவி சிலருக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். மொத்தத்தில், இன்று ஒரு சுமாரான நாளே.

மிதுனம் 

ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். உறவினர் மற்றும் நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். எனினும் எதையும் எதிர் நீச்சல் போட்டு இறுதியில் வெல்வீர்கள். கவலை வேண்டாம்.

இன்றைய ராசி பலன்

கடகம் 

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கனவு நனவாகும் நாள்.

சிம்மம் 

இன்று சிலருக்கு உணவு ரீதியாக சில உபாதைகள் ஏற்பட இடம் உண்டு. உங்கள் தேவைகள் இறுதியில் நிறைவேறும். நிதானமாக செயல்பட்டு வெற்றி அடைய வேண்டிய நாள் இது. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருந்து கொள்ளுங்கள். உத்யோகத்தில் வேலை பளு சற்று அதிகமாக இருக்கும் தான். எனினும் அவற்றை எல்லாம் நீங்கள் சமாளித்து வெற்றி அடைவீர்கள்.

கன்னி 

இன்றைய தினத்தில் சிலருக்கு சுப காரிய பேச்சு வார்த்தை ஆரம்பம் ஆகும். திருமணம் ஆனவர்கள், இல்வாழ்க்கை சிறக்க அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளிடம் கவனமாக பேசுங்கள். சிலர் நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ள நேரிடலாம். எனினும் முயற்சியால் வெல்லும் நல்ல நாள்…இந்த நாள்.

துலாம் 

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையான வர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

இன்றைய ராசி பலன்

விருச்சிகம் 

உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

தனுசு 

புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நிதானம் தேவைப்படும் நாள்.

மகரம் 

இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மை தரும். அக்கம் – பக்கம் வீட்டாரை அனுசரித்துச் செல்ல வேண்டி வரலாம். மொத்தத்தில் பொறுமையால் சாதிக்க வேண்டிய நாள்.

கும்பம் 

சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோ கத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மீனம் 

மனதில் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவு ஆறுதல் தரும். தொழில், வியாபாத்தில் லாபம் அதிகரிக்கும். வழக்கு, விவகாரத்தில் போராடி வெல்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

 

பஞ்சாங்க குறிப்புகள்-12.7.2021

தமிழ் தேதி /கிழமை/வருடம் ஆனி -28/திங்கள்   /5123 பிலவ
ஆங்கில நாள் 12.7.2021
இன்றய சிறப்பு நவகிரஹ வழிபாடு உத்தமம்
சூரியன் உதயம் 05.58AM
சூரியன் அஸ்தமனம் 06.36PM
ராகு காலம் காலை 7.30-9.00
நாள் நாள் முழுவதும் கீழ்நோக்கு நாள்
 குறிப்புகள் ஏற்கனவே தொடங்கிய செயல்களை தொடர்ந்து செய்யலாம்
எம கண்டம் காலை 10.30-12.00
நல்ல நேரம் காலை 6.00-7.30/9.30-10.30|மதியம் 12.00-2.00|மலை 4.00-5.30
திதி காலை8.18 வரை துவிதியை பின் (வ) திரிதியை
நட்சத்திரம் பின் இரவு 3.27வரை ஆயில்யம் பின் மகம்
சந்திராஷ்டமம் பூராடம்,உத்திராடம்
யோகம்  பின்னிரவு 3.27வரை சித்தயோகம் பின் மரணயோகம்
சூலம் கிழக்கு
பரிகாரம் தயிர்

 

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular