Friday, April 19, 2024
Homeஜோதிட தொடர்செவ்வாய்-புதன்-குரு பரிவர்த்தனை

செவ்வாய்-புதன்-குரு பரிவர்த்தனை

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

செவ்வாய்- புதன்
  • செவ்வாய் இல்லமான மேஷம் , விருச்சிகம் இல்லத்தில் புதன் இருக்க புதன் இல்லமான கன்னி , மிதுனத்தில் செவ்வாய் உள்ள கிரக நிலை பரிவர்த்தனமான நிலையில் புத்தி சாதுர்யமும் , அத்தோடு தைரியமும் மனே பலத்துடன் வேகமாக செயல்படும் திறனையும் , தான் செய்யும் தொழில் வகையில் ஏற்படும்.
  • சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும் கூட மற்றவர்களை கோபப்பட்டு தன்னுடைய அடக்கியாளும் திறனை காட்டுபவர் ஆகவும் இருப்பவர்.
  • இவர்கள் புதனின் கட்டுப்பாட்டில் இணைந்து செயல்படும் போது எதை செய்வதாலும் அதில் ஒரு நுட்பம் இருக்கும்.
  • இவர்களை பிறர் சுட்டி காட்டி சொல்லும் போது அது அவருக்கு இரக்கத்தோடு ஊறிய செயல் என்றுதான் சொல்லும் நிலையை பெற்றவர்கள் ஆவர்.
  • இவர்களுக்கு இரும்பு , நெருப்பு , மின்சாரம் , ரியல் எஸ்டேட் சம்பந்தமான வியாபாரத் தொடர்புகள் சிறப்பை தரும்.
  • இவர்களில் பலர் அரசு வகையில் காவல் துறை , புலன் ஆய்வுதுறை நீதித்துறை போன்றவைகளில் சிறந்து விளங்கு கின்றனர். அரசியல் தொடர்பும் இவர்களுக்கு ஏற்படுகின்றது.
  • செவ்வாயும் புதன் தொடர்பு பெற்ற நிலையில் உள்ள இவர்களுக்கு நரம்பு தோல் மார்பு சம்பந்தப்பட்ட வகையில் ரத்தத்தோடு தொடர்பு கொண்ட தொல்லைகள் ஏற்படுகின்றது.
  • இவ்வமைப்பு பெற்றவர்களுக்கு உடன் பிறப்பு வகையில் ஒற்றுமை குறைவு ஏற்படுகிறது. தாய் வழி பாதிக்கிறது.
  • இப்பரிவர்த்தனமானது மிதுன லக்கினத்தவர்களுக்கு 1 , 11 , 4,11,2 , 11 , 4 மற்ற லக்கினங்களுக்கு ஏற்படும் பரிவர்த்தனையானது.சிறப்பான பலன்களை தருவதில்லை.அத்தோடு செவ்வாய் புதனின் பகை தன்மை இப்பரிவர்த்தனையில் மாறி செயல்படுகிறது.
செவ்வாய்-குரு
  • செவ்வாய் இல்லங்களில் குருவும் , குருவின் இல்லங்களில் செவ்வாயும் இருக்கும் , கிரக நிலை பரிவர்த்தனையானது. புத்திர தோஷத்தை தருகிறது , கர்ப்ப சேதங்களை தருகிறது.
  • இப்பரிவர்த்தனை பெண்கள் ஜாதகத்தில் ஏற்படும் பட்சத்தில் பெரும் தோஷத்தைதர காரணமாகிறது.
  • இவர்களோடு சனி , ராகு , கேது , சூரி சேர்ந்து விட்டால் குழந்தைகள் பிறப்பு அவர்களின் அரவணைப்பு நன்மைகள் இவை எல்லாம் எதிர்பார்த்து ஏமாறும் நிலையே காணும்.
  • இந்த பரிவர்த்தனை அரசு வகை நிர்வாகங்களுக்கு , உயர்ந்த பதவிகளுக்கு தைரிய விரியத்துடன் செயல்படும் காரியங்களுக்கு , வாய் சாதுர்யம் பல மொழிகளை கற்று தேர்ச்சி அடையும் திறன் போன்றவைகளுக்கு இப்பரிவர்த்தனை சிறப்பு வர்த்தனையாய் செயல்படும்.
  • இவர்களுக்கு பொருளாதார வசதிகள் என்பது வெகு சீக்கிரத்தில் வருவதல்ல , கடின உழைப்பு , மேல் மட்ட ஆட்களின் ஆதரவு , தெய்வ அனுக்கிரகம் ஆகியவை மூலமே கிடைக்கிறது.
  • இவர்கள் பணம் புழக்கம் உள்ள தொழில்களில் அதிகமாக உள்ளனர் . இவர்களுக்கு எந்திர தொழில் வகைகளும் , இரசாயனம் , கெமிக்கல் , மெடிக்கல் , பெறியியல் , கல் , மண் சம்பந்தப்பட்ட தொழில் தொடர்புகள் தண்டிக்கும் ஆக்கினை தொழில்கள் சிறப்பு.
  • மேசம் , கடகம் , சிம்மம் , விருச்சிகம் , தனுசு போன்ற லக்னங்களுக்கு சிறப்பான பலன்களை தருகிறது. இந்த லக்னங்களில் பிறந்தவர்களுக்கு புத்திர பாவம் கெடுவதில்லை. மற்ற லக்னங்களுக்கு இப்பரிவர்த்தனையானது சிறப்பான பலன்களை தருவதில்லை.
  • மேஷ லக்னத்திற்கு 1 , 9 கடகத் திற்கு 9 , 10 சிம்மத்திற்கு 5 , 9 விருச்சிகத்திற்கு 1 , 5 , 2 , 1 தனுசிற்கு 4 , 5 , 1 , 5 போன்ற பரிவர்த்தனங்கள் சிறப்பான பலன்களை தருவதில் தவறுவதில்லை.
  • இப்பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் ஐராவதாம்சம் , பர்வதாம்சம் , குபேராம்சம் பெற்றிருந்தால் இவர்களுக்கு உயர்ந்த ராஜ்ய பதவிகள் நாடி வரும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular