Friday, December 1, 2023
Homeபரிகாரங்கள்ஆன்மிக பரிகாரங்கள்

ஆன்மிக பரிகாரங்கள்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

ஆன்மிக பரிகாரங்கள்

 • செல்வவளம் பெருகி நிலைக்க கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.
 • சனிக்கிழமை அன்று காலை 7-8க்குள் அரச மரத்தை 108 முறை சுற்றி பின்பு மரத்தடியில் லக்ஷ்மி படத்திற்க்கு தூப தீபம் காட்டி, நிவேதனம் செய்து வர பண புழக்கம் அதிகரிக்கும்.
 • 7 பல் உள்ள வெள்ளை பூண்டு வாங்கி பற்களை உரித்து 7 காய்ந்த மிளகாய்களையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி நம் வீடு, கடை ஆபீஸ் வாசலில் தொங்க விட்டு தூப தீபம் காட்டி வர வீட்டினுள் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் விரட்டப்படும். மேற்கொண்டு எதுவும் வராது. வாரம் ஒரு முறை மாற்ற வேண்டும்.
 • கொடுத்த கடன், திருட்டு போன பொருள் திரும்பப்பெற நவகோள்களில் செவ்வாய் அமரும் பாகமான தெற்குப் பகுதியில் 7 நல்லெண்ணை விளக்கு வைத்து தூபம் காட்டவும். இப்படி தொடர்ச்சியாக ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் காலை மணி 6:00 முதல் 7:00 க்குள் செய்தால் வராத கடன் வரும். திருடு போன பொருள் வரும். ஏமாற்றி பறித்த சொத்துகள் வரும். முழு நம்பிக்கையுடன் சங்கல்பம் செய்து வணங்க நிச்சயமாக பணம் திரும்பக் கிடைக்கும்
 • ஏவல்,பில்லி,சூனியம்,பார்வை இவைகளை நிவர்த்தி செய்யல் வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் தடியங்காய் எனப்படும் வெண் பூசணிக்காயை வாங்கி என்னவேன்று சொல்லமுடியாத பிரச்சனையில் இருப்பவர்கள்.குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கி பாதிக்கப்பட்டவரின் தலையை இடது பக்கமாக 108 முறை சுற்றி உடைக்க, சகல தோஷங்களும் பில்லி,சூனியம்,ஏவல்,செய்வினையும் விலகும்.பெண்கள் பூசணிக்காயை சுற்றி உடைக்க கூடாது குடும்பத்துக்கு ஆகாது….
 • பண தட்டுப்பாடு நீங்க-அடிக்கடி பணத்தட்டுபாடுகளில் சிக்கி கொள்வோர் 20 துளசி இலைகளை கொதிக்கவைத்து அதை குளிக்கும் நீரில் இட்டு( “ஓம் தன ப்ரதாயை நம”) எனும் மந்திரத்தை மனதினுள் கூறி கொண்டே குளித்து வர, நாட்பட்ட பணபிரச்சனைகள் நீங்கும்.
 • சிவன் கோயிலில் உள்ள அம்பாளுக்கு திங்கட்கிழமை காலை தும்பை மலர் சாற்றிவழிபட சாபங்கள் நீங்கும்
ஆன்மிக பரிகாரங்கள்
 • மகாலெட்சுமிக்கு வெள்ளிமாலை செந்தாமரை படைத்துவழிபட செல்வம் செழிக்கும்.
 • வீட்டில் மண்பாத்திரத்தில் தேன் அல்லது குங்கும ம் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை தரும்.
 • துர்க்கைக்கு செவ்வாய்கிழமை ராகு காலத்தில் அசோகபூ படைத்து வழிபட கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.
 • திருச்செந்தூர் முருகப்பெருமானை தினமும் மனதார வழிபட திருமண தடை அகலும்.
 • வெள்ளிமாலை பெருமாள் கோயிலில் உள்ள தாயாருக்கு செத்தாமரை படைத்து வணங்க கடன் தொல்லையில் இருந்துவிடுபடலாம்.
 • கருமாரி அம்மனுக்கு சனிக்கிழமை மாலை நீலசங்கு புஷ்பம் சாற்றி வழிபட நல்லவேலை கிடைக்கும்.
 • மிதுன லக்னம்-திருமண தடை நீங்க ஸ்ரீ ரங்கம் சென்று பெருமாளை வழிபட்டு பின்பு ராமானுஜரை வழிபட திருமண பாக்கியம் உண்டு.
 • மேஷ லக்னம், பரணி நட்சத்திரம் கொண்டவர்கள் எருமை மாடு பலி கொடுக்கும் காளியம்மன், எருமை மாட்டின் மீது அமர்ந்திருக்கும் காளி, கரூர் மேட்டுப்பட்டி துர்க்கை, திருச்சி மட்ட பாரப்பட்டி பத்ரகாளி, சிந்தலக்கரை வெட்காளியம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடும் பொழுது தங்களுக்கு நம்மை வந்து சேரும்.
 • பணம் வீண் விரயம் ஆகிக்கொண்டே இருந்தால் காலையில் பறவைகளுக்கு இனிப்பு வழங்க விரயம் கட்டுப்படும்.
 • பாலும் சர்க்கரையும் கலந்து ஆலமர வேரில் விடவும் அதில் இருந்து மண் எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ள செல்வ வளம் பெருகும்.
 • மிதுன லக்னம்-புத்திர தடை தோஷம் நீங்க சோட்டாணிக்கரை சென்று பகவதி அம்மன் வழிபாடு செய்வது -புத்திர பாக்கியம் உண்டு.
 • சரஸ்வதிக்கு புதன் காலை நந்தியாவட்டை படைத்து வணங்க கல்வி தடை நீங்கும்.
 • மேஷ லக்னம், அஸ்வினி நட்சத்திரம்கொண்டவர்கள் பழனி மலைகள் இருக்கும் தண்டாயுதபாணி சுவாமியையும், அடிவாரத்தில் இருக்கும் நக்கீரர் பகவானையும், கொடுமுடி மும்மூர்த்தி தளத்தையும் அவ்வப்போது மாதமொருமுறை வழிபட்டு வருவது மிகுந்த நன்மையை பெற்று தரும்.
 • ஆடி பெளர்ணமி விரதம் இருந்து அம்பாளை வழிபடுங்கள் நடப்பது அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.
 • பெளர்ணமியான அன்று கோவில்களிலும் ,வீடுகளிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நிறைய நற்பலன்களை அடையலாம்.
 • துர்க்கைக்கு செவ்வாய் கிழமை ராகுகாலத்தில் சிவப்பு ரோஜா படைத்து வணங்க குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
 • ஆடிவெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீமகாலட்சுமி துர்க்கை சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு நெய்தீபம் ஏற்றிவைத்து பூஜிப்பது வறுமையை போக்கும்.
 • மிதுனம் லக்னமும் மிருகசீரிடம் நட்சத்திரம் கொண்டவர்கள் பௌர்ணமி தோறும் மகான்களை வழிபடுவதும், கிரிவலம் வருவதும், திருவாதிரை தினத்தில் ராமானுஜரை வழிபடுவதும் அளப்பரிய நன்மையை பெற்றுத்தரும்.
 • வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றும் எண்ணெயில் ஒரு துண்டு “பச்சைக் கற்பூரம்” போட்டு வெள்ளிக்கிழமை தோறும் “சுக்ர” ஹோரையில் தீபம் ஏற்ற, “மஹாலட்சுமி” விரும்பி வந்து வேண்டிய .சகல பாக்கியங்களையும் தருவார்….
 • குருதசை நடக்கிறதாகுரு பாதகாதிபதி ஆக இருக்கிறாரா கவலை வேண்டாம் எளிய பரிகாரம் யானை நெருஞ்சி முள் எடுத்து வீட்டின் பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள் குரு உங்களுக்கு எந்தக் கெடுதலையும் செய்யமாட்டார்.
 • பெருமாள் கோயில் தாயாருக்கு செவ்வாய் மாலை செண்பக மலர் சாற்றி வழிபட கணவர்/மனைவி உடல் நலம் பெறும்.
 • வெளியில் செல்லும் போது அருகம்புல்லை எடுத்து சென்றால் சென்ற காரியம் நல்லதாய் நடக்கும்…
 • கேது உங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எந்த வீட்டில்” அமர்ந்திருக்கிறாரோ..அந்த” வீட்டின் காரகத்தைக்குறிக்கும் உடல் உறுப்புகளில் உள்ள ரோமங்களை அதாவது”முடியை அவ்வப்போது”நீக்கி விடவும்..

உதாரணமாக.. லக்னத்தில் கேது எனில்
தலை முடியை.. அவ்வப்போது”மொட்டை”அடியுங்கள்

இரண்டில் கேது எனில்
மீசை, தாடியை நீக்குங்கள்..

இது போல…. செய்து வந்தால்.. கேதுவின் பாதிப்பு குறையும்..

 • ராகு காலத்தில் விஷக் கலை அதிகம். அமிர்தக் கலை குறைவு.அரசம்,வேம்புவின் அடியில் இரு நாகம் இணைந்த சிலையில் உள்ள சிவலிங்க வழிபாடு சர்ப்ப சாந்திக்கு மிகவும் ஏற்றது..

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular