Rasi Palan Today-06.09.2021

மேஷம்-Mesham
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷபம்-Rishabam
ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை ஒரே சமயத்தில் செய்ய வேண்டி இருக்கலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணியாளர்களுக்கு பணத்தேவை அதிகரிக்கும். பெண்கள் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பெற்றோர் வழியில் சின்னச் சின்ன அதிருப்திகள் காணப்படும். பூர்வீக சொத்து விஷயங்களை சிலர் பேசித் தீர்ப்பது நல்லது. பொறுமையை கடை பிடிக்க வேண்டிய நாள்.
மிதுனம்-Mithunam
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல் பட்டு தேங்கிக் கிடந்த வேலை களை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.
கடகம்-Kadagam
புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப் பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.
சிம்மம்-Simmam
தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்த படி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத் தான் இருக்கும்.
கன்னி -Kanni
உத்வேகத்துடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். கூடுதல் லாப கிடைக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்
துலாம்-Thulam
உங்களின் நற்குணங்களை பலரும் அறிந்து கொள்வர். தொழிலில் திட்டமிட்ட பணிகளை அக்கறையுடன் நிறைவேற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர். சிக்கலான விஷயங்கள் கூட இறுதியில் ஒரு நல்ல முடிவுக்கு வரும் தினம்.
விருச்சிகம்-Viruchigam
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்
தனுசு-Thanusu
குடும்பத்தினருடன் கலந்து பேசி பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்தருவார். நினைத்ததை தொடர் முயற்சியால் முடிக்கும் நாள்.
மகரம்-Magaram
ஒருவித படபடப்பு வந்து செல்லும். தலைசுற்றல் முழங்கால் வலி வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வாடிக் கையாளர்களால் மறைமுகப் பிரச்சினைகள் உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர் களுடன் பனிப்போர் வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
கும்பம்-Kumabm
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
மீனம்-Meenam
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …