Friday, December 8, 2023

Rasi Palan Today-01.11.2021

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

Rasi Palan Today-01.11.2021

மேஷம்-Mesham 

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். அலுவலகப் பணிகளை குறித்த நேரத்துக்குள் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்-Rishabam 

உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப் பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

மிதுனம்-Mithunam 

சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பணிகளை குடும்பத்தினர் பகிர்ந்துகொள் வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

கடகம்-Kadagam 

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம்… சிலருக்கு உத்தியோக மாற்றம் கூட உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட இடம் உண்டு. எனினும் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக் கிடையே திடீர் மனவருத்தம் ஏற்பட்டு விலகலாம். முடிந்த வரையில் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் மனதறிந்து நடப்பது நல்லது. இது ஒரு சுமாரான நாள்.

சிம்மம்-Simmam 

ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். உறவினர் மற்றும் நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். எனினும் எதையும் எதிர் நீச்சல் போட்டு இறுதியில் வெல்வீர்கள். கவலை வேண்டாம்.

கன்னி -Kanni

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்பட இடம் உண்டு. வர வேண்டிய பணத்தை சிலர் போராடி வசூலிப்பீர்கள். தொழிலில் ஓரளவு லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் இறுதியில் பூர்த்தியாகும் நாள்.

துலாம்-Thulam 

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட இடம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பு வீண் போகாது. விடா முயற்சியால் வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்-Viruchigam 

அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு-Thanusu 

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மகரம்-Magaram 

மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் உண்டாகும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கும்பம்-Kumabm 

இன்றைய தினத்தில் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபார நடைமுறை சீராக இருக்கும். அளவான பணவரவு சிலருக்குக் கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பிள்ளைகளின் வகையில் சிலருக்கு செலவுகள் ஏற்படலாம்.

மீனம்-Meenam 

மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையும். தொழில், வியாபாரத்தில் இலக்கு படிப்படியாக நிறைவேறும். சுமாரான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம். பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular