Rasi Palan Today-28.09.2021

மேஷம்-Mesham
வியாபாரிகளுக்கு அரசால் அனுகூலம் உண்டு. நட்பு வட்டாரத்தில் விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. மேலதிகாரியின் உதவியால் பணிகளில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
ரிஷபம்-Rishabam
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். பெண்களின் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்பர். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சியை மேலதிகாரி பாராட்டுவார்.
மிதுனம்-Mithunam
உறவினர் மத்தியில் நற்பெயர் காண்பீர்கள். தொழிலில் வளர்ச்சிப் பணி இனிதாக நிறைவேறும். சிலருக்கு எதிர் காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். பெரும்பாலும் குடும்பத்தின் தேவை குறைவின்றி பூர்த்தியாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி சிலருக்கு வந்து சேரும். பெண்கள் குடும்ப நலனில் கவனம் செலுத்துவர்.
கடகம்-Kadagam
நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். சிலருக்கு காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் சிலருக்குக் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். சிறப்பான நாள்.
சிம்மம்-Simmam
எதிர்பார்க்கும் காரியங்களில் அலைச்சல் இருந்தாலும் உங்களது முயற்சி வீண் போகாது. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலர், தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பிற்பகலுக்கு மேல் வீண் செலவுகள் மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். எனினும் அதனை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
கன்னி -Kanni
தொழிலில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்துப் போக வேண்டிய சூழல் ஏற்படும். பெண்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு குறித்து புதிய நம்பிக்கை பிறக்கும். மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோதனைகளை கடந்து சென்று இறுதியில் முயற்சியால் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.
துலாம்-Thulam
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கி தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.
தனுசு-Thanusu
புதிய முயற்சிகளை பொறுமையுடன் செய்யவும். ஓரளவு தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு சிலருக்கு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். எனினும், அதில் இருந்து மீண்டு விடுவீர்கள். சக வியாபாரிகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.
மகரம்-Magaram
தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.
கும்பம்-Kumabm
பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். தொழிலில் புதிய இனங்களில் முதலீடு செய்வீர்கள். காதலில் சில சங்கடங்கள் ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் தேவை.
மீனம்-Meenam
வியாபாரிகள் நீண்ட நாளாக எதிர்பார்த்து வந்த தனவரவு உண்டாகும். குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது நல்லது. முக்கிய பிரமுகரின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு சில ஆலோசனைகளை வழங்கி நல்ல பெயர் எடுப்பீர்கள்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …