Rasi Palan Today-08.08.2021

மேஷம்-Mesham
கனவு இல்லம் நனவாகக் காண்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை. பெண்களுக்கு மாமனார், மாமியார் முக்கிய பொறுப்புகளை நம்பி ஒப்படைப்பார்கள். பணியாளர்களுக்கு மேலிடத்தில் சிறு அதிருப்தி தெரிவிக்கப்படும்.
ரிஷபம்-Rishabam
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.
மிதுனம்-Mithunam
குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். தேவையான அளவுக்குப் பணம் இருப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுப்பிடிப்பது நல்லது. வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும்.
கடகம்-Kadagam
வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.
சிம்மம்-Simmam
புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைப்பது மகிழ்ச்சி தரும்.
கன்னி -Kanni
வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். ஆனால், உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.
துலாம்-Thulam
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய கடனைத் தீர்க்கப் புது வழி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். உழைப்பால் உயரும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
குடும்பத்தினருடன் கலந்து பேசி பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்தருவார். நினைத்ததை தொடர் முயற்சியால் முடிக்கும் நாள்.
தனுசு-Thanusu
உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை சிலர் இழக்க நேரிடும். உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். சகிப்புத் தன்மை அதிகம் தேவைப்படும் நாள்.
மகரம்-Magaram
இந்த நாளை பொறுத்தவரையில் நாளின் முற்பகுதி சுபச் செலவுகளை தந்தாலும் கூட பிற்பகுதியில் நன்மைகள் கூடும். அனைத்து விதத்திலும் ஏற்றம் தரும் நல்ல நாளாக இந்த நாள் இருக்கும். எதிரிகளின் பலன் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். பெண்கள் பேச்சில் மட்டும் நிதானத்தை கடைபிடியுங்கள். தொழில் – வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகஸ்தர்கள் பிறர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். மொத்தத்தில் நாளின் இறுதியில் சோதனைகளைக் கடந்து சாதனை படைப்பீர்கள்.
கும்பம்-Kumabm
இந்த நாளை பொறுத்தவரையில் நாளின் முற்பகுதி சுபச் செலவுகளை தந்தாலும் கூட பிற்பகுதியில் நன்மைகள் கூடும். அனைத்து விதத்திலும் ஏற்றம் தரும் நல்ல நாளாக இந்த நாள் இருக்கும். எதிரிகளின் பலன் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். பெண்கள் பேச்சில் மட்டும் நிதானத்தை கடைபிடியுங்கள். தொழில் – வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகஸ்தர்கள் பிறர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். மொத்தத்தில் நாளின் இறுதியில் சோதனைகளைக் கடந்து சாதனை படைப்பீர்கள்.
மீனம்-Meenam
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.