Rasi Palan Today-22.10.2021
மேஷம்-Mesham
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். பெண்களின் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்பர். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சியை மேலதிகாரி பாராட்டுவார்.
ரிஷபம்-Rishabam
நல்லோரின் நட்பை பெற்று மகிழ்வீர்கள். எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி குறையும். பணவரவு தேவைகளை நிறைவேற்றும் படியாக இருக்கும்.சிலருக்கு மனைவி வழியில் செலவுகள் ஏற்பட இடம் உண்டு.
மிதுனம்-Mithunam
இன்று காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். பண வரத்து ஓரளவே திருப்தி தரும். சிலருக்கு மருத்துவ செலவுகள் குறையலாம். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், அவற்றை எல்லாம் சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள்.
கடகம்-Kadagam
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்க இடம் உண்டு. சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். சிலர் அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும்.
சிம்மம்-Simmam
இன்று பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதை பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள்.
கன்னி -Kanni
மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் உண்டாகும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
துலாம்-Thulam
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய கடனைத் தீர்க்கப் புது வழி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். உழைப்பால் உயரும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
சிலருக்குத் தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசு வகையில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் முயற்சி வீண் போகாது. சிலருக்கு, சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட இடம் உண்டு. பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு சிலருக்கு கிடைக்கப்பெறலாம். வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும்.
தனுசு-Thanusu
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும். அக்கம் – பக்கத்தில் உள்ளவர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். கைமாற்றாக பணம் கொடுப்பதை தவிர்க்கவும்.
மகரம்-Magaram
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எனினும், முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே நடைபெறும். உங்கள் முயற்சிகளுக்கு பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் இன்று ஒரு சுமாரான நாள் தான்.
கும்பம்-Kumabm
உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.
மீனம்-Meenam
தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப் பால் உயரும் நாள்.