இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்கு வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.
மிதுனம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில்எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.
கடகம்
இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.
கன்னி
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதரவகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு மின்சார பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். தாய் வழியில் ஆதரவுப் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
துலாம்
மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதரவு கிட்டும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
விருச்சிகம்
உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும்.
தனுசு
தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற் படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்ல வும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதர வாக இருப்பார். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் வீண் செலவு கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மகரம்
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சிலருக்கு பிள்ளைகள் மூலமும் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். பணிச் சுமை குறையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.
கும்பம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சிலமுக்கியமுடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.
மீனம்
குடும்பத்தில் அடிப் படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வழிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.