Monday, July 15, 2024
Homeசிவன் ஆலயங்கள்பண பிரச்சினையை தீர்த்து வைக்கும் காஞ்சிபுரம்- ஓணகாந்தேஸ்வரர்

பண பிரச்சினையை தீர்த்து வைக்கும் காஞ்சிபுரம்- ஓணகாந்தேஸ்வரர்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

பண பிரச்சினையை தீர்த்து வைக்கும் காஞ்சிபுரம்- ஓணகாந்தேஸ்வரர்

காஞ்சிபுரத்தில் உள்ள 5 பாடல் பெற்ற சிவத்தலங்கள் 5-ல் ஒன்றாகவும் தொண்டை நாட்டு சிவ தலங்கள் வரிசையில் மூன்றாவதாக உள்ள தலம் ஓணகாந்தன்தளி

இறைவன் பெயர்: ஒணேஸ்வரர், காந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர்.

இறைவி பெயர்: காமாட்சி அம்மன்

இத்தலத்திற்கு சுந்தரர் பதிகம் ஒன்றும் உள்ளது.

வரலாறு:

வாணாசுரன் என்ற அரசனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் வழிபட்டு பேறு பெற்ற காரணத்தால், இத்தலம் ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது.

3 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி தருகிறது. ஆலயத்தினுள் மூன்று கருவறைகளும், மூன்று சிவலிங்கங்களும் உள்ள சிறப்பு மிக்க ஆலயம் இதுவாகும். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன், நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ஓணன்,காந்தன் இவ்விருவரும் வழிபட்ட லிங்கங்கள், அவர்கள் பெயரிலேயே ஒணேஸ்வரர், காந்தேஸ்வரர் என்ற பெயரில், கோயிலில் அடுத்தடுத்து தனி சந் நிதிகளாக உள்ளன.

முதல் சந்நிதியில் ஒணேஸ்வரர் கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் பின்புறம் கருவறைச் சுற்றில், சிவன்- உமையம்மையின் திருமணக் கோலத்தைக் காணலாம். ஒணேஸ்வரர் சந்நதி அர்த்த மண்டபத்தில், சுந்தரர் மற்றும் இறைவனின் திருப்பாத தரிசனத்தை காணலாம்.

காஞ்சிபுரம்- ஓணகாந்தேஸ்வரர்

அடுத்து இரண்டாவது சந்நிதியில் காந்தேஷ்வர் தரிசனம் தருகிறார். மூன்றாவது கருவறையில் சலந்தரன் வழிபட்டதாக சொல்லப்படும் சலே ந் தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி, தனியே சிறு கோயிலாக உள்ளது. இது பிற்கால பிரதிஷ்டையாகும்.

இத் தலத்தில் உள்ள வயிறுதாரி பிள்ளையார் சந்நிதியை சம்பந்தர் தனது பதிகத்தில் இரண்டாவது பாடலில் குறிப்பிடுகிறார். இது தவிர மற்றொரு விநாயகரான ஓங்கார கணபதியும், காந்தேஷ்வர் சந்நிதியில் வெளியே காணப்படுகிறார். இவரின் சிலையில் பக்தியுடன் தனது காதை வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாக சொல்லப்படுகிறது.

இத்தலத்தில் சனகாதி முனிவர்கள் உடன் இருக்க, வலது காலை முயலகன் மீது வைத்தபடி தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். முருகன் தனது மயில் வாகனத்தில் அமர்ந்தபடி வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மனே பிரதான அம்பாளாக வீற்றிருப்பதால் இத்தலத்தில் உள்ள சிவாலயங்களில் அம்பாளுக்கு என்று தனி சந்நிதி இல்லை.ஓணகாந்தன்தளி ஆலயத்திலும் அம்பாள் சந்நிதி தனியாக இல்லை. கோவிலுக்கு வெளியே தான்தோன்றி தீர்த்தம் உள்ளது.

வன்னிமரமும், புளியமரமும் இத்தளத்தின் தலவிருட்சங்கள் ஆகும்.

காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோயிலுக்கு மேற்கே உள்ள சர்வ தீர்தத்துக்கு வட மேற்கே சுமார் 1கிலோ மீட்டர் தொலைவில், பஞ்சுப் பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு எதிரில் கோயில் உள்ளது.

Google Map:

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்531அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்99குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்35நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்17ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular