Monday, July 15, 2024
Homeபரிகாரங்கள்குபேர வாழ்வு தரும் அரச இலை வழிபாடு !!

குபேர வாழ்வு தரும் அரச இலை வழிபாடு !!

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

அரச இலை வழிபாடு

16 வகை செல்வங்களும் பெற்று ஒரு மனிதன் வாழ வேண்டும் என்றால் அவன் எத்தனை பெரிய பாக்கியவானாக இருக்க வேண்டும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அத்தனை பெரிய புண்ணியம் செய்து பெறவேண்டிய இந்த பலனை இந்த ஒரு தீபம் ஏற்றும் போது நம்மால் பெற முடியும் என்று ஆன்மிகம் சொல்கிறது.

இந்த தீபத்தை நாம் சனிக்கிழமையில் தான் ஏற்ற வேண்டும். சனிக்கிழமை காலை முதல் மாலை வரை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இந்த விளக்கை அரச மரத்தின் இலை மீது வைத்து தான் ஏற்ற வேண்டும். அந்த இலையை நாம் சனிக்கிழமையில் தான் பறிக்க வேண்டும். முதல் நாளே பறித்து வைக்கக் கூடாது. அது மட்டுமின்றி மாலை 6 மணிக்கு மேல் மரத்திலிருந்து இலைகளை பறிக்கக் கூடாது.

 அரச இலை வழிபாடு

சனிக்கிழமை அன்று காலை எழுந்து குளித்து முடித்த பிறகு அரச மர இலை ஒன்றை எடுத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு சில்வர் தவிர வேறு எது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தத் தட்டில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்த பிறகு இந்த இலைக்கும் மஞ்சள், குங்குமம், பொட்டு வைத்து தட்டில் வைத்து விடுங்கள்.

இப்போது தட்டில் இருக்கும் இலையின் மீது ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள்.விளக்கிற்கும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து போட்டு இலுப்பை எண்ணெய் ஊற்றி வீட்டில் சிவன், விஷ்ணு, பிரம்மா, மகாலட்சுமி தாயார் இவர்களின் யாரேனும் ஒருவர் படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.

இந்த தீபத்தை நீங்கள் அரச மரத்தின் அடியில் ஏற்று வைத்து ஏற்றினால் இன்னும் விசேஷம். முடியாதவர்கள் மட்டும் வீட்டில் பூஜை அறையில் இதை செய்யலாம். இந்த தீபத்தை சனிக்கிழமை அன்று ஏற்றத் தொடங்கிய தொடர்ச்சியாக 16 சனிக்கிழமை ஏற்ற வேண்டும்.

 அரச இலை வழிபாடு

இப்படி ஏற்றி வரும் நாளில் உங்கள் துன்பமெல்லாம் விலகி நீங்கள் எதிர்பாக்காத வகையில் உங்கள் வாழ்க்கைத் தர முயற்சி நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலையில் வாழ்வீர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த அரச மரமானது இருக்கும் விருட்சங்களின் எல்லா தலையாய விருச்சமாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்கள் குடி கொண்டிருக்கும் இடமாக இருக்கிறது.

உலகத்தில் அனைத்திற்கும் மூலகாரணம் இவர்கள் மூவரும் தான். இவர்கள் மூவரையும் ஒரே நேரத்தில் வணங்கும் பொழுது இவர்களின் ஆசி பெற்ற குபேரர், மகாலட்சுமி தாயார், சரஸ்வதி தேவி, தேவர்கள், கிரகங்கள் என அனைவருமே உங்களுக்கு அருள் புரிவார்கள் என்று சொல்லப்படுகிறது.

சனிக்கிழமைகளில் ஏற்றப்படும் இந்த ஒரு தீபம் உங்கள் வாழ்க்கையில் பதினாறு வகை செல்வங்களையும் பெற்று வாழ்க்கையில் மென்மேலும் உயர்ந்த குபேரர் என்ற பெரும் வாழ்க்கையை வாழ துணை செய்யும். இந்த தீபத்தை நம்பிக்கையுடன் ஏற்றி வாழ்க்கையில் சகல சம்பத்துகளையும் பெற்று நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்ளலாம்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்531அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்99குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்35நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்17ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular