Rasi Palan Today-16.09.2021

மேஷம்-Mesham
மனதில் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவு ஆறுதல் தரும். தொழில், வியாபாத்தில் லாபம் அதிகரிக்கும். வழக்கு, விவகாரத்தில் போராடி வெல்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
ரிஷபம்-Rishabam
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்
மிதுனம்-Mithunam
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கடகம்-Kadagam
உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும் வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
சிம்மம்-Simmam
இன்று உங்களது பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். நண்பர், உறவினர் உங்களை மதிப்புடன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்களுக்கு பொன், பொருள் சேரும். மொத்தத்தில் உழைப்பால் உயரும் நன்னாள். இந்நாள்.
கன்னி -Kanni
செயல்களில் கவனச்சிதறல் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். உறவினரால் செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும். அலைச்சல் அதிகம் காணப்படும் என்பதால் எதையும் நீங்கள் திட்டமிட்டுச் செய்யுங்கள்.
துலாம்-Thulam
சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை சிலர் மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். மனதிற்கு இதமான செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மை கள் உண்டாகும் நாள்.
தனுசு-Thanusu
பணவரவும் செலவுகளும் சமமாக இருக்கும் நாள். கேட்டிருந்த உதவிகள் கிடைக்கும். மாலையில் குடும்பத்துடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். செய்யும் செயல்களில் சிறு சிறு தடைகள் உண்டாகலாம். எனினும் சமாளித்து விடுவீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மற்றபடி, சின்னச் சின்ன அலைச்சல்கள் இருந்தாலுமே உங்களது முயற்சி வீண் போகாது.
மகரம்-Magaram
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
கும்பம்-Kumabm
இன்று மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். பெண்களுக்கு டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை உண்டாகலாம். தந்தையின் உடல் நிலையில் ஓரளவே முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை படிப்படியாகத் தென்படும்.
மீனம்-Meenam
கணவன் – மனைவி இடையே பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். மனசாட்சிப் படி செயல்படும் நாள்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …