Tuesday, March 19, 2024
Home108 திவ்ய தேசம்32000 முறை அஷ்டாஷர மந்த்ரத்தை மூன்று நாட்கள் இந்த ஆலயத்தில் தங்கி ஜெபித்தால் அவர்கள் செய்கின்ற...

32000 முறை அஷ்டாஷர மந்த்ரத்தை மூன்று நாட்கள் இந்த ஆலயத்தில் தங்கி ஜெபித்தால் அவர்கள் செய்கின்ற , செய்த அத்தனைப் பாவங்களும் விலக்கும் சக்திமிக்க திவ்ய தேசம் -திருசெம்பொன் செய்கோவில்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

திருசெம்பொன் செய்கோவில் ( திருநாங்கூர் )

பெருமாளை ஒரு சமயத்தில் பார்த்தால் விளையாட்டுக் குழந்தை,இன்னொரு சமயத்தில் பார்த்தால் மகா குரு . இப்படி திருமால் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை தினமும் அரங்கேற்றி விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பது அனுபவப்பட்டவர்களுக்குத் தான் தெரியும்.

ராவணனுக்கும் மோட்சம் கொடுத்த பெருமாள். இராவணனைக் கொன்ற ஸ்ரீராமனுக்கும் கொலை பாதக பிரம்மஹத்தி தோஷத்தையும் போக்கினார். அத்தகைய சம்பவங்களில் ஒன்று இந்த செம்பொன் செய்கோவிலிலும் நடந்தது என்பது மிகவும் சிறப்பு. இந்த கோவில் சீர்காழிக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இதுவும் திருநாங்கூரில் உள்ள ஸ்தலம்.

திருசெம்பொன் செய்கோவில்

மூலவர் ஸ்ரீ பேரளுளாளர் பெருமாள். நின்ற திருக்கோலம்.

வலதுபுற திருமகள் இடது புறத்தில் பூமிதேவி தாயார் அல்லி மாமலர் நாச்சியார்.

தீர்த்தம் ஹேமபுஷ்கரிணி.

விமானம் கனக விமானம்.

உற்சவர் செம்பொன்னரங்கர்.

இந்தக் கோவிலிலுள்ள குளத்தில் குளித்து , 32000 முறை அஷ்டாஷர மந்த்ரத்தை மூன்று நாட்கள் இங்கேயே தங்கி ஜெபித்தால் அவர்கள் செய்கின்ற , செய்த அத்தனைப் பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

தை அமாவாசைக்கு அடுத்த நாள் இங்கு நடக்கும் கருட சேர்வை மிகவு விசேஷமானது. ருத்ரன் , த்ருட நேத்ரமுனி பெருமானுக்கு நேரிடையாகவே பெருமாள் தரிசனம் கொடுத்ததாக வரலாறு.

இராவணனை வதம் செய்த பின்னர் . இராமர் அயோத்திக்கு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது இந்த ஸ்தலத்தில் தியானம் செய்து கொண்டிருந்த த்ருடநேத்ர முனிவரைச் சந்தித்தார். இராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க , தங்கத்தால் ஒரு பசு செய்து அதற்கு இந்த ஆஸ்ரமத்திலேயே பூஜை செய்து அதை ஒரு பிராம்மணருக்குத் தானம் செய்ய வேண்டும் என்று அந்த தருட நேத்ர முனிவர் சொன்னார். இராமனும் அவ்வாறே இந்த ஸ்தலத்தில் செய்தான் . இராமனிடமிருந்து தங்கப்பசுவை வாங்கிக் கொண்ட அந்தப் பிராம்மணன். அந்த தங்கப் பசுவைக் கொண்டு பெருமாளுக்கு இந்தக் கோயிலைக் கட்டினான். அதனால் இந்த ஊர்க் கோயிலுக்கு செம்பொன் செய் கோவில் என்று பெயர் வந்தது என்று கூறுவர். உண்மையில் மிகச் சிறப்பான அமைப்புகளைக் கொண்டது இந்தக் கோயில்.

திருசெம்பொன் செய்கோவில்

பரிகாரம்

ராம பெருமானுக்கே பிரம்மஹஸ்தி தோஷம் போன கோயில் ஸ்தலம் என்பதால் சாதாரண பக்தர்களும் தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களைப் போக்குவதற்கு, எதிர்கால இல்லற வாழ்க்கையில் பிரச்சனை இல்லாமல் மாற்றுவதற்கும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் போதும். பசுவைக் கொன்றவர்வர்கள், பிறர் சொத்தை ஏமாற்றி அபகரித்தவர்கள், பொய் சொல்லி மற்றவர்கள் குடும்பத்தை கெடுத்தவர்கள் ஆகிய அத்தனை பேர்களும் தங்கள் தவறுகளை மனதில் வைத்து கஷ்டப்படாமல் இங்கு வந்து பரிகாரம் செய்தால் போதும் அவர்களை மன்னித்து பாவங்களை களைந்து விடுவார்.

கோவில் இருப்பிடம்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்50பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6குரோதி வருட பலன்கள் 20246சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular