Rasi Palan Today-12.09.2021

மேஷம்-Mesham
அலுவலகப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் கவனக் குறைவினால் ஏமாற்றத்துக்கு ஆளாக நேரிடும். பெண்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும்.
ரிஷபம்-Rishabam
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும். அக்கம் – பக்கத்தில் உள்ளவர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். கைமாற்றாக பணம் கொடுப்பதை தவிர்க்கவும்.
மிதுனம்-Mithunam
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்பட இடம் உண்டு. வாழ்க்கைத் துணை வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையில் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வாய்ப்பு அமையும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.
கடகம்-Kadagam
அரசு காரியங்களில் அலைச்சல் அதிகரிக்க இடம் உண்டு. சகோதரர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் பிற்பகலுக்கு மேல் விறுவிறுப்பாக நடக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.
சிம்மம்-Simmam
இது நாள் வரையில் வாழ்க்கையில் இடையூறு செய்தவர்களை இனம் கண்டு விலகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறு அளவில் போட்டி இருக்கும். வருமானம் சராசரி அளவில் இருக்கும். அரசு வகையில் அனுகூலம் பெற கூடுதல் முயற்சி தேவைப்படும். பெண்களுக்கு தாய் வழியில் சில உதவிகள் கிடைக்கும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். மற்றபடி தேவைகள் இறுதியில் நிறைவேறும்.
கன்னி -Kanni
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
துலாம்-Thulam
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். சிலருக்குப் பூர்வீக சொத்து பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். சிலர் புது ஏஜென்சி கூட எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அலைச்சல் தந்தாலுமே இறுதியில் வெற்றி பெறும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சிலரைப் பொறுத்தவரையில், வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சிலருக்கு ஆக்கபூர்வமான புதிய எண்ணங்கள் பிறக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்க இடம் உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகளை சிலர் கொள்முதல் செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.
தனுசு-Thanusu
திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.
மகரம்-Magaram
சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
கும்பம்-Kumabm
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும். மொத்தத்தில் திறமையால் சாதிப்பீர்கள்.
மீனம்-Meenam
புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். சில ருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிற்பகலுக்கு மேல் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …