Rasi Palan Today-19.09.2021

மேஷம்-Mesham
நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். பணியிடத்தில் அமைதி நிலவும். தள்ளிப் போன பயணம் சம்பந்தமாக நல்லதோர் முடிவு கிட்டும். வியாபாரிகளுக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.
ரிஷபம்-Rishabam
குடும்ப விஷயங்களை நண்பர்கள் அல்லது வேண்டியவர்கள் என்று எண்ணி பிறரிடம் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம். முன்கோபத்தை குறைத்து சூழ்நிலையை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைக் கடந்து ஓரளவே லாபம் ஈட்ட இயலும். மற்றபடி, சுமாரான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை இனம் கண்டு தவிர்க்கவும். அலைச்சல் அதிகம் இருந்தாலுமே உங்களது முயற்சி வீண் போகாது.
மிதுனம்-Mithunam
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கடகம்-Kadagam
சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குறை, நிறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்து கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
சிம்மம்-Simmam
இன்று சிலருக்கு வாயுத் தொல்லைகள் வந்து போக இடம் உண்டு. மனம் அதிக சஞ்சலம் அடைந்து கொண்டே இருக்கும். எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும் நாள். இறை வழிபாடு மட்டுமே உங்களுக்கு நன்மையை செய்யும். மொத்தத்தில் இது அலைச்சல் மிகுந்த சுமாரான நாள் தான். பொறுமையுடன் காரியங்களை செயலாற்ற வேண்டும்.
கன்னி -Kanni
சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
துலாம்-Thulam
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் தயவு கிடைக்கப்பெறும். சோதனைகளைக் கடந்து இறுதியில் சாதிக்கும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
ஆழ்ந்து யோசித்து தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு மனைவி வழியில் பக்க பலமாக இருப்பார்கள். வாகன ரீதியாக சிலருக்கு செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
தனுசு-Thanusu
எதிர்பார்த்த பணவரவு ஓரளவு கிடைக்கும். சிலருக்கு பிள்ளைகள் மூலமும் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணையால் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தந்தையின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். பணிச் சுமை ஓரளவு குறையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சற்றே அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்சனை ஏற்பட இடம் உண்டு. பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது சிலருக்குத் தாமதமாகும்.
மகரம்-Magaram
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் விஐபிகள்வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.
கும்பம்-Kumabm
இன்று பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதை பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள்.
மீனம்-Meenam
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களையும், வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். மாலையில் திடீர் என நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படலாம். அலுவலகப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …