Rasi Palan Today-24.08.2021

மேஷம்-Mesham
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்-Rishabam
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.
மிதுனம்-Mithunam
புதிய முயற்சிகளை கவனமாகச் செய்யவும். சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகளை நிகழ்த்தும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் சிலருக்கு கிடைகக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் நிதானத்துடன் ஈடுபடவும்.
கடகம்-Kadagam
திடீர் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். சில நேரங்களில் மறந்த சொந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
சிம்மம்-Simmam
சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குறை, நிறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்து கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
கன்னி -Kanni
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத வெற்றி கிடைக்கும் நாள்.
துலாம்-Thulam
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். உங்களை சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாத படி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.
தனுசு-Thanusu
இன்று லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக் கிடையே ஒற்றுமை உண்டாகும்.
மகரம்-Magaram
இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
கும்பம்-Kumabm
அனுகூலமான நாள். எடுத்த காரியங்கள் இனிதாக முடியும். தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். சிலர் தாயின் தேவைகளை நிறைவேற்ற முயற்சி எடுப்பீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மீனம்-Meenam
சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாள். எனினும் அதை எல்லாம் சமாளித்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.