புத்தாண்டு பலன்கள்-2022-கும்பம்(அவிட்டம்3 , 4 – ஆம் பாதங்கள், சதயம்,பூரட்டாதி 1 ,2 ,3 -ஆம் பாதங்கள்)
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே , எந்த பிரச்சினைகளையும் ஆராய்ந்து நியாயமாகத் தீர்த்துவைக்கும் அறிவாற்றல் கொண்ட உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2022 – ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு 2 , 11 க்கு அதிபதியான குரு பகவான் ஆண்டுத் தொடக்கத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் , நீங்கள் எதிலும் சிக்கனமாக இருப்பது , சிந்தித்து செயல்படுவது நல்லது.
முதல் மூன்று மாதங்கள் உங்களுக்கு சற்று சோதனைகள் நிறைந்ததாக இருந்தாலும் , 13-4-2022 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 26 சஞ்சாரம் செய்ய இருப்பதும்,12-4-2022 – ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தின்மூலம் உங்கள் ராசிக்கு ராகு 3 – ஆம் வீட்டிலும்,கேது 9 – ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் , கஷ்டங்கள் படிப்படியாக விலகி முன்னேற்றமான பயன்களை அடையமுடியும்
பொருளாதார நெருக்கடிகள் விலகி பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும்.கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடையலாம். பணவிஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது , முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
ஆடம்பர செலவுகளைக் குறைத்தால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும்.குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் அசையும் அசுையா சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும்.
பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த கெடுபிடிகள் , வம்பு , வழக்குகள் யாவும் விலகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும் . தொழில் , வியாபாரத்தில் இருந்த போட்டி , பொறாமைகள் சற்றே குறையும்.
கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அதுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தி பெருக்கிக்கொள்ள முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்படும் என்றாலும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிட்டும். பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.
வெளியூர் , வெளிநாடுகளுக்குத் சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது . உங்கள் ராசியாதிபதி சனி இவ்வாண்டு ஜென்ம ராசிக்கு 2 – ல் சஞ்சரித்து ஏழரைசனியில் விரயச்சனி நடைபெறுவதால் , தேவையற்ற செல்வகளை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள்
ஏற்படும்.
பயணங்களில் கவனமுடன் இருப்பது , உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார் என்றாலும் எந்தவொரு விஷயங்களிலும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதையும் எதிர்கொண்டு வெற்றிபெற கூடிய வலிமையைப் பெறுவீர்கள் .