Rasi Palan Today-21.10.2021
மேஷம்-Mesham
வியாபாரிகள் நீண்ட நாளாக எதிர்பார்த்து வந்த தனவரவு உண்டாகும். குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது நல்லது. முக்கிய பிரமுகரின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு சில ஆலோசனைகளை வழங்கி நல்ல பெயர் எடுப்பீர்கள்.
ரிஷபம்-Rishabam
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.
மிதுனம்-Mithunam
தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கலாம். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். உழைப்பால் வெற்றி அடையும் நாள்.
கடகம்-Kadagam
உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.
சிம்மம்-Simmam
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத் துணையால் சில சங்கடங்கள் ஏற்பட்டு மனச்சஞ்சலத்தை ஏற்படுத்தும். பொறுமை மிக அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும்.
கன்னி -Kanni
செயல்களில் தைரியம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி மற்றும் பொறாமை குறையும். சிலர் கடனில் ஒருபகுதியைச் செலுத்துவீர்கள். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வழிபாட்டில் ஈடுபடுவர்.
துலாம்-Thulam
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். எனினும், உங்களது உழைப்பு வீண் போகாது.
விருச்சிகம்-Viruchigam
கடினமான காரியங்களையும் எளிதாக, திட்டமிட்டு முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
தனுசு-Thanusu
எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.
மகரம்-Magaram
புதிய முயற்சிகளை பொறுமையுடன் செய்யவும். ஓரளவு தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு சிலருக்கு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். எனினும், அதில் இருந்து மீண்டு விடுவீர்கள். சக வியாபாரிகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.
கும்பம்-Kumabm
மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். போராடி வெல்வீர்கள்.
மீனம்-Meenam
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …