Rasi Palan Today-21.09.2021

மேஷம்-Mesham
கனவு இல்லம் நனவாகக் காண்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை. பெண்களுக்கு மாமனார், மாமியார் முக்கிய பொறுப்புகளை நம்பி ஒப்படைப்பார்கள். பணியாளர்களுக்கு மேலிடத்தில் சிறு அதிருப்தி தெரிவிக்கப்படும்.
ரிஷபம்-Rishabam
மனதில் வீண் குழப்பங்களுக்கு இடம் தர வேண்டாம். புதிய முயற்சி அலைச்சல் தந்தாலுமே இறுதியில் சாதகம் ஆகும். குல தெய்வ பிரார்த்தனைகளை சிலர் நிறைவேற்றுவீர்கள். தாய் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கலாம். உடல் நலனில் கவனம் தேவை. மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும். சக வியாபாரிகளால் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப் படலாம்.
மிதுனம்-Mithunam
மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள் . தலைமையின் ஆதரவுடன் சாதிக்கும் நாள்.
கடகம்-Kadagam
சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர் கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமா வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
சிம்மம்-Simmam
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். உடல்நலனில் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பப் பெரியவர்களிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம். வியாபாரம் சற்று சுமாராகத் தான் இருக்கும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.
கன்னி -Kanni
துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடனான பிரச்சனையை சிலர் பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து போராடி வெல்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.
துலாம்-Thulam
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந் தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்தஒருவர் உங்களை தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
இன்று லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக் கிடையே ஒற்றுமை உண்டாகும்.
தனுசு-Thanusu
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
மகரம்-Magaram
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
கும்பம்-Kumabm
கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். மகிழ்ச்சியான நாள்.
மீனம்-Meenam
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள். வியாபாரத்தில் சற்று முன்னேற்ற மான சூழ்நிலை ஏற்படும்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …