Thursday, March 28, 2024
Homeதசா புத்தி பலன்கள்குரு தசா-புத்தி பலன்கள்

குரு தசா-புத்தி பலன்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

குரு தசா-குரு புத்தி பலன்கள்

குரு தசாவில்(Guru Dasa) குரு புத்தியானது 2வருடம் 1 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.

குரு பலமாக இருந்தால் ஆன்மீக- தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, புண்ணிய நதிகளில் நீராடும் யோகம், ஹோமம், யாகம் போன்றவை செய்யும் வாய்ப்பு, பல வித்தைகளிலும், சங்கீதத்திலும் தேர்ச்சி, கல்வியில் மேன்மை, உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் வாய்ப்பு, பொன் பொருள் சேர்க்கை, அரசு வழியில் உயர்வு, பலரை வழி நடத்தக் கூடிய வாய்ப்பு, குடும்பத்தில் சுபகாரியங்கள் நடை பெறும் அமைப்பு உண்டாகும்.

குரு பலவீனமாக இருந்தால் பகைவரால் தொல்லை, பண நஷ்டம், தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்க கூடிய நிலை, மனைவி பிள்ளைகளிடம் ஒற்றுமை குறைவு, கொடுக்கல்-வாங்கலில் பிரச்சனை, வயிறு பாதிப்பு போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

குரு தசா-சனி புத்தி பலன்கள்

குரு தசாவில்(Guru Dasa) சனி புத்தி ஆனது 2 வருடம் 6 மாதம் 12 நாட்கள் நடைபெறும்

சனி பலம் பெற்று இருந்தால் தன தானியம் பெருகும்.இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் அதிக லாபம் கிட்டும். சேமிப்பு பெருகும். அரசு வழியில் உயர்வான பதவிகளை அடைய முடியும். வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு, சேமிப்பு உயரும் யோகம், அதிக வேலையாட்களை அமர்த்தி சிறப்பாக வேலை வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும்.

சனி பலவீனமாக இருந்தால் அரசு வழியில் தொல்லை, அபராதம் செலுத்தும் நிலை உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்து, வேலையாட்கள் மற்றும் நண்பர்களால் பிரச்சனைகளை சந்திக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

குரு தசா-புதன் புத்தி பலன்கள்

குரு தசாவில்(Guru Dasa) புதன் புக்தியானது 2வருடம் 3மாதம் 6 நாட்கள் நடைபெறும்

புதன் பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஈடுபாடு, கணக்கு, கம்ப்யூட்டர் துறையில் நாட்டம், ஆடை ஆபரண சேர்க்கை, நல்ல வித்தைகளை கற்று தேறும் அமைப்பு, தொழில்-வியாபாரம் உத்தியோகத்தில் உயர்வு, குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூட கூடிய அமைப்பு போன்ற நற்பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும்.

புதன் பலவீனமாக இருந்தால் கல்வியில் மந்த நிலை, ஞாபக சக்தி குறைவு, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் உடல்நிலை பாதிப்பு, குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள், மனைவி பிள்ளைகளைக் இடையே கருத்து வேறுபாடு, தாய் மாமன் வழியில் விரோதம், செல்வம் செல்வாக்கு குறைவு போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

குரு தசா

குரு தசா-கேது புத்தி பலன்கள்

குரு தசாவில்(Guru Dasa) கேது புக்தியானது 11 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.

கேது நின்ற வீட்டதிபதி பலமாக இருந்தால் நல்ல புகழ், பெயர், கௌரவம் உண்டாகும். தன தான்ய லாபங்கள் கிட்டும். ஆடை ஆபரண சேர்க்கை, உறவினர்களின் உதவி, மந்திரங்கள், யாகம், ஹோமம் கற்பது செய்வது போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். எடுக்கும் காரியங்களில் நற்பலன்கள் ஏற்படும்.

கேது நின்ற வீட்டதிபதி பலவீனமாக இருந்தால் பயம், கல்வியில் மந்தநிலை, வம்பு வழக்குகளில் தோல்வி, இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவு, எடுக்கும் காரியங்களில் தடை, இடம் விட்டு இடம் போகக்கூடிய சூழ்நிலை, வாழ்வில் நிறைய அவமானங்கள் ஏற்படக்கூடிய நிலை, எதிர்பாராத விபத்துக்களில் சிக்கும் நிலை, கருச்சிதைவு, கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

குரு தசா-சுக்கிர புத்தி பலன்கள்

குரு தசாவில்(Guru Dasa) சுக்கிர புக்தியானது 2வருடம் 8 மாதங்கள் நடைபெறும்.

சுக்கிரன் பலமாக இருந்தால் குடும்பத்தில் சுபிட்சம் ,பூரிப்பு, சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, சுகவாழ்வு, பொன் பொருள், ஆடை ஆபரணம், வண்டி வாகன சேர்க்கை, சொகுசான வீடு, அலங்காரப் பொருள்கள் யாவும் அமையும், உத்தியோகம்,தொழில்-வியாபாரம் போன்றவற்றில் உயர்வு, அரசு வழியில் கௌரவங்கள் உண்டாகும். உடல் நலமும் சுறுசுறுப்பாக இருக்கும்

சுக்கிரன் பலவீனமாக இருந்தால் உடல்நலக்குறைவு, மர்ம உறுப்புகளில் நோய், பணவிரயம், வறுமை, கணவன் மனைவியிடையே இல்லற வாழ்வில் ஒற்றுமை குறைவு, பெண்களால் அவமானம் உண்டாகும். பொன் பொருளை இழக்க நேரிடும்.

குரு தசா-சூரிய புத்தி பலன்கள்

குரு தசாவில்(Guru Dasa) சூரிய புக்தியானது 9 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.

சூரியன் பலமாக இருந்தால் பெற்ற தந்தை, தந்தை வழி உறவுகளால் அனுகூலம், மனைவி பிள்ளைகளால் உயர்வு, ஆடை ஆபரண சேர்க்கை, நல்ல பூமி, மனை, வீடு, வண்டி வாகன யோகங்கள், திருமண சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திசாலித்தனம், நினைத்ததை முடிக்கும் ஆற்றல், ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும்.

சூரியன் பலவீனமாக இருந்தால் குழந்தைகளுக்கு தோஷம், பணவிரயம், உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்பு, கண்களில் பாதிப்பு, இடம் விட்டு இடம் போக கூடிய சூழல், தந்தைக்கு தோஷம், தந்தையிடம் விரோதம், அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.

குரு தசா

குரு தசா-சந்திர புத்தி பலன்கள்

குரு தசாவில்(Guru Dasa) சந்திரபுத்தியானது 1 வருடம் 4 மாதங்கள் நடைபெறும்.

சந்திரன் பலம் பெற்று இருந்தால் அரசாங்க வழியில் அனுகூலம், பெயர் புகழ் செல்வம் செல்வாக்கு உயரக் கூடிய யோகம், வீடு, மனை, வண்டி வாகன யோகங்கள், குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, உயர்தரமான உணவுகளை உண்ணும் அமைப்பு, கடல்கடந்து பயணம் செய்யும் வாய்ப்பு-அவற்றால் அனுகூலங்கள் உண்டாகும்.

சந்திரன் பலவீனமாக இருந்தால் நீர் தொடர்புடைய பாதிப்புகள், பயணங்களால் அலைச்சல், டென்ஷன், தாய்க்கு தோஷம், தாய் வழி உறவுகளிடையே பகை, மனசஞ்சலம், குழப்பம், தன விரையம், தூக்கம், பெயர், புகழ், பாதிக்கக்கூடிய நிலை,ஊர்விட்டு ,நாடு விட்டு வெளியூர், வெளிநாடுகளில் அலைந்து திரிய வேண்டிய நிலை, சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும்.

குரு தசா-செவ்வாய் புத்தி பலன்கள்

குரு தசாவில்(Guru Dasa) செவ்வாய் புத்தி காலமானது 11 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.

செவ்வாய் பலமாக இருந்தால் பூமி, மனை போன்றவற்றால் சம்பாதிக்கும் அமைப்பு, வாங்கும் யோகம், அரசு அரசு சார்ந்த துறைகளில் உயர்வு, அதிகாரமிக்க பதவிகளை வகிக்கும் யோகம், உடன்பிறப்புகள் லாபம், தொழில் வியாபாரத்தில் மேன்மை, திருமண சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு, போன்ற நற்பலன்கள் அமையும்.

செவ்வாய் பலவீனமாக இருந்தால் பங்காளி மற்றும் உடன்பிறப்புகள் இடையே பகை, தேவையற்ற வம்பு வழக்கு, உடல்நலத்தில் பாதிப்பு, வெட்டுக்காயங்கள், வண்டி வாகனங்களால் விபத்து, சிறைதண்டனை, பெண்களால் ஆபத்து, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நிலை, கோபம் அதிகரிக்க கூடிய நிலை, அக்னியால் பாதிப்பு போன்றவை உண்டாகும்.

குரு தசா

குரு தசா-ராகு புத்தி பலன்கள்

குரு தசாவில்(Guru Dasa) ராகுபுத்தி ஆனது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.

ராகு பலம்பெற்று ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் சற்று நன்மை தீமை கலந்த பலன்களை அடைய முடியும். அரசு வழியில் சிறுசிறு சோதனைகளை சந்தித்தாலும் எதிர்பாராத திடீர் தன வரவுகளும் கொடுக்கும்.

ராகு பலவீனமாக இருந்தால் பகைவரால் பயம், எதிர்பாராத கலகம், உடல்நிலை பாதிப்பு, தோல்நோய்கள், மனதில் துக்கம், பண விரயங்கள் உண்டாகும்.

குருவுக்குரிய பரிகாரங்கள்:

  • வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை ஊற வைத்து மாலையாக கோர்த்து மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
  • ஐந்து முக ருத்ராட்சம் அணிவது, குரு எந்திரம் வைத்து வழிபாடு செய்வது, சர்க்கரை, நோட்டுப் புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை பிராமணர்களுக்கு தானம் செய்வது வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது உத்தமம்.
  • புஷ்பராக கல்லை மோதிரத்தில் பதித்து அணிவது நற்பலன்களைத் தரும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular