Rasi Palan Today-14.08.2021

மேஷம்-Mesham
வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டிவரும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்க இடம் தராதீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள். எனினும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.
ரிஷபம்-Rishabam
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வர இடம் தராதீர்கள். குறிப்பாக யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். பிற்பகலுக்கு மேல் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
மிதுனம்-Mithunam
தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத் தான் இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
கடகம்-Kadagam
புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். ஒரு சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஒரு சிலருக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப் பதால் சோர்வு ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும்.
சிம்மம்-Simmam
எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
கன்னி -Kanni
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
துலாம்-Thulam
குடும்பத்தினருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம்.
தனுசு-Thanusu
இன்றைய தினத்தில் உங்கள் தேவைகள் நல்ல விதங்களில் பூர்த்தியாகும். மகத்தான காரியங்களை இன்று நீங்கள் செய்து மகிழ்வீர்கள். அலைச்சல் இருந்தாலும் கூட முயற்சிகளுக்கு தக்க பலன் கிடைக்கப் பெறும். மொத்தத்தில் சோதனைகளை கடந்து சாதனை படைக்கும் நாள் இந்த நாள்.
மகரம்-Magaram
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்பட இடம் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
கும்பம்-Kumabm
சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தினரை பற்றி யாரிடமும் குறைவாக பேச வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. ஒரு சிலர் உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலை கழிக்கப் படலாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
மீனம்-Meenam
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். உடல்நலனில் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பப் பெரியவர்களிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம். வியாபாரம் சற்று சுமாராகத் தான் இருக்கும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.