Friday, July 26, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் -பகுதி -52-8-ம் பாவாதிபதி நின்ற பலன்கள் -பராசரர்

அடிப்படை ஜோதிடம் -பகுதி -52-8-ம் பாவாதிபதி நின்ற பலன்கள் -பராசரர்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

8-ம் பாவாதிபதி நின்ற பலன்கள்-பராசரர் 

8-ம் பாவாதிபதி (8th House in Astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் வெளிப்படையான சந்தோஷம் இல்லாதவராகவும், காயங்களில் துன்பப்பட்டவராக இருப்பார். அவர் கடவுள்களிடம், பிராமணர்களிடம் அல்லது மதம் சம்பந்தப்பட்டவர்களிடமும் விரோதியாக இருப்பார்.
 
8-ம் பாவாதிபதி(8th House in Astrology)  இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் உடம்பு பலம் இல்லாதவராகவும், சிறிது செல்வம் பெற்றவராகவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெற முடியாத வராகவும் இருப்பார்.
 
8-ம் பாவாதிபதி(8th House in Astrology)  மூன்றாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் சகோதரத் தன்மை இல்லாமலும், மகிழ்ச்சி இல்லாமலும், சோம்பல் உள்ளவராகவும், வேலையாட்களும், பலம் இல்லாதவராகவும் இருப்பார்
 
8-ம் பாவாதிபதி நான்காமிடத்தில் இருந்தால் ஜாதகர் தாயிடமிருந்து பிடுங்கிக் கொள்ளுதல், அவருக்கு வீடு நிலம் மகிழ்ச்சியின்மை. சந்தேகமில்லாமல் நண்பர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தல் போன்றவை இருக்கும்.
 
8-ம் பாவாதிபதி ஐந்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் மந்த புத்தி  உடையவராகவும்,குறைந்த அளவு குழந்தைகளுடன் ,நீண்ட ஆயுளுடன் செல்வதுடன்  வாழ்வார் .
 
8-ம் பாவாதிபதி(8th House in Astrology)  6ம் இடத்தில் இருந்தால் ஜாதகர் எதிரிகளை வெற்றி கொள்வார், நோயினால் வருத்தபடுவார் .குழந்தை பருவத்தில் பாம்பு,தண்ணீர் இவற்றால் ஆபத்துக்குள்ளாவார் .
 
8-ம் பாவாதிபதி 7ம் இடத்தில் இருந்தால் ஜாதகர் இரண்டு மனைவிகளை பெறுவார் .8ம் வீட்டு அதிபதியுடன் அசுபர்கள் சேர்ந்து 7ம் இடத்தில இருந்தால்,அங்கு கட்டாயம் ஜாதருடைய வியாபாரம் சரிவை சந்திக்கும் .
 
8-ம் பாவாதிபதி எட்டாமிடத்தில் இருந்தால் ஜாதகர் நீண்டநாள் வாழ்வார். 8-ம் பாவாதிபதி பலவீனமாக இருந்து எட்டாம் இடத்தில் இருந்தால் ஆயுளானது மத்திமமாகவும், ஜாதகர் திருடனாகவும் தன்மீது கெட்ட பெயர் ,பழி  சொல்லிக்கொண்டு, மற்றவர்களையும் குற்றம் சாட்டுதல், பழி போடுதல் போன்ற குணங்கள் இருக்கும்.
 
8-ம் பாவாதிபதி(8th House in Astrology)  ஒன்பதாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் மதத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்தல், நாத்திகம் பேசுதல்,துஷ்ட  மனைவியை பெறுதல் மேலும் அடுத்தவர்களின் சொத்தை/ செல்வத்தை திருடுதல் போன்ற குணங்கள் இருக்கும்.
 
 
8-ம் பாவாதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகருக்கு  பெற்றோரின் அன்பு கிடைக்காது. கோள் சொல்லுதல், ஜீவன ஆதாரத்தை பறிகொடுத்தல்  முதலியவை இருக்கும். 8ம் அதிபதி சுபருடன் சேர்ந்தோ அல்லது சுபரின் பார்வை பெற்று இருப்பின்  இந்த கெட்ட குணங்கள் ஏற்படாது
 
8-ம் பாவாதிபதி 11-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் சிறுவனாக இருக்கும் பொழுது செல்வம் இல்லாத நிலையும், கஷ்டமும்பட்டவர் பின்னர் மகிழ்ச்சி அடைவார்.8-ம் பாவாதிபதி சுபருடன்  சேர்ந்து பதினோராம் இடத்தில் கட்டாயம் இருந்தால் ஜாதகர் நீண்ட நாள் வாழ்வார்.
 
8-ம் பாவாதிபதி பன்னிரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் கெட்டசெயல்களுக்கு செலவிடுவார். மேலும் அவர் வாழ்நாளும் குறைந்துவிடும்.8-ம் பாவாதிபதி அசுபருடன் சேர்ந்து 12ம் இடத்தில இருந்தால் மேற்கூறிய பலனை அதிகப்படுத்தும் .

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular