Friday, March 29, 2024
Homeராசிபலன்புத்தாண்டு பலன்கள்-2022ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2022-கன்னி

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2022-கன்னி

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

புத்தாண்டு பலன்கள்-2022-கன்னி

(உத்திரம்2,3,4-ஆம் பாதங்கள்,அஸ்தம்,சித்திரை1,2-ஆம் பாதங்கள்)

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே , எவ்வளவு அவசரமாக வேலை இருந்தாலும் பரபரப்பு இல்லாமல் சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்துகொள்ளும் உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  • 2022 – ஆம் ஆண்டில் உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனிபகவான் இவ்வாண்டு உங்கள் ராசிக்கு 5 – ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும்.
  • எதிலும் சிறப்பாக செயல்பட்டு படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள்.
  • தொழில் , வியாபாரத்தில் பல புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.
  • கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தி பெருகும்.
  • உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருப்பதால் எல்லா பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்கமுடியும்.
  • எதிர்பார்க்கும் உயர்பதவிகளும் , இடமாற்றங்களும் கிடைக்கும்.
  • 13-4-2022 வரை குரு 6 – ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் , இவ்வாண்டில் முதல் மூன்று மாதங்கள் மட்டும் நீங்கள் சற்று பொறுமையுடன் இருக்கவும்.
  • பணவரவுகளில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது.
  • 13-4-2022 முதல் உங்கள் ராசிக்கு 7 – ல் குரு சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
  • பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருப்பது மட்டுமின்றி நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் காலமாக இருக்கும்.
  • சிலருக்கு சொந்த வீடு , மனை , வாகனங் கள் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.
  • குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும் , மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும்.
  • புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
  • பூர்வீகச் சொத்துகளால் ஒரு சிலருக்கு ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும்.
  • உற்றார் – உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.
  • கொடுக்கல் வாங்கல் சரளமாக அமைவது மட்டுமின்றி பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடையமுடியும்.
 புத்தாண்டு பலன்கள்-2022-கன்னி
புத்தாண்டு பலன்கள்-2022-கன்னி
  • பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.
  • ஆன்மிகதெய்வீக காரியங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
  • உங்கள் ராசிக்கு 3 , 9 – ல் சஞ்சரிக்கும் கேது , ராகு வரும் 12-4-2022 – ல் ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத்தின்மூலம் கேது ஜென்ம ராசிக்கு 2 – லும் , ராகு 8 – லும் சஞ்சாரம் செய்ய இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வது,நேரத்திற்கு உணவு உண்பது , தேவையற்ற அலைச்சல்களைக் குறைத்துக்கொள்வது நல்லது.
  • கணவன்- மனைவியிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். குடும்ப விவகாரங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.
  • திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 5 – ல் சஞ்சரிக்கும் சனிபகவான் அதிசாரமாக 29-4-202 முதல் 12-7-2022 வரை ருண , ரோக ஸ்தானமான 6 – ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் இக்காலங்களில் மிகவும் அனுகூலமான பலனை அடையும் யோகம் உண்டாகும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular